உண்மைக் கதைகள் மூலம் ஆங்கிலம் கற்றுதரும் புதுமையான தளம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, December 15, 2010

உண்மைக் கதைகள் மூலம் ஆங்கிலம் கற்றுதரும் புதுமையான தளம்.

ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டுமானால் அதற்கான ஆங்கில
புத்தகஙகளை வாங்கி படித்த காலமெல்லாம் மாறி இப்போது
பிரபலமானவர்களின் வாழ்க்கை அனுபவத்தையே நமக்கு
பாடமாக சொல்லிக்கொடுத்து நமக்கு இருக்கும் ஆங்கில அறிவை
மேலும் வளர்க்கின்றனர் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



ஆங்கிலப்பத்திரிகை வாங்கி படியுங்கள் உங்களுக்கு ஆங்கில அறிவு
வளரும் என்று சொல்லும் அதே டெக்னிக் தான் ஆனால் சற்று
வித்தியாசமாக ஒரு புதுமையை இங்கு கையாண்டுள்ளனர்.
பிரபலமானவர்களின் வாழ்க்கை அனுபவத்தை எளிய ஆங்கிலத்தில்
ஆங்கிலம் கற்பவர்களுக்கு புரியும்படி மாற்றியுள்ளனர். இது மட்டும்
இல்லாமல் விளையாட்டு, பொழுதுபோக்கு,மொபைல் அப்ளிகேசன்
என பலதுறை வழியாகவும் நமக்கு ஆங்கிலத்தை வளர்க்க  நமக்கு
இந்தத்தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://voxy.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் நம் இமெயில் முகவரியை கொடுத்து
தினமும் ஆங்கில வார்த்தையையும், எளிய ஆங்கிலத்தில்
பிரபலமானவர்களின் அனுபவக்கதைகளையும் பெறலாம்.
இந்ததளத்தில் Stories , Life Skills, Games , Mobile App போன்றவறில்
எதன் மூலம் ஆங்கிலம் கற்றுக்கொள்ள விருப்பமோ அதன் மூலம்
கற்றுக்கொள்ளலாம். இதைத்தவிர குவிஸ் , வார்த்தை பேங்க்
போன்றவற்றின் மூலமும் எளிதாக கற்றுக்கொள்ளலாம். ஆங்கிலம்
கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்ததளம் பயனுள்ளதாக
இருக்கும்.



வின்மணி சிந்தனை
ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால்
உடனடியாக உதவி செய்ய வேண்டும்.



TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.சர்வதேச ஒலிம்பிக் விருதுபெற்ற முதல் இந்தியர் யார் ?
2.மிகவும் பழமையான எழுத்துக்கள் எது ?
3.முதன் முதலில் மின்சார கம்ப்யூட்டரை கண்டுபிடித்தவர் யார்?
4.ஆசியாவிலே மிகப்பெரிய சர்ச் இருக்கும் இடம் எது ?
5.ஜெட் என்ஜினை உருவாக்கியவர் யார் ?
6.இந்தோனேசியா சுதந்திரம் பெற்ற ஆண்டு என்ன ?
7.செஞ்சிலுவைச் சங்கம் எப்போது தொடங்கப்பட்டது ?
8.சூரியனை சுற்றிவரும் கிரகங்கள் மொத்தம் எத்தனை ?
9.இறக்கை இல்லாத பறவை எது ?
10.உலகில் மிகச்சிறிய கடல் எது ?
பதில்கள்:
1.பா.சிவந்தி ஆதித்தன்,2.சுமேரிய எழுத்துக்கள்,
3.ஜே.பி.எக்கர்ட், 4.கோவா, 5.ஹீரோ,6.1948, 7.1920,
8.ஒன்பது, 9.கிவி,10.ஆர்டிக்கடல்.

 
இன்று டிசம்பர் 16 
பெயர் : ஆர்தர் சி.கிளார்க் ,
பிறந்த தேதி : டிசம்பர் 16, 1917

பிரிட்டனின் அறிவியல் புதின எழுத்தாளரும்
கண்டுபிடிப்பாளரும் ஆவார். ஏறத்தாழ 100
புத்தகங்களுக்கு ஆசிரியரான இவர் அறிவியல்
பூர்வமான ஆதாரத்தையும் கோட்பாட்டையுமே
தமது எழுத்துத்துறைக்கு அதிகளவுக்கு பயன்படுத்தினார். நம்
உலகத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் மனிதரின் தலைவிதி
பரந்துள்ளது என்ற கருத்தை வலுவாக முன்னிறுத்தினார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

10 comments:

  1. நிஜமாவே ரொமப் உபயோகமான தளம். எப்படி உங்களுக்கு மட்டும் இதுலாம் தெரியுது தம்பி

    ReplyDelete
  2. @ அங்கிதா வர்மா
    எல்லாம் உங்களைப் போன்ற நம் நண்பர்களின் அன்பும் ஆசியும் கூடவே சிறு முயற்சியும்
    தான்.
    மிக்க நன்றி

    ReplyDelete
  3. உபயோகமான தளத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  4. @ சிவா
    மிக்க நன்றி

    ReplyDelete
  5. நம் தாய்மொழி தமிழாக இருந்தாலும் ஆங்கிலமும் அன்றாட நம் வாழ்வோடு தொடரக்கூடிய ஒன்றாகி விட்டது பயனுள்ள தள‌த்தை வழங்கிய வின்மணிக்கு என் நன்றிகள்

    ReplyDelete
  6. @ ♠புதுவை சிவா♠
    மிக்க நன்றி

    ReplyDelete
  7. தமிழ் கண் மாதிரி ஆங்கிலம் கண்ணாடி மாதிரி, கண் கொஞ்சம் மங்கலான கண்ணாடி அவசியம் தானே !

    சில பேர் கண்ணாடி போதும், கண்ணைப் பிடிங்கிவிட்லாமா என நினைக்கிறார்கள். இவ்வளவு பேசும் எனது தாய்மொழியே தமிழ் இல்லை. ஆனால் நான் தமிழை எனது தாயாக தத்தெடுத்துக் கொண்டேன்.

    ReplyDelete
  8. மிகவும் பயனுள்ள தளம்

    ReplyDelete

Post Top Ad