அறிவியல் மற்றும் கணினி துறையின் புத்தகங்களை இலவசமாக தரவிரக்கலாம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Friday, September 10, 2010

அறிவியல் மற்றும் கணினி துறையின் புத்தகங்களை இலவசமாக தரவிரக்கலாம்

இயற்பியல், வேதியல் , வரலாறு , கணிதம் , மருத்துவம், மற்றும்
கணினி பற்றிய அனைத்து முக்கியமான புத்தகங்களையும் ஆன்லைன்
மூலம் இலவசமாக தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.கணினியில் ஆன்லைன் மூலம் நாம் தேடும் சில முக்கியமான
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தகங்களை காசு கொடுத்து தான்
வாங்க வேண்டும் என்று இல்லாமல் இன்று பல இணையதளங்கள்
இலவசமாக கொடுக்கின்றன. அறிவியல் முதல் வரலாறு வரை ,
கணிதம் முதல்  கணினி வரை அனைத்து துறையின் முக்கியமான
புத்தகங்களையும் நாம் ஆன்லைன் மூலம் இலவசமாக தரவிரக்கலாம்.
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://sciencebooksonline.info
[caption id="attachment_3256" align="aligncenter" width="305" caption="படம் 1"][/caption]

இந்தத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி வலது பக்கத்தின் மேல்
இருக்கும்  எந்தத்துறைக்கான புத்தகம் நமக்கு தேவையோ அதற்கான
மெனுவை சொடுக்கி அந்தத் துறையின் முக்கியமான புத்தகங்களை
இலவசமாக தரவிரக்கலாம்.தினமும் பல புதிய புத்தகங்கள் இந்தத்
தளத்தில் பதிவேற்றம் செய்யப்படிகிறது.தேவையான புத்தகத்தைத்
தேர்ந்தெடுத்து Download என்பதை சொடுக்கி புத்தகத்தை தரவிக்கி
நம் கணினியில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.கல்லூரி மாணவர்கள்,
ஆராய்சியாளர்கள், பணிபுரியும் நண்பர்கள்,பணி ஒய்வு பெற்ற
நண்பர்கள் என நம் அனைத்து நண்பர்களுக்கும், புத்தகம் தேடும்
அனைவருக்கும் இந்தத் தகவலை கொண்டு சேர்ப்பது நம் கடமை.
வின்மணி சிந்தனை
நல்லவர்களாக மட்டும் இருந்தால் போதாது வல்லவர்களாக
இருந்தால் தான் சகமனிதர்களின் சூழ்ச்சியை வென்று
வெற்றி பெற முடியும்.TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?
2.சிரிக்க வைக்கும் வாயு எது ?
3.உலகின் முதல் எலெக்ட்ரானிக் கம்ப்யூட்டரின் பெயர் என்ன?
4.ரஷ்ய நாணயத்தின் பெயர் ?
5.உலகின் மிகப் பழமையான மியூசியம் எது ?
6.ஒரு குதிரைத்திறன் என்பதின் மதிப்பு என்ன ?
7.முதலில் விமானத்தை கடத்தியவர்கள் யார் ?
8.ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் கம்ப்யூட்டர் எது ?
9.தண்டியாத்திரை எதற்காக நடத்தப்பட்டது ?
10.தங்கத்தின் வேதியல் பெயர் என்ன ?

பதில்கள்:
1.அமெரிக்கா,2.நைட்ரஸ் ஆக்சைடு,3.இனியாக்,4.ரூபிள்,
5.ஆஸ்மோலியன், 6.746 வாட்ஸ்,7.சீனர்கள் (1948),
8.எட்சாக்,9.உப்புவரியை எதிர்த்து,10.அயூரியம்.இன்று செப்டம்பர் 10 
பெயர் : ஏ. கே. செட்டியார்,
மறைந்த தேதி : செப்டம்பர் 10, 1983

முதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி வரலாற்று
ஆவணப் படம் எடுத்தவர்.சுமார் மூன்று ஆண்டு
காலமாக மகாத்மாகாந்திப் பற்றி சேகரிக்கப்பட்ட
ஆவணங்களை அடிப்படையாக வைத்து
12,000அடி நீளமான மகாத்மா காந்தி படத்தை ஹிந்தியில்
தயாரித்தார். இப்படம் 1948 இல் சுதந்திர தினத்தன்று
புது டில்லியில் திரையிடப்பட்டது.இத்திரைப்படத்தின் பிரதிகள்
(படிகள்) எதுவுமே இப்போது இல்லை.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

11 comments:

 1. nice to visit this site .. very informative thanking you..

  ReplyDelete
 2. @ kamala
  மிக்க நன்றி

  ReplyDelete
 3. @ Magesh kumar
  மிக்க நன்றி

  ReplyDelete
 4. Sir in the chapter 2nd Question answer is may be Nitrus Oxide N2O is laughing Gas.

  ReplyDelete
 5. @ Prabath
  திருத்தியாகிவிட்டது.
  மிக்க நன்றி

  ReplyDelete
 6. Dear All,

  One Horse power is equal to 746 Watts, but not Volts.

  Thanks.

  ReplyDelete
 7. @ PREM
  735.5 and 750 watts
  மிக்க நன்றி

  ReplyDelete
 8. M.Gurupara RamalingamNovember 10, 2010 at 3:23 AM

  superb presentation

  ReplyDelete
 9. @ M.Gurupara Ramalingam
  மிக்க நன்றி

  ReplyDelete
 10. ungaludaiyey annaithu pathivukalum yennakku romba useful aa irukirathu,,,, webdesign pattri tamil tutorial kidaikkuma sir,,,,,,,,,

  ReplyDelete

Post Top Ad