ஆதாரத்தகவல்கள் (வாரண்டி) இனி தேட வேண்டாம் – புதிய வழிமுறை - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Friday, October 8, 2010

ஆதாரத்தகவல்கள் (வாரண்டி) இனி தேட வேண்டாம் – புதிய வழிமுறை

எந்த ஒரு பொருள் வாங்கினாலும் உடனடியாக நாம் கேட்பது
வாரண்டி இருக்கிறதா என்று இப்படி நாம் கேட்டு வாங்கும் வாரண்டி,
பொருள் பிரச்சினை செய்யும் போது நம் கையில் அகப்படாது இனி
இதைப்பற்றியய கவலை வேண்டாம் வாரண்டி தகவல்களை எப்படி
நம் கணினியில் சேமித்து வைக்கலாம் என்பதைப்பற்றித்தான்
இந்தப் பதிவு.



உத்திரவாதப்பத்திரம் என்று சொல்லக்கூடிய பொருட்களுக்கான
வாரண்டி தகவல்கள் நாம் எவ்வளவு தான் பாதுகாப்பாக வைத்தாலும்
தேவைப்படும் போது கிடைக்காது தேடித் தேடி நேரம் தான் செலவு
ஆகும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஒரு இணையதளம்
உள்ளது.

இணையதள முகவரி :  https://www.warrantyelephant.com

இந்ததளத்திற்கு சென்று புதிதாக ஒரு இலவச கணக்கு உருவாக்கி
நம் அனைத்து வாரண்டி தகவல்களையும் ஆன்லைன் மூலம் சேமித்து
வைக்கலாம். வாரண்டி பில்லின் நகலை ஆன்லைன் மூலம் பதிவேற்றம்
செய்தும் சேமித்து வைக்கும் வசதியும் உள்ளது. நீங்கள் வாங்கும்
பொருட்களுக்கான வாரண்டி எப்போது முடிகிறது என்பதை இரண்டு
வாரங்களுக்கு முன்பே உங்கள் இமெயிலுக்கு தகவல் அனுப்பிவிடும்.
எந்த நேரம் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ஆன்லைன்
மூலம் நம் வாரண்டி பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து
கொள்ளலாம். நாம் கொடுத்திருக்கும் வாரண்டி பற்றிய அனைத்து
தகவல்களும் பாதுகாப்பாகவும் இலவசமாகவும் சேமிக்கப்படிருக்கும்.
வின்மணி சிந்தனை
நல்லவர்களுக்குத் தான் அதிகமான சோதனை வரும்,
இவர்களுக்கு கிடைக்கும் வெற்றியும் மிகப்பெரிய வெற்றியாக
இருக்கும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தேசிய இளைஞர் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது ?
2.மதிய உணவு திட்டம் முதன் முதலில் அறிமுகம் செய்த
 மாநிலம் எது ?
3.வடகிழக்கு இரயில்வேயின் தலமையகம் எங்குள்ளது ?
4.கூடைப்பந்து போட்டியில் ஒரு அணியில் எத்தனை வீரர்கள்
 இருப்பார்கள் ?
5.சுதந்திரத்தின் போது இந்தியாவில் எத்தனை சமஸ்தானங்கள்
இருந்தது ?
6.ரூவாண்டா நாடு எங்குள்ளது ?
7.மனிதர்களின் காதிற்கு கேட்காத ஒலியை எவ்வாறு
அழைப்பார்கள் ?
8.ஜாலியன் வாலாபாக் படுகொலை எங்கு நடந்தது ?
9.அர்ஜூனா விருது பெற்ற முதல் கோகோ விளையாட்டு
 வீரர்கள் யார் ?
10.ஐரோப்பிய பொருளாதார சமூகம் எப்போது தொடங்கப்பட்டது ?
பதில்கள்:
1. ஜனவரி 12, 2.தமிழ்நாடு,3.கோரக்பூர், 4.ஐந்து, 5.552,
6.கிழக்கு ஆப்பிரிக்கா,7.கீழா INFRA ஒலி,8.அமிர்தசரஸ்(பஞ்சாப்),
9.கதிர் பாஸ்கர்ராவ், 10.கி.பி.1952.

இன்று  அக்டோபர் 8 
பெயர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ,
மறைந்த தேதி :
அக்டோபர் 8, 1959
புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்.
எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக்
கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய
சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை
ஆக்கப்பட்டுள்ளன. பாடல்கள் மூலம் சமூகத்தை சீர்திருத்த
முயன்ற உங்களுக்கு நன்றி.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

2 comments:

  1. அன்பு நண்பருக்கு,
    உங்களுடைய பொது அறிவு கேள்வி எண் 6 க்கான விடை
    "மத்திய ஆசியா" அல்ல. அது "கிழக்காப்ப்ரிக்கா."
    ருவாண்டா என்பது உகாண்டா, சுடான் நாடுகளின்
    அண்டை நாடாக உள்ளது.
    நன்றி.

    ReplyDelete
  2. @ Shaik Sujibar
    நண்பருக்கு ,
    ” உங்களுடைய “ பொது அறிவு என்ற வார்த்தையை இனி பயன்படுத்த
    வேண்டாம் ” நம் “ பொது அறிவு என்று பயன்படுத்துங்கள். திருத்தியாச்சு
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad