ஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Friday, January 21, 2011

ஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library

கணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில்
முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால்
உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு முக்கியமான
கோப்புகளையும் பாடல் மற்றும் வீடியோவையும் கொண்டு
இலவச Filelibrary ஒன்று உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_4764" align="aligncenter" width="376" caption="படம் 1"][/caption]

கூகுளில் சென்று தேடினாலும் சில நேரங்களில் நாம் எதிர்பார்த்த
கோப்பு கிடைக்காது இந்தப்பிரச்சினையை தீர்ப்பதற்காகவும்
ஆன்லைன் மூலம் நம்மிடம் இருக்கும் கோப்புகளை பிறருக்கு
பகிர்ந்து கொள்ளவும் உதவ ஒரு இலவச தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://fliiby.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எதைப்பற்றி
தகவல்கள் வேண்டுமோ அதை கொடுத்து டாக்குமெண்ட் அல்லது
ஆடியோ,வீடியோ அல்லது Zip போன்ற எந்த கோப்பு வகைகளில்
தேடவேண்டுமோ அதைக்கொடுத்து Search என்ற பொத்தானை
அழுத்த வேண்டும் உடன் வரும் திரையில் நாம் தேடிய
டாக்குமெண்ட் பல கிடைக்கிறது. மாணவர்களுக்கும் பிஸினஸ்
செய்யும் நண்பர்களுக்கும் முக்கிய டாக்குமெண்ட் மற்றும்
பிராஜெக்ட் ரிப்போர்ட் பற்றிய தகவல்களை இந்ததளத்தில்
பல கிடைக்கிறது.இது மட்டுமின்றி பிளாஷ் அனிமேசன்
கோப்புகளை கூட நாம் தேடி தரவிரக்கலாம். அனைத்து
துறையினருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.


வின்மணி சிந்தனை
யாரிடமும் உதவி கேட்பதில் தப்பில்லை ஆனால்
அடிமையாக மட்டும் தான் இருக்க கூடாது.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தன்னாட்சி இயக்கம் யாரால் தயாரிக்கப்பட்டது ?
2.அஸ்ஸாம் பீகார் மாநிலங்கள் எப்போது வங்காளத்தில்
  இருந்து  பிரிக்கப்பட்டது ? 
3.மனிதனின் உரிமைகள் என்ற நூலை எழுதியவர் யார் ?
4.சுதந்திர இந்தியாவின் பிறப்புரிமை என்று முழங்கியவர் யார் ?
5.ஜாலியன் வாலாபாக் படுகொலை எந்த வருடம் நடந்தது ?
6.மிகவும் குறைந்த அளவு உறுப்பினர்களை கொண்ட
மாநிலம் எது ?
7.’மே தின’ கொண்டாட்டம் வேண்டும் என்று வேண்டுகோள்
விடுத்தவர் யார்  ?
8.துணைக் குடியரசு தலைவர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் ?
9.இந்திய அரசியலில் முதல் சமபந்தி சாப்பாடு எப்போது
 நடைபெற்றது ?
10.தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கல்விச்சங்கம் தொடங்கப்பட்ட
 ஆண்டு ?
பதில்கள்:
1.திலகர்,அன்னிபெசண்ட் அம்மையார்,2.1912,3.தாமஸ் பெயின்,
4.பாலகங்காதர திலகர், 5.1919,6.அஸ்ஸாம் ,7.ஈ.வெ.ரா,
8.பாராளுமன்றத்தின் இரு சபை உறுப்பினர்களால்.
9.1920,நாக்பூர்,
10.1928.


இன்று ஜனவரி 22 
பெயர் : விக்டோரியா ,
மறைந்த தேதி : ஜனவரி 22, 1901

இந்தியாவின் முதல் பேரரசியாக 1876
மே 1 ஆம் நாள் முதலும் இறக்கும்
வரையில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலம்
63 ஆண்டுகளும் 7 மாதங்கள். இது இதுவரை
பிரிட்டனை ஆண்ட எவரது ஆட்சிக் காலத்தையும் விட அதிகம்
ஆகும். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட
ஒரு காலப்பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

9 comments:

  1. wow! very useful! Thank you very much sir!

    ReplyDelete
  2. புதுமையான தளமொன்றை பகிர்ந்தமைக்கு நன்றி. மென்மேலும் சிறப்பான தகவல்களை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. @ எஸ். கே
    மிக்க நன்றி

    ReplyDelete
  4. @ Speed Master
    மிக்க நன்றி

    ReplyDelete
  5. @ jiyathahamed
    மிக்க நன்றி

    ReplyDelete
  6. பல புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன் நன்றி வின்மணி

    ReplyDelete
  7. @ ♠புதுவை சிவா♠
    மிக்க நன்றி

    ReplyDelete
  8. ஐயா இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகம் pdf file ஆக கிடைக்குமா ?? ஐயா!!

    ReplyDelete

Post Top Ad