மடிக்கணினிகளில் ஒலி (Volume) அளவு அதிகமாகக் கூட்டலாம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Thursday, August 26, 2010

மடிக்கணினிகளில் ஒலி (Volume) அளவு அதிகமாகக் கூட்டலாம்

மடிக்கணினிகளில் குறிப்பிட்ட அளவு தான் ஒலி நமக்கு கேட்கும்
அந்த குறிப்பிட்ட அளவை விட மேலும் ஒலியின் அளவை
அதிகமாகக் கூட்டலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


மடிக்கணினிகள் இன்று இல்லாத இடம் இல்லை என்று சொல்லும்
அளவுக்கு எல்லா இடங்களிலிலும் மடிக்கணினிகளின் தாக்கம்
அதிகமாகவே இருக்கிறது. நமக்கு பிடித்த இசையின் ஒலி அளவை
மடிக்கணினிகளின் குறிப்பிட்ட அளவு வரை தான் கேட்க முடியும்
என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர் ஆனால்
மடிக்கணினிகளில் ஒலியின்  அளவை மேலும் கூட்டலாம். இதற்க்காக
ஒரு மென்பொருள் உள்ளது. மென்பொருளின் மூலம் எப்படி இருக்கும்
ஒலியின் அளவைக்க்கூட்ட முடியும் என்று சற்று வேடிக்கையாக
தோன்றினாலும் பயன்படுத்திப்பாருங்கள் உண்மை புரியும்.
மென்பொருளின் பெயர் VLC Media player இந்த மென்பொருளை
நம் கணினியில் தரவிரக்க இந்த சுட்டியை சொடுக்கவும்.

Download

இந்த மென்பொருளை தரவிரக்கி நம் கணினியில் நிறுவியதும்,
இந்த மென்பொருளை இயக்கி நமக்கு பிடித்த ஆடியோ அல்லது
வீடியோ பாடல்களை open செய்து கொள்ளுங்கள். அடுத்து
படம் 1 -ல் உள்ளது போல் Volume  சொடுக்கி ஒலியின் அளவை
அதிகரித்துக் கொள்ளலாம்.  Ctrl + Up arrow ஐ அழுத்து நமக்கு
தேவையான அளவு அதிகரித்துக்கொள்ளலாம். கண்டிப்பாக
இந்தத் தகவல் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
மது அருந்துபவர் தன்னை மட்டுமல்ல தன் குடும்பத்தின்
பெயரை மட்டுமல்ல, தன் பரம்பரையின் பெயரையும்
கெடுத்துக்கொள்கிறார்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.தீபாவளிப்பண்டிகையை தபால்தலையில் வெளியீட்ட நாடு எது?
2.தபால் தலையை வட்ட வடிவமாக வெளியீட்ட நாடு எது ?
3.உலகிலேயே மிக உயரமான கோபுரம் எந்த நாட்டில் உள்ளது?
4.வறட்சியைத்தாங்கும் ஒரே புல் எது ?
5.மகாத்மா காந்தியின் தாயார் பெயர் என்ன ?
6.மீன்கள் எதனால் சுவாசிக்கிறது ?
7.தமிழக அரசின் சின்னம் எது ?
8.எழு என்பது என்ன ?
9.ஏசு கிறிஸ்து எங்கு பிறந்தார் ?
10.ஊசியால் எந்த நோயையும் குணப்படுத்தும் சீன முறைக்கு
என்ன பெயர் ?

பதில்கள்:
1.சிங்கப்பூர்,2.மலேசியா,3.நீயூசிலாந்து,
4.ஆஸ்திரேலியாப்புல்,5.புத்லிபாய்,6.செவிள்களால்,
7.கோபுரம்,8.ஒரு பறவை,9.பெத்தலஹேம்,10.அக்குபஞ்சர்

இன்று ஆகஸ்ட் 26 
பெயர் : அன்னை தெரேசா ,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 26, 1910

அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டு
இந்திய குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க
அருட்சகோதரிஆவார்.ஏழைஎளியோர்களுக்கும்,
நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும்,
இறக்கும் தருவாயிலிருப்போர்களுக்கும் தொண்டாற்றிக்
கொண்டே, முதலில் இந்தியா முழுவதும் பின்னர் ஏனைய
வெளிநாடுகளுக்கும் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி-யை விஸ்தரித்தவர்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

7 comments:

  1. What is difference between Media player sound adjustment and VLC player sound adjust?

    I'm using VLC for few years and sound wise don't find any difference with Media player/win amp/....

    ReplyDelete
  2. மீன்கள் சுவாசிப்பது செதில்களால் அல்ல. செவிள்களால்.
    செதில் வேறு செவிள் வேறு.

    ReplyDelete
  3. Press "Ctrl + Up arrow" buttons together to increase volume upto 400% in VLC media player

    ReplyDelete
  4. @ yasavi
    நாம் சோதித்து பார்த்த VLC Media Player -ன் தரவிரக்க முகவரி
    கொடுத்துள்ளோம். ஒரு பாடலை Windows Media Player சென்று
    Maximum Volume வைத்துப்பாருங்கள். அதே பாடலை VLC Media Player
    சென்று ” Ctrl + Up arrow “ 400 % வரை Volume கூட்டலாம். வேற்றுமை
    புரியும். பயன்படுத்தி விட்டு பின்னோட்டத்தை மறக்காமல் கூறுங்கள்.
    நன்றி.

    ReplyDelete
  5. @ Killivalavan K
    மிக்க நன்றி

    ReplyDelete
  6. அன்புள்ள மாமாவுக்கு ,
    செதில்கள் - Gills என்று தான் பதில் நமக்கு கிடைத்தது. நீங்கள் கூறினால் சரியாகத்தான்
    இருக்கும் ” செவிள்கள்” என்று திருத்திக்கொள்கிறோம்.
    நன்றி

    ReplyDelete
  7. Dear Winmani,

    VLC should not be used in Laptop's having single speaker or a low powered. It is warning from HP, If VLC is found used, they can't give warranty for the speakers. (Ref: Maha Electronics, Ramanathapuram, Coimbatore).

    I'm regular reader of your blog. Good effort. Keep continue.

    Regards,

    K.Babu

    ReplyDelete

Post Top Ad