அடுத்த திருவள்ளுவரை அங்கீகரிக்குமா தமிழக அரசு சிறப்பு பதிவு. - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Thursday, July 8, 2010

அடுத்த திருவள்ளுவரை அங்கீகரிக்குமா தமிழக அரசு சிறப்பு பதிவு.

திருக்குறளை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட திருவள்ளுவரின்
குறளுக்கு அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கம்
அளிக்கும் புதுக்குறளை தமிழக அரசு அங்கீகரிக்குமா இதைப்பற்றிய
சிறப்பு பதிவு.அறம் ,பொருள் ,இன்பம் என மூன்று பால்களிலும் மனிதன் எப்படி
வாழவேண்டும் என்று அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும்படி
திருக்குறளை நமக்காக தந்த திருவள்ளுவரின் பாதங்களை வணங்கி
தொடங்குகிறோம். திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு இதுவரை
200 -க்கும் மேற்ப்பட்ட விளக்க உரைகள் எழுதப்பட்டிருக்கின்றன
ஆனால் வெண்பா / மரபு இலக்கணத்தின் படி மிக எளிமையாக
அனைவருக்கும் புரியும் வண்ணம் புதிய குறள் வடிவமாகவே
விளக்க உரை அளித்துள்ளார் நண்பர் துரை என்பவர்.
தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் வசித்து வரும் இவர் ஆங்கில
வழியில் படித்து பொறியியல் வல்லுனரான பின்பு தமிழ் மேல்
கொண்ட அளவு கடந்த பற்றால் கடந்த 5 மாதம் தன் பணிகளுக்கு
இடையிலும் முழுமுயற்சியாக புதுக்குறள் 1330 -ஐயும் எழுதி
முடித்துள்ளார். கடந்த 2000 வருடங்களாக இதுவரை எவருமே
குறள் வடிவமாக விளக்கஉரை கொடுத்ததில்லை இதுவே
முதல்முயற்சி என்று எண்ணும் பொழுது ஆச்சரியமாகத்தான்
இருக்கிறது தமிழக முதல்வரிடம் இந்தப் படைப்பினை கொண்டு
சேர்க்க முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இவர்
செய்திருக்கும் இந்த புது முயற்சிக்கு தமிழர்கள் அனைவரின்
சார்பாக அன்பையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்ளுவோம்.
இவர் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இவருடைய
படைப்புகளை நம் தமிழக அரசு அங்கீகரிக்குமா என்பதை
பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். வின்மணியின் சார்பில்
இவரிடம் நாம் தொடர்பு கொண்டு இதைப்பற்றி கேட்டபோது
மலர்ந்த முகத்துடன் நமக்காக 1330 விளக்க குறள்களையும்
கொடுத்தார் அதிலிருந்து 20 குறள்களை இங்கு உதாரணமாக
அளித்துள்ளோம்

[caption id="attachment_2619" align="aligncenter" width="455" caption="அறத்துப்பால்"][/caption]

[caption id="attachment_2620" align="aligncenter" width="455" caption="பொருட்பால்"][/caption]

[caption id="attachment_2621" align="aligncenter" width="455" caption="பொருட்பால்"][/caption]

[caption id="attachment_2622" align="aligncenter" width="455" caption="இன்பத்துப்பால்"][/caption]

நண்பர் துரை அவர்களின் அலைபேசி எண் : + 91 9443337783
இமெயில் முகவரி : durai.kural@gmail.com
தமிழுக்காக இவர் செய்திருக்கும் இந்த புதிய முயற்சி வெற்றி
பெற்று புதிய விளக்க குறள் அனைத்து மக்களையும் சென்றடைய
வேண்டும் என்பதே வின்மணியின் நோக்கம்.
வின்மணி சிந்தனை
முயற்சி செய்து கடின வேலை செய்யும் மனிதன்
அந்த வேலை வெற்றியாக முடியும் போது கிடைக்கும்
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.மரங்களிளே மிக வேகமாக வளரும் மரம் எது?
2.இந்தியாவில் எத்தனை தேசிய பூங்காக்கள் உள்ளன ?
3.உலகத்திலே அதிக உயரயத்தில் உள்ள சாலை எது ?
4.விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி யார் ?
5.பெண்கள் விடுதலை இயக்கத்தின் பெயர் என்ன ?
6.அலெக்ஸாண்டர் எப்போது இறந்தார் ?  
7.ஒரு நாட்டின் கடல் மைலின் தூரம் எவ்வளவு ?
8.காசுகள் தயாரிக்க என்னென்ன உலோகங்கள் பயன்படுகின்றன ?
9.கல்கத்தாவை உருவாக்கியவர் யார் ?
10.டெலிபோன் இந்தியாவில் முதன் முதலாக எப்போது
ஆரம்பிக்கப்பட்டது ?

பதில்கள்:
1.யூகலிப்ட்ஸ், 2.36 தேசிய பூங்காக்கள்,3.லடாக்-கார்டங்
சாலை,4.வாலண்டினா டெரெஷ் கோவா,5.விமன்ஸ் லிப்,
6.கி.மு.323ல், 7.6080 அடி தொலைவு, 8.அலுமினியம்,
கப்ரோ நிக்கல்,ஸ்டெயின் லெஸ்ட் ஸ்டீல்,9.ஜாப் சார்னக்,
10.26-1-1888.

இன்று ஜூலை 7 
பெயர் : மகேந்திர சிங் தோனி,
பிறந்ததேதி : ஜூலை 7, 1981

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட்
கீப்பர் மற்றும் அதிரடி மட்டை வீச்சாளரும்
ஆவார்.இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பர்
மாதம் முதல் இந்திய அணிக்காக விளையாடி
வருகிறார். தற்போது இந்திய ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட
அணியின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.இந்திய
முதன்மைக் கூட்டிணைவில் சென்னை சூப்பர் கிங்ஸ்
அணித்தலைவராகவும் பொறுப்பாற்றி வருகிறார். சில
தினங்களுக்கு முன் இவருக்கு திருமணம் நடைபெற்றது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

16 comments:

 1. அன்புடன் வணக்கம் ,மிக அருமையான விளக்க உரை இரண்டு வரிகளில் நல்ல முயற்சி இதுக்கு மேல சொல்லுறதுக்கு எமக்கு தகுதி இல்லை என்னா அந்த அளவுக்கு ஒரு அறிவு திறன் வாழ்க...... எடுத்து பிரபலபடுத்திய உங்களுக்கு வாழ்த்துக்கள் ... ஏதாவது ஒரு பதிப்பகத்துக்கு சென்று புஸ்தக மாக வெளிட பற்றுங்கள் அரசியல் போனால் வெறுப்பும் ஏமாற்றமும் மிஞ்சும்..

  ReplyDelete
 2. மிகவும் நன்றாக உள்ளது. மீண்டும் ஒரு திருக்குற​ளைப் படித்தவுடன் மனதில் மிகவும் மகிழ்ச்சி, ​​தொடரட்டும் உங்கள் பணி.

  ReplyDelete
 3. @ முனைவர். கி. காளைராசன்
  மிக்க நன்றி

  ReplyDelete
 4. @ s.n.ganapathi
  மிக்க நன்றி

  ReplyDelete
 5. மிகவும் மகிழ்ச்சி

  ReplyDelete
 6. @ வாணி
  மிக்க நன்றி

  ReplyDelete
 7. முயற்சிக்கு வாழ்த்துகள்.(மெயில் அனுப்பி திரு.துரை அவர்களையும் வாழ்த்தி உள்ளேன்.)
  அறிமுக படுத்திய உங்களுக்கும் வாழ்த்துகள்

  அன்புடன்,
  இளமுருகன்
  நைஜீரியா

  ReplyDelete
 8. @ Elamurugan
  மிக்க நன்றி

  ReplyDelete
 9. முயற்ச்சிக்கு வாழ்த்துகள்!. ஆனால் இரண்டு வரியில் உலகம் அளந்த பெருமானின் குறளுக்கு பதிலாக புதிய குறள் ஒலிப்பது கடினம்!

  ReplyDelete
 10. @ ஜெகதீஸ்வரன்
  மிக்க நன்றி .

  ReplyDelete
 11. Really nice . Hope govt approve it.

  ReplyDelete
 12. @ vvickyy
  மிக்க நன்றி

  ReplyDelete
 13. நண்பர் துரைக்கு வலைப்பூவில் உலகம் அறிய விவரித்திருக்கிறீர்கள். இது எல்லா தமிழர்களையும் சென்றடைய வேண்டும். தமிழக அரசு இதனை அங்கீகரித்தால் உலகத் தமிழர்களின் அவா நிறைவடையும். உங்கள் வலைப்பக்கம் வாயிலாக நண்பர் துரைக்கு மலேசியத் தமிழர்கள் சார்பில் எனது பணிவான வணக்கமும் வாழ்த்துகளும்.

  ReplyDelete
 14. @ தணிகாசலம்
  மிக்க நன்றி

  ReplyDelete
 15. இரத்தினச்சுருக்க விளக்கவுரை,
  வெற்றி நிச்சயம்.
  வாழ்த்துக்கள்
  தொடரட்டும் தமிழ்ப்பணி
  ஆதி

  ReplyDelete
 16. @ ஆதி
  மிக்க நன்றி

  ReplyDelete

Post Top Ad