காதால் கேட்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
[caption id="attachment_3268" align="aligncenter" width="316" caption="படம் 1"][/caption]
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டிவிட்டரில்
தங்களின் செய்திகளை உடனுக்கூடன் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
இந்த டிவிட்டர் செய்திகளை நம் கண்ணால் படித்தால் மட்டும் போதுமா?
டிவிட்டரில் வந்திருக்கும் செய்தியை காதுகுளிர கேட்கலாம். நமக்கு
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி :http://twejay.com/
இந்ததளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Sign in with Twitter என்ற
பொத்தானை அழுத்தி நம் டிவிட்டர் பயனாளர் கணக்கை கொடுத்து
நுழைய வேண்டும். நாம் அனுப்பிய செய்திகள் ஒன்றன் பின் ஒன்றாக
வரும் ஒவ்வொரு டிவிட் செய்தியிலும் Play பொத்தான் இருக்கும்
இதை சொடுக்கி டிவிட்டர் செய்திகளை நாம் கேட்கலாம். டிவிட்டரின்
கணக்கில் நுழையாமல் இங்கு இருக்கும் Search என்ற கட்டத்திற்குள்
விரும்பிய வார்த்தையை கொடுத்து தேட வேண்டியது தான் வரும்
முடிவுகளை ஒவ்வொன்றாக நாம் கேட்கலாம்.
வின்மணி சிந்தனை
தான் கற்ற அனுபவத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளும்
ஒவ்வொருவரும் ஆசான் தான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இஞ்சியில் எந்த பாகம் உணவிற்கு பயன்படுகிறது ?
2.கோழி குஞ்சு பொரிக்க எத்தனை நாட்கள் அடைகாக்கும் ?
3.தொழுநோய் ஏற்படுவதற்கு காரணமான கிருமி எது ?
4.பாரதியாரின் அரசியல் குரு யார் ?
5.யுவான் சுவாங் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் தங்கி
இருந்தார் ?
6.பேருந்து போக்குவரத்து முதலில் எந்த நாட்டில்
தொடங்கப்பட்டது ?
7.பாரதரத்னா விருது முதலில் யாருக்கு வழங்கப்பட்டது ?
8.இந்தியாவில் உச்சநீதிமன்றத்தின் அமைவிடம் எது ?
9.நிதிக்கமிஷன் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை
நியமிக்கப்படுகிறது ?
10.”அரசியல் “ என்ற நூலை எழுதியவர் யார் ?
பதில்கள்:
1.தண்டுக் கிழங்கு,2.21 நாட்கள்,3.பாக்டீரியா,4.பாலகங்காதர
திலகர்,5.10 ஆண்டுகள், 6.பிரான்ஸ் -1819,7.ராஜாஜி,
8.டெல்லி,9.5 ஆண்டு,10.அரிஸ்டாட்டில்.
இன்று செப்டம்பர் 11
பெயர் : சுப்பிரமணிய பாரதி,
மறைந்த தேதி : செப்டம்பர் 11, 1921
பாரதியார் என்றும், மகாகவி என்றும்
அழைக்கப்படுகிறார். கவிஞர், எழுத்தாளர்,
பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக
சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள்
கொண்டவர்.சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரின் எழுச்சி பாடல்கள்
என்றும் அழியாத இடத்தை பிடித்திருக்கிறது என்றால் அது
மிகையாகாது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
இந்த வின்மணி ஆண்டி வைரஸ் சிஸ்டம் இருந்தால் ஏ.வி.ஜி. கூடவே இருக்கலாமா? அல்லது வின்மணி மட்டும்தான் இருக்க வேண்டுமா? தயவு செய்து தெளிவாகக் கூறினால் நலம்
ReplyDeleteDear nagamani sir
ReplyDeleteboss.. ungaluday petti oru thalathil padithaen.. kandippa adhu neenga dhaanu kandupidichaen..
boss epdi boss ivlo elimaya perumai adikaamal irukireenga..
plz give tips.. enakum aanmeehathil adhiga eedupaadu ullavan..
but appa appa perumai,mugasthudi laam varudu boss..
and ur winmani virus removers excellent boss... i have a little doubt ungaladuya antivirus install pannitaen ipa en system la avastum irukum
rendu antivirus irundhaal computer speed kurayuma..
plz enaku pathil sollungal..
i am ur fan boss..
rendu antivirus use pannalamaa na oru private antivirus install panni irukaen.. ipa apdiyae winmani virus removeer install panni irukaen idhu naala pblm varumaa...
ReplyDeleteshall i delete private antivirus software.. plz i want to more detail about this two antivirus software in laptop.. plz clear my doubts..
@ inamul hasan
ReplyDeleteஅன்பு நண்பருக்கு ,
நம் ஆண்டி வைரஸ் மென்பொருள் இருந்தாலும் ஏ.வி.ஜி. பயன்படுத்துவது நலம்.
பயன்படுத்தலாம். அதிகமாக கணினியை தாக்கக்கூடிய வைரஸ்-ஐ மட்டும் நீக்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் வின்மணி வைரஸ் ரீமுவர். விரைவில்
வின்மணி வைரஸ் ரீமுவர் முழுபதிப்பு வரும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.
மிக்க நன்றி.
@ inamul hasan
ReplyDeleteநண்பருக்கு ,
எல்லாம் அவன் செயல் , அவன் சுற்றி விட்டால் சுற்றும் பம்பரம் தான் நான். இந்தப்பெருமை சுற்றிவிட்டவனை தானே சாரும். அவன் ஆசி நமக்கு இருந்தால் மேலும் பல சேவைகளை இலவசமாக தமிழ் மக்களுக்கு கொடுக்கலாம். இந்தப் பம்பரம் சுற்றும் வரை தான் பம்பரத்தை பற்றி புகழ்வார்கள், சுற்றிமுடிந்ததும் பம்பரத்தை ஒதுக்கிவிட்டு சுற்றியவனைத்தானே நினைப்போம்.
மிக்க நன்றி
vow very superb explanation sir..
ReplyDeletesir ipa ungaladuya virus remover pathi dhaan nan neraya paer ta inform panikitu irukaen..
romba soopera irukunu use pannavanga solrangaa.. sir seekerama full version release pannunga..
@ inamul hasan
ReplyDeleteமிக்க நன்றி , விரைவில்... இறைவன் அருளால் கொடுக்க முயற்சி செய்கிறோம்.
பதிவின் உரையைக் கேட்ட ருவிட்டருக்குப் போனேன், பேச மறுக்கின்றதே, தொடராக பதிவைக் காட்டிய ருவிட்டர் குரல் தர மறுக்கின்றது, சிலவேளை தமிழைப் புரிந்து குரல் தருவதில் ஏதும் தயக்கமோ!
ReplyDelete@ ஈழவன்
ReplyDeleteநண்பருக்கு ,
சரி தான் . தமிழைப் புரிந்து குரல் தருவதில் தயக்கம்தான் , நேற்று வந்த மொழி நம் மொழி அல்லவே, செம்மையான மொழி தேனாக காதில் வந்து கேட்க வேண்டும் அல்லவா அதற்கு தான் முயற்சி செய்து வருகின்றனர். இப்போதைக்கு ஆங்கிலச் செய்தியை மட்டும் தான் கேட்க முடியும்.
மிக்க நன்றி