உல்லாசப்பயணத்துக்கு நாம் தயார் செய்ய வேண்டியவையின் பட்டியல் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, October 25, 2010

உல்லாசப்பயணத்துக்கு நாம் தயார் செய்ய வேண்டியவையின் பட்டியல்

உல்லாசப்பயணம் செய்யும் முன் என்னவெல்லாம் கொண்டு செல்ல
வேண்டும் , எத்தனை நாள் பயணம் , எத்தனை பேர் செல்கின்றனர்
போன்ற தகவல்களை கொடுத்து பயணத்துக்கு நாம் தயார் செய்ய
வேண்டியவையின் பட்டியலை எளிதாக பெறலாம்.

[caption id="attachment_3774" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

எல்லா மக்களும் விரும்பும் உல்லாசப்பயணம் குடும்பத்துடன்,
நண்பர்களுடன் செல்லும் போது நாம் கடைபிடிக்க வேண்டியவை
என்னென்ன என்பதை தெளிவாக பட்டியல் போட்டு காட்டுகிறது
ஒரு இணையதளம்.

இணையதள முகவரி :http://upl.codeq.info

[caption id="attachment_3775" align="aligncenter" width="405" caption="படம் 2"][/caption]

இந்ததளத்திற்கு சென்று நாம் எத்தனை நாள் பயணம் செய்கிறோம்,
பேருந்து அல்லது இரயில் அல்லது விமானம் அடுத்து எத்தனை
நாள் பயணம் செய்கிறோம் என்பதையும் கோடைகால பயணமா
அல்லது குளிர்கால பயணமா என்பதையும் தேர்ந்தெடுக்கொண்டு
படம் 1-ல் இருப்பது போல் Create Packing list என்ற பொத்தானை
அழுத்தவும் அடுத்து வரும் திரை படம் 2 -ல் காட்டப்பட்டுள்ளது.
இதில் நாம் என்னவெல்லாம் எடுத்துச்செல்ல வேண்டும் என்று
ஒரு முழுமையான பட்டியலை கொடுக்கிறது. இந்ததளத்தில்
கொடுக்கப்பட்டிருக்கும் மென்பொருளை தரவிரக்கி எளிதாக எங்கும்
பயன்படுத்தலாம் மேப் வசதியும் உள்ளது. விடுமுறைக்கு
வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்ல விரும்பும்
நபர்களுக்கு இந்ததளம் ஒரு பொக்கிஷமாகவே இருக்கும்.


வின்மணி சிந்தனை
அதிகம் படித்ததினால் படிக்காத மக்களை ஏளனம் செய்தால்
நீ படித்த படிப்பு நிழலுக்கு இறைத்த நீராக மாறிவிடும்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.மின்சாரத்தை கடத்தும் அலோகம் எது ?
2.எந்த ஜனாதிபதியின் ஆட்சியில் இந்தியாவில் நான்கு
பிரதமர்கள் வந்து போயினர் ?
3.பாரத ரத்னா விருது எந்த வடிவத்தில் அமைந்துள்ளது ?
4.1957-ல் மருத்துவ நோபல் பரிசு பெற்றவர் யார் ?
5.கந்தர் அலங்காரம் யாரால் அருளிச் செய்யப்பட்டது ?
6.லஞ்சம் என்ற சொல்லை முதன் முதலில் தன் நூலில்
 எழுதியவர் யார் ?
7.இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் யார் ?
8.மல்லிகையில் மணம் கொடுக்கும் வேதிப்பொருள் என்ன ?
9.சந்திரனுக்கு முதன் முதலில் இந்திய தேசியக்கொடியை
 அனுப்பிய நாடு எது ?
10.பூமியின் மையத்திலுள்ள வெப்பத்தின் அளவு எவ்வளவு ?
பதில்கள்:
1.கிராபைட், 2.ஆர்.வெங்கட்ராமன், 3.அரச இழை,
4.டேனியல் பொவம் (இத்தாலி),5.அருணகிரிநாதர்,
6.சாணக்யர், 7.ஷானா தேவி, 8.பென்சைல் அசிட்டேட்,
9.ரஷ்யா. 10.2000 டிகிரி செண்டிகிரேட்.


இன்று அக்டோபர் 26 
பெயர் : மான்ட்டே எலிஸ் ,
பிறந்த தேதி : அக்டோபர் 26, 1985
ஒரு அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர்
ஆவார். இவர் என்.பி.ஏ.இல் கோல்டன் ஸ்டேட்
வாரியர்ஸ் அணியில் விளையாடுகிறார்.இவரால்
இரண்டு பின்காவல் நிலைகளில் விளையாட
முடியும்.
கல்லூரிக்கு போகாமல் நேரடியாக 2005 என்.பி.ஏ.
தேர்தலில் சேர்ந்து இரண்டாம் சுற்றில் வாரியர்ஸ்
அணியால் தெரிந்தெடுக்கப்பட்டார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

 

No comments:

Post a Comment

Post Top Ad