ஆன்லைன்-ல் வீடியோ டிக்ஸ்னரி புதுமையிலும் புதுமை - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, December 18, 2010

ஆன்லைன்-ல் வீடியோ டிக்ஸ்னரி புதுமையிலும் புதுமை

டிக்ஸ்னரி பற்றி நமக்கு தெரியும் அது என்ன வீடியோ டிக்ஸ்னரி
என்றால் ஆன்லைன் -ல் நாம் தேடும் வார்த்தைக்கான அர்த்தத்தை
வீடியோவுடன் காட்டுகின்றனர் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_4348" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

ஆன்லைன் மூலம் டிக்ஸ்னரி பயன்படுத்தி இருப்போம், ஒவ்வொரு
டிக்ஸ்னரியும் பல சிறப்புகளுடன் இருக்கும் ஆனால் இதைப்போல்
ஒரு டிக்ஸ்னரி இதுவரை வந்ததில்லை என்று கூறும் அளவிறகு
வித்தியாசமாக உள்ளது. அதாவது நாம் தேடும் வார்த்தைக்கான
அர்தத்தை வீடியோவுடன் சொல்கிறது. ஒருவார்த்தை அல்ல 76,000
வார்த்தைகள் மற்றும் 1,20,000 definitions கள் உள்ளது இதைத்தவிர
தினமும் பல வார்த்தைகளுக்காகன வீடியோ பதிவேற்றம்
செய்யப்படுகிறது.

இணையதள முகவரி : http://www.wordia.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி  Search the
visual Dictionary என்ற கட்டத்திற்குள் வார்த்தையை கொடுத்து
தேட வேண்டியது தான் அடுத்து வரும் திரையில் வார்த்தைக்கான
அர்த்தமும் அதனுடன் வீடியோவும் வரும்.இதைத்தவிர வார்த்தைக்கான
Games வசதியும் உள்ளது.தினமும் ஒரு வார்த்தைக்கான வீடியோவை
Latest word என்ற தலைப்பில் காட்டுகிறது. Top Videos என்பதை
சொடுக்கி பிரபலமான டிக்ஸ்னரி வீடியோவை பார்க்கலாம்.
வழக்கமான டிக்ஸ்னரி பயன்படுத்தும் நமக்கு இந்த ஆன்லைன்
வீடியோ டிக்ஸ்னரி சற்று புதுமையாகவே இருக்கும்.


வின்மணி சிந்தனை
நம்மிடம் மிஞ்சியதை ஒருவருக்கு கொடுப்பது தானம்
என்றாலும் அதை விட நமக்காக இருப்பதை கொடுப்பது
உயர்ந்தது.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.மலையேறுதல் விளையாட்டாக அறிமுகமான ஆண்டு எது ?
2.பரத நாட்டியம் தொடங்கப்பட்ட இடம் எது ?
3.இந்தியாவின் நீளமான நதி எது ?
4.சந்திரனில் மலைகள் இருப்பதை கண்டறிந்தவர் ?
5.தென்இந்திய நதிகளில் நீளமானது எது ?
6.ஆந்தையின் கண் பார்வை மனிதனின் கண்பார்வையை
விட எத்தனை மடங்கு அதிகம் ?
7.அமெரிக்காவின் தேசிய விளையாட்டு எது ?
8.இந்தியாவில் வெளிவந்த முதல் பேசும் படம் எது ?
9.இந்தியாவின் தேசிய மலர் எது ?
10.இந்தியாவின் முதல் பெண் பிரதமமந்திரி யார் ?
பதில்கள்:
1.1854,2.தமிழ்நாடு,3.கங்கை, 4.கலிலீயோ,
5.கோதாவரி,6.5 மடங்கு, 7.பேஸ்பால்,
8.ஆலம் ஆரா, 9.தாமரை,10.இந்திரா காந்தி.


இன்று டிசம்பர் 18 
பெயர் : ஸ்டீவன் ஸ்பில்பேர்க் ,
பிறந்த தேதி : டிசம்பர் 18, 1946
சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதினை
பெற்ற அமெரிக்கத் திரைப்பட இயக்குநர். சிறந்த
இயக்குனருக்கான ஆஸ்கார் விருதிற்காக ஆறு
முறை பரிந்துரைக்கப்பட்ட இவர் ஷிண்ட்லெர்ஸ்
லிஸ்ட் மற்றும் சேவிங் ப்ரைவேற் றையான் ஆகிய இரண்டு
திரைப்படங்களுக்கான சிறந்த இயக்குநர்
ஆஸ்கார்
விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

7 comments:

  1. புதுமையாக உள்ளது!

    ReplyDelete
  2. @ எஸ்.கே
    மிக்க நன்றி

    ReplyDelete
  3. TNPSC Q/A, pls check answer for 10.

    ReplyDelete
  4. @ mona
    திருத்தியாச்சு ,
    நன்றி

    ReplyDelete
  5. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா

    ReplyDelete
  6. @ மதிசுதா
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad