உலகத்தில் இருக்கும் டாப் உணவுப் பண்டங்கள் செய்ய சொல்லிக்கொடுக்கும் குக்ஸ்டார். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, December 14, 2010

உலகத்தில் இருக்கும் டாப் உணவுப் பண்டங்கள் செய்ய சொல்லிக்கொடுக்கும் குக்ஸ்டார்.

நம் வீட்டு திருமண நிகழ்ச்சி முதல் திருவிழா,பண்டிகை கால நிகழ்ச்சிகள்
வரை அனைத்திற்கும் எந்த வகையான உணவு வகை சரியானதாக
இருக்கும் என்றும். உலகத்தில் எங்கெல்லாம் புதிய வகையான உணவு
மற்றும் திண்பண்டங்கள் வந்துள்ளது என்றும் அதை எப்படி செய்ய
வேண்டும் என்று சொல்லிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.உலகத்தில் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்ற உணவு வகைகள்
என்ன என்பதையும் உலகத்தில் இருக்கும் டாப் சமையல்காரர்கள்
அதன் செய்முறையையும் எளிதாக சொல்லி நம்மையும் சமையல்
கலையில் வல்லுனராக மாற்ற உதவுகின்றனர்.

இணையதள முகவரி : http://www.cookstr.com

இந்ததளத்திற்கு சென்று நாம் சமையில் கலையில் கைதேர்ந்த
சமையல்காரரிடம் இருந்து உணவு மற்றும் திண்பண்டங்கள்
சமைக்கும் முறையை அறிந்துகொள்ளலாம். நாம் அருந்தும்
தேநீரில் இருந்து கேக் , பப்ஸ் அனைத்தும் எந்த பதத்தில்
செய்தால் நன்றாக இருக்கும் , இதைச் செய்ய எவ்வளவு நேரம்,
எவ்வளவு பணம் செலவு ஆகும் என்று துல்லியமாக சொல்கிறது.
இந்ததளத்தில் சென்று நமக்கு நன்றாக வரும் உணவு முறையை
மற்றவரிடமும் எளிதாக பகிர்ந்துகொள்ளலாம். சமையல் செய்தால்
மட்டும் போதுமா அதை எப்படி அலங்கரிங்க வேண்டும் என்றும்
சொல்லிக்கொடுக்கிறது.கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடத்திற்கு
பலவகையான கேக் வகைகள் செய்ய விரும்பும் நபர்களுக்கு
இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.


வின்மணி சிந்தனை
நேர்மையும் உண்மையும் இருக்கும் மனிதருக்கு வெற்றி
கிடைக்க தாமதம் ஆனாலும் கிடைக்கும் வெற்றி மிகப்
பெரியதாக இருக்கும்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.கெளரவர்களில் ஆண்கள் எத்தனை பேர் ?
2.ஆசியாவின் மிகப்பெரிய பூங்கா எங்குள்ளது ?
3.ஆரியப்பட்டா நூலில் எத்தனை பாடல்கள் எழுதப்பட்டுள்ளது ?
4.திரைப்படத்திற்கு தேசிய விருது எந்த ஆண்டு முதல்
வழங்கப்படுகிறது ?
5.இந்தியாவின் முதல் தலைமைத் தேர்தல் அதிகாரி யார் ?
6.இந்தியாவின் முதல் துனைப்பிரதமர் யார் ?
7.தீண்டாமை ஒழித்த பிரிவு எது ?
8.”ஜாலியன் வாலாபாக்” எந்த மாநிலத்தில் உள்ளது ?
9.யூகிலிப்டஸ் மரத்தின் தாயகன் எந்த நாடு ?
10.இந்தியாவின் முதல் பெண் கவிஞர் யார் ?
பதில்கள்:
1.99 பேர்,2.கல்கத்தா,3.121 பாடல்கள், 4.1964,
5.சுகுமார் சென்,6.வல்லபாய் படேல், 7.பிரிவு 17,
8.பஞ்சாப், 9.ஆஸ்திரேலியா, 10.ஓளவையார்.


இன்று டிசம்பர் 15 
பெயர் : சர்தார் வல்லப்பாய் படேல் ,
மறைந்த தேதி : டிசம்பர் 15, 1950
இந்திய விடுதலைப் போராட்ட வீரர். குஜராத்
மாநிலத்தில் பிறந்து அம்மாநிலத்திலே
வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு
எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார்.
இந்திய தேசிய காங்கிரஸ்-ல் ஒரு தலைவராக இருந்து
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக
இருந்தார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று
அழைக்கப்படுகிறார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

2 comments:

 1. OM OM OM
  YOUR ARE DOING GOOD WORK IN YOUR SPARE TIME . I WANT TO TYPE IN TAMIL .BUT I AM UNABLE TO DO IT. OK . SOME TIME ERROR REPORT COMING BUT I CLOSE IT. WHEN I SAW YOUR ARTICLE SOORYAKANNAN I UNDER STAND SOME ONE ASS MY COMPUTER OR MAIL OR WHAT I STORED . BUT I AM ONLE SAW THE MAILS AND SURCH UPTATE ALL NEWS . I LICK SCINCE ,IT ,ASTROLOGY ,SPIRITUAL NEWS ETC ,,.I WANT A GOOD ANTIVIRUS. MALWARE , TROJAN REMOVER ETC . I WANT PROCT MY COMPUTER BY ALL MEENS. PLEASE HELP ME IN THIS MATTER .MY AGE IS 63 .I WANT YEARN THROUGH NET IS POSSIBLE ? HELP ME PLEASE .

  ReplyDelete
 2. @ b.srinivasan
  நண்பருக்கு ,
  கணினி பற்றியும் இணையமும் பற்றி கற்றுக்கொள்வதற்கு வயது ஒரு தடையல்ல.
  முயற்சி மட்டும் இருக்குமானால் அடுத்த மாதமே நீங்கள் ஒரு தலைசிறந்த பிளாக்கர்
  ஆகலாம். கணினியில் புதியவர்களுக்காக விரைவில் ஒரு பதிவு தொடங்க இருக்கிறோம். பிளாஷ் கோப்பு துணை புரியாத காரணத்தால் அதை வெளீயீட தாமதமாகிறது. இறைவன் அருளும் நம் நண்பர்களின் அன்பும் இருக்குமானால் விரைவில் வெளிவரும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
  மிக்க நன்றி.

  ReplyDelete

Post Top Ad