கணினியில் அதிவேகமாக தட்டச்சு செய்ய எளிமையான வழி - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, July 7, 2010

கணினியில் அதிவேகமாக தட்டச்சு செய்ய எளிமையான வழி

கணினியில் வேகமாக தட்டச்சு செய்ய வேண்டும் என்றால் தட்டச்சு
வகுப்புக்கு சென்று படித்தால் தான் வரும் என்றெல்லாம் இல்லை
சிலவகை எளிய வழி முறைகள் மூலமும் நாமும் எளிதாக
வேகமாக தட்டச்சு செய்யலாம் எப்படி என்பதைப்பற்றித் தான்
இந்தப் பதிவு.ஆன்லைன் மூலம் தட்டச்சு படிக்கலாம் என்று சொல்லி எத்தனையோ
இணையதளங்கள் வந்தாலும் சற்று வித்தியாசமாகவும் புதுமையாகவும்
வார்த்தை விளையாட்டு மூலமும் நாம் எளிதாக தட்டச்சு படிக்கலாம்.
கணினியில் வேகமாக தட்டச்சு செய்ய வேண்டும் என்ற எண்ணம்
உள்ள யாரும் இந்த தளத்தைப்பயன்படுத்தி வேகமாக தட்டச்சு
செய்யலாம் என்ற கொள்கையுடன் வலம் வருகிறது.

வெவ்வெறு வகையான பயிற்ச்சிகள் எந்த மொழியை வேண்டுமானலும்
எளிதாக தட்டச்சு செய்து பழகலாம் ( தமிழ் மொழி இல்லை).
வேடிக்கையும் வித்தியாசமாகவும் தட்டச்சு பழகலாம் குழந்தைகள்
முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் புரிந்து தட்டச்சு
செய்யும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. தட்டச்சு பலைகையில்
விரல்களை எப்படி வைக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து
அத்தனையும் சிறப்பாக சொல்லிக்கொடுக்கின்றனர். சில நாட்கள்
முழுமையாக பயன்படுத்தினால் நாமும் தட்டச்சு செய்வதில்
வல்லவர்களாக மாறலாம்.

இணையதள முகவரி :  http://www.sense-lang.org
வின்மணி சிந்தனை
எளியவர்கள் போல் இருப்பவர்களை தயவு செய்து
தொந்தரவு செய்யாதீர்கள் அவர்கள் மனம் புண்படும் படி
பேசாதீர்கள். அவர்கள் மனம் கஷ்டப்பட்டால் நம் வாழ்வு
செழிப்பாக இருக்காது.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.தமிழில் தோன்றிய முதல் அகராதி எது ?
2.இந்தியாவில் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்ச்சாலை எங்கு
 எப்போது ஆரம்பிக்கப்பட்டது ?
3.ஜப்பானின் தேசிய விளையாட்டு என்ன ?
4.கண் இமைக்கும் நேரம் எவ்வளவு ?
5.வீனஸ் கோள் ஒரு சுற்றுக்கு எத்தனை நாள்
எடுத்துக்கொள்கிறது ?
6.குளிக்கும் போது மனிதத்தோல் எவ்வளவு தண்ணிரை உறீஞ்சும்?
7.உலகிலேயே அதிக சிலைகள் யாருக்கு நிறுவப்பட்டது ?
8.நீக்ரோ நதி என்னும் நதி எந்த நாட்டில் ஒடுகிறது ?
9.இந்தியாவில் கடலை உற்பத்தியின் இதயம் எது ?
10.இந்தியாவின் முதல் இரயில் எப்போது ஓடத்தொடங்கியது?

பதில்கள்:
1.சதுரகராதி, 2.1921 -கல்கத்தாவில்,3.பேஸ்பால் ,
4.3/10 வினாடிகள்,5.243 நாட்கள், 6.50கிராம்,
7.லெனின், 8.கொலம்பியா,9.செளராஷ்டிரா,
10.26-1-1853.

இன்று ஜூலை 6  
பெயர் : பரிதிமாற் கலைஞர்,
பிறந்ததேதி : ஜூலை 6, 1870

ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும்,
தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான
பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார்.
இவர் உயரிய செந்தமிழ் நடையில்
பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை
சான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு
நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக
நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும்
இயற்றிவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

5 comments:

 1. புதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து

  ReplyDelete
 2. வணக்கம் நண்பரே..
  வலது பக்கம் மேல் இருக்கும் “ தினமும் பதிவுகள இமெயில் மூலம் பெறுங்கள்” என்பதி
  உங்கள் இமெயில் முகவரியை கொடுங்கள்.
  நன்றி

  ReplyDelete
 3. mobail modl e 63 tamil font eppadi down load saivadu

  ReplyDelete

Post Top Ad