Suthanthira-menporul டாப் 4 – இன்ஃப்ரா ரெக்காடர் இலவச மென்பொருள். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, December 29, 2010

Suthanthira-menporul டாப் 4 – இன்ஃப்ரா ரெக்காடர் இலவச மென்பொருள்.

சிடி(CD) மற்றும் டிவிடி(DVD) டிஸ்க் போன்றவற்றில் தகவல்களை
பதிந்து கொள்ள பெரும்பாலன மக்கள் பயன்படுத்தும் Nero
மென்பொருளுக்கு இணையாக ஒரு இலவச மென்பொருள் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



Secondary storage device என்று சொல்லப்படும் சிடி மற்றும்
டிவிடி டிஸ்குகள் மீது தகவல்களை எளிதாக பதிந்து கொள்வதற்கு
வசதியாகவும், அதிக பிழைச்செய்தி கூறாமலும் பயன்படுத்துவதற்கு
எளிதாகவும் உள்ளவாறு ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
மென்பொருளின் பெயர் இன்ஃப்ரா ரெக்காடர் (InfraRecorder)
அனைத்துவிதமான CD மற்றும் DVD Format-க்கும் துணை
செய்கிறது.Multi-session disc மற்றும் dual-layer DVD போன்றவற்றிகும்
ஆடியோ சிடி,  ISO , BIN/CUE , போன்ற அத்தனை வகைகளுக்கும்
துணைபுரியும் வகையில் இருக்கிறது. drag and drops முறையில்
எளிதாக தகவல்களை தேர்ந்தெடுக்கலாம். சில சமயங்களில் CD
அல்லது DVD க்களில் Read பிரச்சினை இருந்தாலும் நாம் இந்த
மென்பொருளை பயன்படுத்தி மற்றொரு டிஸ்கிற்கு தகவல்களை
மாற்றிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. கண்டிப்பாக இந்த
இலவச மென்பொருள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Download என்பதை சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்
கொள்ளவும்.
Download




வின்மணி சிந்தனை
மதிப்பும் மரியாதையும் சிறியவர்களிடத்தில் சொல்லியும்
வாழ்ந்தும் காட்டுபவர்கள் உயர்ந்தவர்கள்.



TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உலகிலேயே மிகப்பெரிய பள்ளிக்கூடம் எங்குள்ளது ?
2.அமெரிக்க தேசியக்கொடியில் உள்ள நட்சத்திரங்கள் எத்தனை ?
3.இத்தாலியின் தலைநகர் எது ?
4.பாலில் என்ன வைட்டமின் இருக்கிறது ?
5.இங்கிலாந்து நாட்டை குறிக்கும் மலர் எது ?
6.வெண்கலம் எதனால் செய்யப்படுகிறது ?
7.சிசிலித்தீவு எந்த நாட்டை சேர்ந்தது ?
8.ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் எங்கே செய்யப்படுகின்றன ?
9.மிகப் பழைய தேசியக்கொடியை உடைய நாடு எது ?
10.பூமியைச் சுற்ற சந்திரனுக்கு எத்தனை நாட்கள் ஆகிறது ?
பதில்கள்:
1.நீயூயார்க்-ல் உள்ளது, 2.50,3.ரோம்,4.வைட்டமின் A,
5.ரோஜா,6.தாமிரம்,வெள்ளீயம்,7.இத்தாலி,8.டெல்பியில்.
9.டென்மார்க், 10.291/2 நாட்கள்.



இன்று டிசம்பர் 30 
பெயர் : இரமண மகரிஷி
பிறந்த தேதி : டிசம்பர் 30, 1879

தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஆவார்.
அத்வைத வேதாந்த நெறியை போதித்த இவர்
திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். இங்கு
அமைந்துள்ள, 'ரமண ஆசிரமம்', உலகப் புகழ்
பெற்றதாகும். இன்றளவும், ஆன்ம முன்னேற்றம் பெற
உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பலர் அன்றாடம்
இரமணாசரமத்தினை நாடி வந்த வண்ணம் உள்ளனர்.
உங்களால் நம் தேசத்துக்கு பெருமை.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

15 comments:

  1. THANKS THANKS THANKS .

    ----THOTAVASU

    ReplyDelete
  2. பிரதிபலன் பார்க்காமல் மென்பொருள் தயாரிப்பவர்களைப் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது.பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  3. @ b.srinivasan
    மிக்க நன்றி

    ReplyDelete
  4. @ salemdeva
    மிக்க நன்றி

    ReplyDelete
  5. பயனுடையதாக உள்ளது! நன்றி!

    ReplyDelete
  6. அறிமுகத்திற்கு நன்றி

    ReplyDelete
  7. நண்பரே பாடலில் இருந்து இசையை மட்டும் பிரித்து எடுக்கும் மென்பொருள் ஏதாவது இருக்கிறாதா ??..

    ReplyDelete
  8. @ எஸ்.கே
    மிக்க நன்றி

    ReplyDelete
  9. @ ♠புதுவை சிவா♠
    மிக்க நன்றி

    ReplyDelete
  10. @ கேப்டன் டைகர்
    விரைவில் தெரியப்படுத்துகிறோம்.
    நன்றி

    ReplyDelete
  11. Hi,

    In My system can able to read and write any CD but it can read and write the DVD . I don't know how this is happen, please give any idea or suggestion to solve this problem

    ReplyDelete
  12. @ karuppasamy
    சிடி டைரட்டர் தற்போது தங்களிடம் இருக்கிறது, இதை வைத்து DVD படிக்கவும்
    எழுதவும் முடியாது. DVD R/W தற்போது கணினி கடைகளில் கிடைக்கும் வாங்கி
    பயன்படுத்துங்கள்.

    ReplyDelete

Post Top Ad