எக்ஸல் பார்முலாவை எக்ஸ்பர்ட்டிடம் கேட்கலாம் உடனடி பதில் கிடைக்கும். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, October 30, 2010

எக்ஸல் பார்முலாவை எக்ஸ்பர்ட்டிடம் கேட்கலாம் உடனடி பதில் கிடைக்கும்.

எக்சல் ( Excel) -ல் அடிக்கடி நமக்கு பல சந்தேகங்கள் எழுவதுண்டு,
சாதாரண பார்முலாவில் இருந்து அத்தனையையும் எக்ஸ்பர்டிடம்
கேட்கலாம் உடனடியாக பதில் கிடைக்கும் எப்படி என்பதைப்பற்றித்
தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_3814" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

எக்சல் சிறிய புரோகிரமருக்கு மட்டுமல்ல பெரிய புரோகிராமருக்கும்
அதை விட புரோகிராம் என்றால் என்னவென்று தெரியாதவர்களும்
எளிதாக பயன்படுத்தும்படி அமைந்து இருக்கிறது இருந்தும் பல
நேரங்களில் எதற்கு எந்த பார்முலா என்று தெரிவதில்லை இதைப்
போல் நமக்கு எழும் பல கேள்விகளுக்கும் உடனடியாக விடையளிக்க
எக்ஸ்பட் ஒருவர் இருக்கிறார்.

[caption id="attachment_3815" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]

இணையதள முகவரி : http://www.excel-formulas.com

இந்தத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி நமக்கு எழும்
கேள்விகளை கட்டத்திற்குள் தட்டச்சு செய்து Get Unstack Now என்ற
பொத்தானை அழுதவேண்டும் அடுத்து வரும் திரையில் Expert Type
பதில் அளிப்பவர்களில் ஒருவரை எந்தத் துறை சார்ந்தவர் என்பதை
தேர்ந்தெடுக்க வேண்டும் (படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது).

[caption id="attachment_3816" align="aligncenter" width="450" caption="படம் 3"][/caption]

தேர்ந்தெடுத்ததை சொடுக்கியதும் Step 3 வந்துவிடும் இதில் நாம்
நம்முடைய இமெயில் முகவரியை கொடுத்து Submit Question
என்ற பொத்தானை சொடுக்கவும் சில நிமிடங்களில் நம் இமெயிலுக்கு
பதில் வந்துவிடும். (படம் 3-ல் காட்டப்பட்டுள்ளது) .
Accounting / Finance , Human Resource / Payroll, Inventory ,
Business / Sales , Loans / Wortgages , General Expert
போன்ற அத்தனை துறையில் இருப்பவர்களுக்கும் எக்சலில்
இருக்கும் அத்தனை சந்தேகங்களையும் இங்கு இலவசமாக
கேட்கலாம் கண்டிப்பாக எக்சல் பற்றிய மேலும் அறிந்து கொள்ள
விரும்பும் நபர்களுக்கு இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.


வின்மணி சிந்தனை
நல்ல மனிதர்கள் , கெட்ட மனிதர்கள் யாருக்கு உதவி
செய்தாலும் நம் மனம் நல்லதாகவும் அன்பாகவும் மாறும்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தமிழ்நாட்டின் முதல் சபாநாயகர் ? 
2.புறா வாழாதப் பகுதி எது ? 
3.ஹார்மோன் இல்லாத உயிரினம் எது ?
4.அக்பர் சமாதி எங்கே உள்ளது ? 
5.1944-ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி
 பெற்ற நாடு எது ?
6.சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும் ?
7.விதையின்றி இனப்பெருக்கம் செய்யும் தாவரம் எது ?
8.முதன் முதலில் மின்கலத்தை உருவாக்கியவர் யார் ? 
9.மியான்மர் என்று அழைக்கப்படும் நாடு எது ? 
10.உலகிலேயே அதிகமாக தேன் உற்பத்தி செய்யும் நாடு எது?
பதில்கள்:
1.கோபால மேனன், 2.அண்டார்டிகா,3.பாக்டீரியா,
4.சிகந்திராபாத்,5.பிரேசில், 6.96,  7.மைசீலியம்,
8.ஜார்ஜ் வோல்ட்டா, 9.பர்மா. 10.அமெரிக்கா


இன்று அக்டோபர் 30 
பெயர் : முத்துராமலிங்கம் ,

மறைந்த தேதி : அக்டோபர் 30, 1963
தென் தமிழகத்தில் பசும்பொன் எனும் சிற்றூரில்
பிறந்தவர். தலை சிறந்த சுதந்திரப் போராட்டத்
தியாகியாக விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர
போசின் தலைமையில் பரங்கியரை எதிர்த்த
இந்திய
தேசிய இராணுவத்திற்கு  தமிழகத்திலிருந்து
பெரும்
படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச்
சாரும்.
தலை சிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும்
திகழ்ந்த இவரது பிறந்த நாள் தமிழக அரசு விழாவாக
பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடப் பட்டுவருகின்றது.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

2 comments:

Post Top Ad