நம் இணையதளத்துக்கு வார்த்தை மேகம் எளிதாக உருவாக்கலாம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, June 28, 2010

நம் இணையதளத்துக்கு வார்த்தை மேகம் எளிதாக உருவாக்கலாம்

நம் இணையதளத்தின் குறிஞ்சொற்களைக்கொண்டு ஆன்லைன் மூலம்
வார்த்தை மேகம் எளிதாக உருவாக்கலாம் எப்படி என்பதைப்பற்றி தான்
இந்த பதிவு.



நம் இணையதளத்தின் முக்கிய குறிஞ்சொற்களை வைத்து வார்த்தை
மேகம் உருவாக்கலாம் அதுவும் சில நிமிடங்களில் அனைத்து
வார்த்தைகளையும் மொத்தமாக ஒரே கட்டத்திற்க்குள் இட்டு நம்
தளத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் வாசகர்களுக்கு எளிதாக
காட்டலாம். இதற்க்காக ஒரு இணையதளம் உள்ளது.இணையதளத்தில்
வலைமேகம் உருவாக்க பல இலவச இணையதளங்கள் இருந்தாலும்
இந்த் தளத்தில் நாம் கொடுக்கும் வார்த்தைகளை கூகுள் மற்றும்
யாகூ ,பிங் போன்ற தேடுபொறிகளில் கொடுத்தால் எளிதாக நம்
தளத்திற்க்கு அதிக வாசகர்களை பெற்று கொடுக்கும் என்பதில் எந்த
சந்தேகமும் இல்லை.



இணையதள முகவரி : http://worditout.com/word-cloud/make-a-new-one

இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் புதிதாக நம் வலைப்பூவிற்க்கு
என்று தனியாக ஒரு வலை மேகம் உருவாக்கலாம். நம் தளத்திற்க்கு
தேவையான கலர் மற்றும் பிடித்த font போன்றவற்றையும் எளிதாக
தேர்ந்தெடுக்கலாம். save என்ற பொத்தானை அழுத்தி நம் வலை
மேகத்தை ஆன்லைன் -ல் சேமித்து வைத்து நம் தளத்தில்
பயன்படுத்தலாம். கண்டிப்பாக இந்த இணையதளம் நமக்கு
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
சில மனிதர்களிடம் அன்பாக பேசும் போது கிடைக்கும்
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எதிர்பாரத நண்பர்களிடம்
பேசும் மகிழ்ச்சியை போன்றது.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.குளிர் பாலைவனம் என்று அழைக்கப்படும் பகுதி எது ?
2.இந்திய நிலப்பரப்பில் காடுகளின் சதவீதம் என்ன ?
3.ஜப்பான் பார்லிமண்டின் பெயர் என்ன ?
4.உலகின் மிகச்சிறிய கடல் எது ?
5.நீரிழிவு நோயால் எதன் பற்றாக்குறை வருகிறது ?
6.காற்றின் வேகத்தை அளக்க உதவும் கருவியின் பெயர் என்ன ?
7.இந்தியாவில் விமானங்கள் செய்யும் இடம் எது  ?
8.இந்தியக்கொடியின் நீள அகலங்கள் என்ன ?
9.சூரிய ஒளி பூமியை அடைவதற்க்கு எடுத்துக்கொள்ளும்
நேரம் என்ன ?
10.இந்திய குடும்பப்பெண்ணிற்க்கு தேவைப்படும் எரிசக்தியின்
அளவு என்ன ?

பதில்கள்:
1.காஷ்மீர் - லடாக், 2.23%,3.டயட்,4.ஆர்டிக் கடல்,
5.இன்சுலின், 6.அனிமோ மீட்டர்,7.கான்பூர்/ பெங்களூர்,
8.3:2,9.8.3 நிமிடங்கள்,10.1500 - 2500 கலேரிகள்.

இன்று ஜூன் 27 
பெயர் : அகிலன் ,
பிறந்த தேதி : ஜூன் 27, 1922

புதின ஆசிரியராக, சிறுகதையாளராக,
நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக,
மொழிப்பெயர்பாளராக, கட்டுரையாளராக
சிறப்புப் பெற்ற தமிழ் எழுத்தாளர். சித்திரப்பாவை
நூலுக்காக, 1975ஆம்  ஆண்டின் ஞான பீட விருது பெற்றார்.
இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

5 comments:

  1. Really Super collection mr.mani, post like this post

    ReplyDelete
  2. தமிழ் வலைப்பதிவுக்கு இவ்வசதி பொருந்துமா நண்பரே..?

    ReplyDelete
  3. @ deepakaran
    நன்றி தீபா....

    ReplyDelete
  4. @ முனைவர்.இரா.குணசீலன்
    தமிழ் வலைப்பதிவுக்கு இந்த வசதி பொருந்தவில்லை நண்பரே...

    ReplyDelete
  5. @ aayiraththiloruvan
    நன்றி

    ReplyDelete

Post Top Ad