அனுபவத்தில் இருந்து நம் வாழ்க்கைக்கு உதவும் 7500 பயனுள்ள உதவிகள். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, October 25, 2010

அனுபவத்தில் இருந்து நம் வாழ்க்கைக்கு உதவும் 7500 பயனுள்ள உதவிகள்.

அனுபவத்தில் இருந்து மனிதன் படிக்கும் பாடம் வாழ்க்கையின்
எல்லா நேரங்களிலும் நமக்கு பயன்படும் சில நேரங்களில் பலரின்
அனுபவம் கூட நம் வாழ்க்கைக்கு உதவும் அந்த வகையில்
வாழ்க்கைக்கு உதவும் 7500 பயனுள்ள உதவிகளைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.அனுபவம் ஒரு மிகச்சிறந்த ஆசான் என்று சொல்லும் புத்திசாலிகள்,
தன்னை விட சிறியவர்களிடம் இருந்து வாழ்க்கையை கற்றுகொள்ளும்
பெரிய மனிதர்களும் “ அனுபவம் “ என்ற துறைக்கு அதிக
முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்த அனுபவத்தை நாம்
சேகரிக்க எங்கும் தேடி அலையவேண்டியதில்லை, ஒரே இடத்தில்
நம் வாழ்க்கைக்கு உதவும் 7500 -க்கும் மேற்பட்ட பயனுள்ள
உதவிகளை கொண்டு ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.daytipper.com

ஒவ்வொன்றும் பலதரப்பட்ட மக்களால் பயன்படுத்தப்பட்டு அதன்
பின் அதைப்பற்றி மக்கள் தாங்கள் கொடுக்கும் பின்னோட்ட
அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
பெரும்பான்மையான மக்கள் வாழ்க்கையில் அடுத்தவரிடம்
ஆலோசனை கேட்பதை எப்பொழும் வாடிக்கையாக
கொண்டிருக்கின்றனர். அப்படிபட்ட மக்கள் இங்கு கொடுத்திருக்கும்
அனைத்து அனுபவங்களையும் மறக்காமல் எழுதி வைத்து
தேவையான நேரங்களில் பயன்படுத்தி பயன் அடையலாம்.
வின்மணி சிந்தனை
சிரிப்பும் அழுகையும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.
இரண்டும் தனித்தனியாக வரும்போது மகிழ்ச்சியையும்
வலியையும் குறிக்கும். சேர்ந்து வரும் போது ஆனந்தத்தை
மட்டும் தான் குறிக்கும்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.நீர்க்கோள் என்று எதை அழைக்கின்றனர் ?
2.இந்தியாவின் முதன் பெண் சுங்க இலாகா கலெக்டர் யார் ?
3.லட்சத்தீவில் பேசப்படும் முக்கிய மொழி எது ?
4.ஹோமோபதி மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
 யார் ?

5.குங்ஃபு என்பதன் உண்மையான பொருள் என்ன ?
6.சீனாவின் ஒரு பகுதியாகா ஹாங்காங் எப்போது சேர்ந்தது ?
7.ஒரு சவரன் தங்கத்தில் எத்தனை கிராம் உள்ளது ?
8.பூப்பந்தாட்டம் எந்த நாட்டில் துவக்கப்பட்டது ?
9.தூத்துக்குடியின் பண்டைய காலப்பெயர் என்ன ?
10.பீம் எனப்படும் முதல் பீரங்கி இந்தியாவில் எங்கு
 தயாரிக்கப்பட்டது ?

பதில்கள்:
1.பூமி, 2.கெளசல்யா நாராயணன், 3.மலையாளம்,
4.ஹானிமன்,5.ஒய்வு நேரம், 6. 1997, 7.8 கிராம்ட்,
8.இந்தியா,
9.முத்துநகர். 10.ஆவடி.


இன்று அக்டோபர் 25 
பெயர் : பாப்லோ பிக்காசோ ,
பிறந்த தேதி : அக்டோபர் 25, 1881
எசுப்பானியா நாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற
ஓவியரும், சிற்பியும் ஆவார். 20 ஆம்
நூற்றாண்டின்
ஓவியத் துறை தொடர்பில் மிகப்
பரவலாக
அறியப்பட்டவர்களுள் இவரும்
ஒருவர். ஜோர்ஜெஸ்
பிராக் (Georges Braque) என்பவருடன்
கூட்டாக
கியூபிசம் என்னும் கலைப்பாணி ஒன்றை
ஆரம்பித்து
வைத்தவர் என்ற வகையிலேயே இவர்
பெரிதும்
அறியப்படுகிறார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

4 comments:

 1. பயனுள்ள தவலை பகிர்ந்தமைக்கு நன்றி

  நட்புடன்
  மாணவன்

  ReplyDelete
 2. பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி

  தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

  நட்புடன்
  மாணவன்

  ReplyDelete
 3. @ silambu.RR
  மிக்க நன்றி

  ReplyDelete
 4. @ silambu.RR
  மிக்க நன்றி.

  ReplyDelete

Post Top Ad