Adsense

மனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி
இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனைத்தையும் ஒரே
இடத்தில் இருந்து எளிதாக தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

[caption id="attachment_4751" align="aligncenter" width="360" caption="படம் 1"][/caption]

இசையின் ஒவ்வொரு பரிமாற்றமும் காலத்தின் வேகத்துக்கு ஏற்றபடி
மாறிக்கொண்டே தான் இருக்கிறது,  என்னதான் இசையின் வளர்ச்சி
வேகமாக வளர்ந்தாலும் இன்றும் இயற்கையை ரசித்தபடி கூவும்
கூயில், மயில் போன்ற பல வகையான உயிரினங்களின் சத்தத்தை
கேட்பதில் தனி சுகம் தான். இப்படி கிடைக்கும் பலவகையான ஒலியை
எளிதாக தரவிரக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.findsounds.com/types.html

இந்தத்தளத்திற்கு சென்று நமக்கு படம் 1-ல் காட்டியபடி எந்த ஒலி
தேவையோ அதை தட்டச்சு செய்து Search என்ற பொத்தானை
சொடுக்கி தேடலாம், ஒன்றல்ல இரண்டல்ல 20 லட்சம் வித்தியாசமன
ஒலிகள் இந்தத்தளத்தில் இடம் பெற்றுள்ளது.  எந்த பார்ஃமெட் -ல்
தேவையோ அதை தேர்ந்தெடுத்து தரவிரக்கலாம். அழகான
இயற்கையின் ஒலியை கேட்க விரும்பும் நம்மவர்களுக்கும்
இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.வின்மணி சிந்தனை
வெற்றி பெரும் வரை விடாது முயற்சிப்பவன்
ஒரு போதும் தோற்பதில்லை.TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்திய அரசியலமைப்பு எந்த கொள்கையின் அடிப்படையில்
உருவாக்கப்பட்டது ? 
2.கூட்டாச்சி பண்பு என்ன ?
3.மேல் சபை உறுப்பினரின் பதிவிக்கலாம்  ?
4.மத்திய அரசிடம் எத்தனை அதிகாரங்கள் உள்ளது ?
5.இந்தியாவில் இயங்கும் இரண்டு அரசுகள் எவை ?
6.சுரண்டலுக்கு எதிரான உரிமைப்பற்றி எந்தப்பிரிவு கூறுகிறது?
7.அவசரச்சட்டங்கள் பாராளுமன்றம் ஆரம்பித்த எத்தனை
நாட்கள் நடைமுறையில் இருக்கும் ?
8.இந்திய அரசியலமைப்பு சட்டம் கடந்த 22 ஆண்டுகளில்
எத்தனை முறை திருத்தப்பட்டது ?
9.உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது என்ன ?
10.மாநில அரசிடம் எத்தனை அதிகாரங்கள் உள்ளது ?
பதில்கள்:
1.மக்களின் இறையாமை,2.சமபிரதிநிதித்துவம்,3.6 ஆண்டுகள்,
4.97, 5.மத்தியஅரசு , மாநிலஅரசு,6. 23 , 24 வது பிரிவு,
7.6 வாரங்கள்,  8.26 முறை. 9.62, 10.66.இன்று ஜனவரி 21 
பெயர் : விளாடிமிர் லெனின்,
மறைந்த தேதி : ஜனவரி 21, 1924
ரஷ்யப் புரட்சியாளர்,போல்செவிக் கட்சியின்
தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல்
அதிபரும் ஆவார்.லெனின் பெத்ரோகிராடில்
ஏழைத் தொழிலாளர்களுக்கான வழக்குகளையே
நடத்தினார். பெரும்பாலும் அவை இலவசமாகவே இருந்தன.
என்றும் மக்களின் மகத்தான தலைவர் லெனின்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Advertisement

6 comments:

 1. very very useful! Thank your very much!

  ReplyDelete
 2. Thanks winmani

  can I use this sound as a cell phone ring tone ?

  ReplyDelete
 3. @ எஸ். கே
  மிக்க நன்றி

  ReplyDelete
 4. @ ♠புதுவை சிவா♠
  பயன்படுத்தால்ம் நண்பரே..
  மிக்க நன்றி

  ReplyDelete
 5. @ Arafath
  மிக்க நன்றி

  ReplyDelete

 
Top