47 மில்லியன் வழிகாட்டி புத்தகங்களை ஒரே இடத்தில் இருந்து தேடலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, July 25, 2010

47 மில்லியன் வழிகாட்டி புத்தகங்களை ஒரே இடத்தில் இருந்து தேடலாம்.

புத்தகங்களை இணையத்தில் தேடுவது எளிதான காரியம் என்றாலும்
இங்கே ஒன்றல்ல இரண்டல்ல 47 மில்லியன் புத்தகங்களை ஒரே
இடத்தில் இருந்து தேடலாம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.



எந்த புத்தகம் வேண்டும் , புத்தகத்தைப்பற்றிய எந்த விபரம் உங்களுக்குத்
தெரியும் இது மட்டும் போதும் இனி அந்த புத்தகம் சில நிமிடங்களில்
உங்கள் கையில் சற்றே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. காலத்தின்
வேகமான மாற்றம் தான் இந்தத் தளத்திற்குச் சென்று நாம் எளிதாகத்
தேடலாம்.
இணையதள முகவரி : http://theguidedb.com



தேடவேண்டிய புத்தகத்தின் பெயரை மட்டும் கொடுத்து Search என்ற
பொத்தானை அழுத்தினால் மட்டும் போதும் உடனடியாக நமக்கு
இலட்சக்கணக்கான புத்தகங்களை கொட்டிக் கொடுக்கிறது. மற்ற
தளங்களை விட இந்தத் தளத்தில் இருந்து கொண்டே வேறு எந்தத்
தளத்திற்கும் செல்லாமல் நேரடியாக புத்தகங்களை தரவிரக்கலாம்.
உதாரணமாக நாம் Java என்பதை கொடுத்து தேடினோம். வரும்
முடிவை படம் -2ல் காட்டியுள்ளோம். இதிலிருக்கும் Download என்ற
பொத்தானை அழுத்தி நாம் நேரடியாக தரவிரக்கலாம். கண்டிப்பாக
இந்தத் தளம் மாணவர்கள் , ஆசிரியர்கள் என அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
நல்ல காரியம் செய்ய வேண்டும் சில நேரங்களில் நாம் செய்யும்
முயற்சி வெற்றி இழுபறியாக இருந்தாலும் முடிவில் வெற்றி
கண்டிப்பாக கிடைக்கும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.தாஜ்மஹால் கட்டப்பட்ட காலம் எது ?
2.தமிழ்நாட்டில் எந்த வகை மரம் அதிக அளவில் காகிதம்
செய்யப் பயன்படுகிறது ?
3.நாரிலிருந்து காகிதம் தயாரிப்பது எந்த நாட்டில்
கண்டுபிடிக்கப்பட்டது ?
4.பாபா அணு ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது ?
5.’காந்தி’ திரைப்படத்தை தயாரித்தவர் யார் ?
6.1951-1952-ல் ஆசிய விளையாட்டுப்போட்டி எங்கு
நடைபெற்றது?
7.’கிரிக்கெட் மை ஸ்டைல் ‘ என்ற நூலின் ஆசிரியர் யார்?
8.வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் எது ?
9.’அர்ஜூனா ‘ பதக்கம் எந்தத் துறையில் இருப்பவருக்கு
வழங்கப்பப்படுகிறது ?
10.இந்தியாவில் தேக்கு மரம் எங்கு அதிகமாக கிடைக்கிறது ?

பதில்கள்:
1.கி.பி. 16 ஆம் நூற்றாண்டு, 2.யூகலிப்டஸ்,3.எகிப்து,
4.மும்பை,5.ரிச்சர்டு அட்டன்பரோ, 6.டெல்லி,
7.கபில்தேவ்,8.கயத்தாறு, 9.விளையாட்டுத்துறை,10.கேரளா

இன்று ஜூலை 25 
பெயர் : ஜிம் கார்பெட்,
பிறந்ததேதி : ஜூலை 25, 1875

புகழ்பெற்ற புலி வேட்டைக்காரர், இமயமலைத்
தொடரில் உள்ள குமாவுன் மலையில்
அமைந்துள்ள கோடைவாழிடமான நைனி தாலில்
பிறந்தவர்.ஆங்கில வம்சாவளியினர்.
இயற்கையைப் பேணுவதில்ஆர்வம் மிகக்கொண்டிருந்தவர்.
புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் பற்றிய இவரது
நூல்களுக்காகப் புகழ்பெற்றவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

6 comments:

  1. superb.. u always rocks..

    velai vaaipu seidihal patri oru pathivu idavum

    ReplyDelete
  2. @ inamul
    மிக்க நன்றி
    விரைவில் இடுகிறோம்.

    ReplyDelete
  3. தாமஸ் ரூபன்July 27, 2010 at 9:23 AM

    பயனுள்ள தகவல், இந்த தளம் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி சார் ...

    ReplyDelete
  4. @ தாமஸ் ரூபன்
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad