கூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Friday, January 28, 2011

கூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.

கூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில்
தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும்
நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.எதையும் எளிமையாகவும் திறம்பட செய்வதிலும் நாங்கள் தான்
வல்லவர்கள் என்று மறுபடியும் ஒரு முறை நம் அனைவரையும்
சொல்ல வைத்திருக்கிறது கூகிள். புதிதாக இணையதளங்கள்
உருவாக்குபவர்கள் கணினியில் தங்கள் தளம் தெரிவதற்கும்
மொபைலில் தெரிவதற்கும் தனித் தனியாகதான் உருவாக்கி
கொண்டு தான் இருக்கின்றனர், பல நிறுவனங்களும் இதற்கு
போட்டியாக உங்கள் இணையதங்களை மொபைலில் பார்க்க
சரியாக தெரியும்படி உருவாக்கி கொடுக்கிறோம் என்று சொல்லி
கட்டணம் வசூலிக்கின்றனர். இந்தப்பிரச்சினையை வித்தியாசமான
கோணத்தில் கூகுள் கையாண்டுள்ளது ஆம் உங்கள் தளங்களை
மட்டும் கொடுங்கள் நாங்களே அதை மொபைலுக்கு தக்கபடி
காட்டுகிறோம் யாரும் செய்யாத ஒரு புது முயற்சி தானே,

சில தளங்கள் நாங்களும் மொபைலில் தெரியவைக்கிறோம்
என்று சொல்லி நமக்கே நம் தளத்தை பார்க்க விருப்பம் இல்லாத
அளவிற்கு எழுத்தைப் பிச்சி வீசி விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் கூகுள் தற்போது சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தி
இருக்கும் இந்தத்தளத்தில் சென்று நம் தளம் அல்லது நாம் பார்க்க
விரும்பும் எந்ததளத்தையும் அதன் முகவரி கொடுத்து Go என்ற
பொத்தானை சொடுக்கி நம் மொபைலில் அழகாக பார்க்கலாம், படம்
வேண்டாம் என்றால் Hide images என்ற கட்டத்தை சொடுக்கிவிட்டு
எழுத்தை மட்டும் பார்க்கலாம்.

முகவரி : http://google.com/gwt/nவின்மணி சிந்தனை
ஒழுங்காக விரதங்களை கடைபிடிப்பவர்கள் உடலில்
நோய் வருவது இல்லை.TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.முகலாயர்கள் பயன்படுத்திய நாணயம் எது ?
2.இந்தியாவை தாய்க்கு சமமாக மதித்தவர் யார் ?
3.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைமையிடம்
 எங்குள்ளது ?
4.முதல் காங்கிரஸ் மாநாடு யார் தலைமையில் நடந்தது ?
5.சிவாஜியின் ஆன்மிகக் குரு யார் ?
6.சுயராஜ்ய கட்சி என்பதை நிறுவியவர் யார் ?
7.பத்திரிகைகளின் கட்டுப்பாட்டை நீக்கியவர் யார் ?
8.துணைப்படை திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார் ?
9.I.N.A -வைத் தோற்றுவித்தவர் யார் ?
10.முதல் நிதிவாரியம் எங்கு அமைக்கப்பட்டது ?
பதில்கள்:
1.தாம், 2.பாரதியார்,3.பெங்களூர்,4.W.V.பானர்ஜி,
5.துக்காராம்,  6.C.R.தாஸ், 7.சார்லஸ் மெட்காஃப்,
8.வெல்லெஸ்ஸி பிரபு, 9.நேதாஜி, 10.கொல்கத்தா.இன்று ஜனவரி 28 
பெயர் : ராஜா ராமண்ணா
பிறந்த தேதி : ஜனவரி 28, 1925
கர்நாடகா மாநிலத்தில் தும்கூரில் பிறந்தவர்.
பாம்பே, பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின்
ஆணையாளராக எட்டாண்டுகள் பணியாற்றினார்.
பெங்களூர் இந்திய விஞ்ஞானக் கழகத்தின்
ஆணைக்
குழுத் தலைவர் ஆகவும், ஜவஹர்லால் நேரு
முற்போக்கு விஞ்ஞான ஆய்வு மையம், இந்திய விஞ்ஞானப்
பள்ளித் துறை மற்றும் இந்தியப்
பொறியியல் துறைக்கூடம்
ஆகியவற்றின் அதிபராகவும்
ராமண்ணா பணியாற்றினார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

4 comments:

  1. நல்ல தகவல் நன்றி சார்!

    ReplyDelete
  2. ithula appidiya url copy panni short panni mobile site nu sollidalam.
    Thanx sir

    ReplyDelete

Post Top Ad