20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்லைன் ரேடியோக்களை ஒரே இடத்தில் இருந்து தேடலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, November 22, 2010

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்லைன் ரேடியோக்களை ஒரே இடத்தில் இருந்து தேடலாம்.

ஆன்லைன் ரேடியோ ஸ்டேசன்கள் உலக அளவில் பல இருக்கின்றது
இதில் சிறந்த ஒலிபரப்பையும் சட்ட விரோதமில்லாத ஒலிபரப்பை
கொடுக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேடியோ ஸ்டேசன்களை
நாம் ஆன்லைன் மூலம் எளிதாக தேடிப்பெறலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.



புத்தம் புது நிகழ்ச்சிகள், பழைய பாடல்கள், புதிய பாடல்கள் ,
நகைச்சுவை, தன்னம்பிக்கை வளர்க்கும் நிகழ்ச்சிகள் , மொழி மற்றும்
அறிவியல் நிகழ்ச்சிகள் என இன்னும் ரேடியோக்கு இருக்கும்
முக்கியத்துவம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.ஆன்லைன்
மூலம் நாம் இருக்கும் இடத்தில் இருந்து விரும்பிய ரேடியோ
நிகழ்சிகளை கேட்கலாம் இதற்காக ஒவ்வொரு ஆன்லைன்
ரேடியோ ஒலிபரப்பு முகவரியையும் தேடவேண்டாம் இருக்கும்
ஒரே இடத்தில் இருந்து அத்தனை ரேடியோ நிலையங்களின்
இணையமுகவரியையும் கொண்டு ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://onellama.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் அதிகமாக மக்கள் கேட்கும் ஆன்லைன்
ரேடியோ முகவரியை முதல் பக்கத்திலே கொடுக்கின்றனர். இதைத்தவிர
Location என்பதை சொடுக்கி எந்த நாட்டின் ரேடியோ நிகழ்சியை
கேட்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்தும் கேட்கலாம். Artist மற்றும்
Popularity மூலம் விரும்பிய நிகழ்சிகளையும் கேட்கலாம். இணைய
வானொலிப் பிரியர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.


வின்மணி சிந்தனை
பணத்தை எதிர்பார்த்து பழகும் நண்பர்களை விட அன்பை
எதிர்பார்திருக்கும் நண்பர்களை அருகில் வைத்திருப்பது
நல்லது.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.மீராபாய் ஆலயம் எங்குள்ளது  ?
2.வெள்ளை நகரம் என சிறப்பிக்கப்படும் நகரம் எது ?
3.உகாண்டாவின் தலைநகர் எது ?
4.இந்திய மத்திய அரசின் ஆரம்ப கல்வித்திட்டத்திற்கு என்ன
 பெயர் ?
5.பனாஜி நகரில் ஒடும் நதியின் பெயர் என்ன ?
6.உலகத்தை முதன் முதலில் சுற்றி வந்தவரின் பெயர் என்ன?
7.பிசிராந்தையார் எந்த நாட்டை சேர்ந்தவர் ?
8.நிகோசியா எந்த நாட்டின் தலைநகரம் ?
9.இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் யார் ?
10.அவுரங்காபாத் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது ?
பதில்கள்:
1.இராஜஸ்தான், 2.பெல்கிரேடு,3.கம்பாலா,4.சர்வசிக்‌ஷா
அபியான், 5.மாண்டவி, 6.மெகல்லன்,7.பாண்டிய நாடு,
8.சைப்ரஸ், 9.மார்க்ரெட்தாட்சர்.10.காவெளம் நதிக்கரை.


இன்று நவம்பர் 22 
பெயர் : ஜோன் எஃப். கென்னடி ,
மறைந்த தேதி : நவம்பர் 22, 1963

ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத்
தலைவர். இரண்டாம் உலகப் போரின்
போது தென்மேற்கு பசிபிக் பகுதியில்
கடற்படைக்கப்பலில் லெப்டினண்டாகப்
பணிபுரிந்தார். போரின் முடிவில் அவர் தீவிர அரசியலுக்குத்
திரும்பினார்.1961 முதல் 1963 வரை அவர் கொலை
செய்யப்படும் வரை குடியரசுத் தலைவராக இருந்தவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

5 comments:

  1. Thanks winmani

    I love Jazz music it's my all time fav

    ReplyDelete
  2. உருப்படியான தகவல். நன்றி.

    ReplyDelete
  3. இன்னும் ரேடியோக்கு இருக்கும் முக்கியத்துவம் இருந்து கொண்டே தான் இருக்கிறது

    ReplyDelete

Post Top Ad