இயந்திரவியல் வல்லுனர்கள் வடிவமைத்துள்ளனர் இதைப் பற்றிய
சிறப்பு பதிவு.
மரங்களை கொண்டு கார் வடிவமைக்கமுடியுமா என்ற நெடுநாள்
கேள்விக்கு இயந்திரவியல் வல்லுனர்கள் புதிதாக மரங்களை கொண்டு
கார் வடிவமைத்து காட்டி பதில் அளித்துள்ளனர். தரமான நல்ல
மரங்களின் பலகைகளை கொண்டும், டயர், லைட், கண்ணாடி தவிர
மற்ற பாகங்கள் எல்லாம் மரத்தினால் உள்ளது. காரின் வேகமும்
அதிகமாகத்தான் உள்ளது. கூடவே மரத்தினால் உருவாக்கப்பட்ட
கார் பாதுகாப்பில் முதலிடம் பிடிக்கிறது. காரின் மேற்கூரையில்
இருக்கும் பலகையால் அதிகமான வெயில் தாக்கம் நம்மை
நெருங்குவதில்லை. கார் சுவற்றில் இடித்தால் கூட சாதாரன காருக்கு
ஏற்படும் பாதிப்பை காட்டிலும் குறைவாகவே ஏற்படுகிறது.
வின்மணி சிந்தனை
யாருக்கும் தொந்தரவு கொடுக்காதீர்கள் அன்பாக ஒரு புன்னகை
புரியுங்கள் எல்லாவற்றையும் விட மிகச்சிறந்த மனிதநேயம்
நம்மிடம் வளரும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.காரை கண்டுபிடித்தவரின் பெயர் என்ன ?
2.தலைமுடி ஏற்றுமதியில் முன்னனியில் உள்ள நாடு எது ?
3.காகிதம் தயாரிக்கும் இயந்திரம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது ?
4.சுப்ரிம் கோர்ட் பெஞ்ச்சில் இடம் பெற்ற முதல் பெண் நீதிபதி
யார் ?
5.உலகின் மிகச்சிறிய குடியரசு நாட்டின் பெயர் என்ன ?
6.இந்தியாவின் முதல் பேராசியர் யார் ?
7.ஆகாய கப்பலை உருவாக்கியவர் யார் ?
8.எலக்ட்ரான் மின்னணு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது ?
9.இந்தியாவின் முதல் பெண் வங்கி மேலாளர் யார் ?
10.இந்திய ரிசர்வ் வங்கி எப்போது ஆரம்பிக்கப்பட்டது ?
பதில்கள்:
1.குகாட், 2.சீனா,3.1804 ஆம் ஆண்டு,4.நீதிபதி பாத்திமா பீவி
5.நெளரு குடியரசு,6.தாதாபாய் நெளரோஜ்,7.செப்பலின்,
8.1897ஆம் ஆண்டு,9.சாந்தா குமாரி,10.1935
இன்று ஜூன் 26
பெயர் : பெர்ல் பக் ,
பிறந்த தேதி : ஜூன் 26, 1892
பெர்ல் பக் என்னும் பெண்மணி ஒரு புகழ்
பெற்ற அமெரிக்க புதின எழுத்தாளர்
(நாவலாசிரியர்).இவர் 1932 ஆம் ஆண்டில்
புலிட்சர் பரிசும், 1938 ஆம் ஆண்டில்
நோபல் பரிசும் பெற்ற எழுத்தாளர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
No comments:
Post a Comment