அடோப் பிளாஷ் முப்பரிமானத்தில்(3D) மிரட்ட வருகிறது. - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Friday, July 9, 2010

அடோப் பிளாஷ் முப்பரிமானத்தில்(3D) மிரட்ட வருகிறது.

அடோப் நிறுவனத்திலிருந்து வெளிவர இருக்கும் பிளாஷ் இனி
முப்ப்பரிமானத்தில் நம்மை மகிழ்விக்க இருக்கிறது இதைப்பற்றிய
சிறப்பு பதிவு.



அடோப் நிறுவனத்தில் இருந்து வெளிவந்த எல்லா மென்பொருளும்
கிராபிக்ஸ்-ல் தனக்கென்று தனி இடம் பிடித்து சிறப்பான
மென்பொருளாக வலம் வருகிறது. அடோப் -ன் இந்த கூட்டனிக்கு
மேலும் பலம் சேர்க்கும் விதமாக அடுத்த தொழில்நுட்ப புரட்சிக்கு
ஆயத்தமாக முப்பரிமானத்தை (3D) அடோப் பிளாஷ் மென்பொருளில்
சேர்க்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்க்காக 3D முப்பரிமான
கண்ணாடி ஒன்றும் வெளியீட இருக்கிறது. பிளாஷ்-ல் 3D ஐ
சேர்ப்பதால் மேலும் பல முப்பரிமான கலைஞர்கள் உருவாகலாம்.



இதற்காக வித்தியாசமான 3D பிளாஷ் பிளேயர் பிளக்ன்ஸ் வர
இருக்கிறது இதை நம் உலாவியில் சேர்த்தால் முப்பரிமான
இணையதளங்களை பிரம்மாண்டமாக 3D- யிலே பார்க்கலாம்.
2010 அக்டோபர் மாதம் 27ம் தேதி  காலை 11:00AM மணிக்கு
அடுத்த தலைமுறைக்கான 3D API  சிறப்பு கலந்தாய்வு கூட்டம்
அடோப் பிளாஷ் பொறியியல் வல்லுனர்களின் தலைமையில்
நடக்க இருக்கிறது.
வின்மணி சிந்தனை
அதிகம் கோபம் கொள்ளாமல் இருப்பவன் தனக்கு
மட்டுமல்ல அடுத்தவர் மனதுக்கும் துன்பம் கொடுப்பதில்லை.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.உலகிலேயே பனி ஆறுகள் அதிகம் பாயும் பகுதி எது ?
அதன் நீளம் என்ன ?
2.பாரீஸ் பல்கலைக்கழகம் எப்போது தொடங்கப்பட்டது ?
3.உலகின் முதல் மருத்துவ பத்திரிகையின் பெயர் என்ன ?
4.குழந்தைகள் ஆரோக்கியமாக வளர எந்த சத்து அதிகமாக
 தேவை ?
5.அசோக சக்கரவர்த்தி எத்தனை புத்த ஆலயங்களை கட்டினார்?
6.ஆபாசமாக எழுதுவது,பிறரை கேவலமாக பேசுவது பழக்கமாக
கொண்டவர்களுக்கு என்ன பெயர் ?  
7.இந்தியாவின் முழு பரப்பளவு என்ன ?
8.ஃபிஜி நாட்டின் தலைநகரின் பெயர் என்ன ?
9.பாலிற்க்கு வெண்மை நிறம் கொடுக்கும் பொருள் எது ?
10.உலகப் புகழ்பெற்ற ராயல் அகடமியின் முதல் தலைவர் யார்?

பதில்கள்:
1.இமயமலை, 2.கி.பி.1200, 3.மெடிசினா குரிஸோ,
4.புரோட்டீன்,5.84,000 கோயில்கள், 6.ஸ்கேவஞ்சர்,
7.3,2,87263 ச.கி.மீ, 8.சுவா,9.காரோட்டின்,10.ஜோஸ்வா
ரெய்னால்ட்ஸ்.

இன்று ஜூலை 8 
பெயர் : ராஜசேகர ரெட்டி,
பிறந்ததேதி : ஜூலை 8, 1949

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த
இந்திய அரசியல்வாதியாகவும், ஆந்திரப்
பிரதேசத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்.
இந்திய மக்களவைக்கு நான்கு முறையும்
ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்துக்கு நான்கு முறையும்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

2 comments:

  1. நல்ல தகவல் வின்மணி நன்றி

    பி.கு
    பொதுவாக இந்த 3D கண்ணாடியின் பார்வை பகுதியின் வண்ணம் வல பக்கம் நீல நிறமும் இட பக்கம் சிகப்பு நிறமாக அமைப்பது எதற்காக? இதற்கு ஏதாவது காரணம் உண்டா? பல நாள் சந்தேகம்.

    ஏன் ஒரே வண்ணத்தை பயன்படுத்த கூடாது?
    உ.ம் - நீலம் - நீலம் அல்லது சிகப்பு - சிகப்பு

    ReplyDelete
  2. @ ♠புதுவை சிவா♠
    நண்பருக்கு இரண்டுக்கும் ஒரே கலர் பயன்படுத்தலாம் தப்பில்லை.
    கொஞ்சம் கவர்ச்சியாக இருக்கட்டுமேன்னு இவங்க இப்படி போடுறாங்க..
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad