தளமாக சென்று தேடவேண்டாம் அனைத்து நாட்டின் தகவல்களையும்
கொண்டு ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
[caption id="attachment_4249" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]
விக்கிப்பீடியா மட்டுமல்ல அதைவிட பல அறிய தகவல்களையும், பல
வகையான Statistics ரிப்போர்ட்களையும், கூகுளில் சென்று தேடினாலும்
கிடைக்காத பல முக்கியமான தகவல்களையும் ஒரே இடத்தில் தந்து
நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://data.un.org
[caption id="attachment_4250" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]
இந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எந்த நாட்டின்
தகவல்களை அறிய வேண்டுமோ அந்த நாட்டின் பெயரைக் கொடுத்து
தேடவேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் தேடிய நாட்டின் மக்கள்
தொகை முதல் பல தரப்பட்ட தகவல்களையும் காட்டுகிறது.
இதைப்போல் தகவல்களை கொடுக்க பல தளங்கள் இருக்கிறது என்று
நாம் நினைத்தாலும் இந்ததளத்தின் சிறப்பு என்னவென்றால் 32 டேட்டா
பேஸ்களையும், 60 மில்லியன் ரெக்கார்ட்களையும் (32 databases -
60 million records) கொண்டு ஒரு தகவல் உலகமாகவே செயல்படுகிறது.
எந்த வகையான தகவல் வேண்டுமானலும் இந்ததளத்தில் சென்று
தேடலாம். அறிவைத் தேடும் பலருக்கும் இந்ததளம் பயனுள்ளதாக
இருக்கும்.
வின்மணி சிந்தனை
பொறாமை விட்டு விடா-முயற்சியை மேற்கொண்டால்
வெற்றி நமக்கு சொந்தமாகிவிடும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தேனீக்களுக்கு எத்தனை கண்கள் இருக்கின்றது ?
2.இந்தியாவில் சந்தனமரம் எந்த மாநிலத்தில் அதிகமாக
கிடைக்கிறது ?
3.முட்டையை அடைகாக்கும் ஒரே ஆண் பறவை எது ?
4.இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் நீர்ப்பகுதி எது ?
5.ஹாக்கி விளையாட்டில் முதன் முதலில் வெற்றி பெற்ற
நாடு எது ?
6.மிக உயரமான எரிமலை எது ?
7.கொசுக்களுக்கு எத்தனை பற்கள் உள்ளது ?
8.கழுதை ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்குகிறது ?
9.வெண்மை புரட்சி என்பது எதைக்குறிக்கிறது ?
10.நீலப்புரட்சி என்பது எதைக்குறிக்கிறது ?
பதில்கள்:
1.நான்கு,2.கர்நாடாகம்,3.நெருப்புக்கோழி, 4.பாக்ஜலசந்தி,
5.இங்கிலாந்து, 6.கேடபாக்சி, 7.47 பற்கள்,8.30 நிமிடம்,
9.பால் உற்பத்தி,10.மீன் வளர்ச்சி.
இன்று டிசம்பர் 8
பெயர் : ஜான் லெனன் ,
மறைந்த தேதி : டிசம்பர் 8, 1980
ஆங்கில பாடலாசிரியர்,பாடகர்,இசையமைப்பாளர்,
எழுத்தாளர், அமைதி பங்கேற்பாளர் ஆவார்.இவர்
உலகப்புகழ்பெற்ற த பீட்டல்ஸ்(The Beatles)
இசைக்குழுவை உருவாக்கியவர்களில் ஒருவர்
ஆவார்.இவரும் பீட்டில்ஸ் குழுவின் இன்னொரு உறுப்பினருமான
பௌல் மக்கார்ட்டினியும் சேர்ந்து எழுதி இசையமைத்த
பாடல்கள் உலகப்புகழ் பெற்றவை.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
ஐயா,
ReplyDeleteபுத்த மதம் குறித்த சில தகவல்களைப் பெற முயன்றேன். அது கிடைக்கவில்லை
தேவ்
@ r.devarajan
ReplyDeleteநண்பருக்கு , ஆம் மதங்கள் பற்றிய பல தகவல்கள் கிடைப்பதில்லை,
நன்றி