நம் கணினியில் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைக்கும் தீர்வு - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, December 13, 2010

நம் கணினியில் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைக்கும் தீர்வு

சில நேரங்களில் நம் கணினியில் ஏதாவது மென்பொருள் அல்லது
விளையாட்டு நிறுவி விட்டு அடுத்த முறை கணினியை திறந்ததும்
ஏதோ DLL கோப்பு Missing என்று செய்தி வரும்.  இது போன்ற
பிழை செய்திகளுக்கு எளிய முறையில் தீர்வு காணலாம் இதைப்
பற்றித் தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_4312" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

 

Dynamic-link library என்று சொல்லக்கூடிய DLL கோப்புகள் விண்டோஸ்
இயங்குதளத்திற்கு மிக முக்கியமானது என்றே சொல்லலாம்.
இப்படி முக்கியமான DLL கோப்புகள் பல நேரங்களில் கணினி
எதிர்பாராமல் Shutdown  செய்வதாலும் புதிதாக நாம் நிறுவும்
மென்பொருள் பழைய DLL கோப்பை மாற்றிவிடுவதனாலும்
பிழைச் செய்தியை காட்டுகிறது. இது போன்ற பிரச்சினைக்காக நாம்
விண்டோஸ் மறுபடியும் இண்ஸ்டால் செய்யத் தேவையில்லை.
எந்த DLL கோப்பு இல்லை என்று செய்திவருகிறதோ அந்த DLL
கோப்பை தரவிரக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி :http://www.dll-files.com

இந்ததளத்திற்கு சென்று எந்த DLL கோப்பு இல்லை என்று செய்தி
வருகிறதோ அந்த கோப்பின் பெயரை படம் 1-ல் இருப்பது போல்
இருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து Search என்ற பொத்தானை
அழுத்த வேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் தேடிய DLL
கோப்பு இருக்கும். எந்த பயனாளர் கணக்கும் இல்லாமல் எளிதாக
தரவிரக்கலாம். தரவிரக்கிய DLL கோப்பை நம் கணியில் எப்படி
நிறுவ வேண்டும் என்றும் சொல்லிக்கொடுக்கின்றனர்.கணினி
வைத்திருக்கும் நம் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.



வின்மணி சிந்தனை
எல்லா பெரிய பிரச்சினைகளுக்கும் எளிய வழி நம் பக்கத்திலே
இருக்கிறது அதை அமைதியாக யோசித்து அறியலாம்.



TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உலகிலேயே மிக நீளமாக கடற்கரை எது ?
2.விக்ரம் சாராபாய் அறிவியல் மையம் எங்குள்ளது ?
3.புள்ளிவிபர ஆய்வை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார்?
4.எண் கணித மேதை எனப்புகழப்பட்டவர் யார் ?
5.மிகவும் பழமையான வேதம் எது ?
6.புத்தர் போதித்த மொழி எந்த மொழி ?
7.ஆங்கிலேய கால்வாயை கடந்த இந்திய பெண்மணி யார் ?
8.திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் ?
9.தியாகிகள் நினைவு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?
10.வைக்கம் வீரர் என அழைக்கப்படுபவர் யார் ?
பதில்கள்:
1.சென்னை-மெரீனா கடற்கரை,2.திருவனந்தபுரம்,
3.மகலாநாபிஸ்,
4.இராமானுஜம்ர், 5.ரிக் வேதம்,
6.மகாதிமொழி, 7.ஆர்த்தி சாகா,
8.ஜி.யு.போப்,
9.ஜனவரி 30, 10.பெரியார்.



இன்று டிசம்பர் 14 
பெயர் : நோஸ்ராடாமஸ் ,
பிறந்த தேதி : டிசம்பர் 14, 1503
இலத்தீன் பெயரான மைகெல் டி நோஸ்ரடேம்,
மூலம் அழைக்கப்பட்ட நோஸ்ராடாமஸ் உலகின்
சிறந்த குறி சொல்லும் பதிப்பாளர்களில்
ஒருவராகத் திகழ்பவர்.இவரது படைப்பான "லெஸ்
புரோபெடீஸ்" மூலம் நன்கு அறியப்பட்டார். உலகில்
நடைபெற்ற, நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் மற்றும்
பல சம்பவங்களில் முக்கியமானவற்றை அன்றைய
காலகட்டங்களிலேயே எழுதியவராக அனைவராலும்
அறியப்படுகின்றார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

9 comments:

  1. மிக்க மிக்க நன்றி சார்! மிகவும் பயனுள்ள தகவல்!

    ReplyDelete
  2. @ எஸ்.கே
    மிக்க நன்றி

    ReplyDelete
  3. @ ♠புதுவை சிவா♠
    மிக்க நன்றி

    ReplyDelete
  4. @ Siva
    மிக்க நன்றி

    ReplyDelete
  5. Dear Sir

    IT IS VERY MUCH USEFUL TO ALL, ESPECIALLY WHO LOVING & WORKING COMPUTERS WITH DAY-TODAY WORK.

    THANKS A LOT!

    'navodaya' SENTHIL - PUDUCHERRY

    ReplyDelete

Post Top Ad