பழைய அட்டையில் லேப்டாப் கணினி உருவாக்கும் புதிய அதிசயம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Friday, June 25, 2010

பழைய அட்டையில் லேப்டாப் கணினி உருவாக்கும் புதிய அதிசயம்

பழைய அட்டைகளை தூக்கி எறியாமல் அதைக்கொண்டு புதிதாக
லேப்டாப் கணி ஒன்றை உருவாக்கியுள்ளனர் இதைப்பற்றி தான்
இந்த பதிவு.தொழில் நுட்பத்தில் தினமும் நடக்கும் மாற்றம் நம்மை வியப்பின்
உச்சிக்கே கொண்டு செல்கிறது என்றால் மிகையாகாது அந்த வகையில்
இப்போது பழைய கடையில் போடும் அட்டைகளை கொண்டு அழகான
எங்கும் எளிதாக தூக்கி செல்லும் லேப்டாப்பை (மடிக்கணினி)-யை
விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.என்னதான் நடக்கிறது. எடை மிக
மிக குறைவு. எங்கும் கோப்பு கொண்டு செல்வது போல் கொண்டு
செல்லலாம். கையால் அட்டையில் உள்ள கீபோர்டில் தொட்டாலே
போதும் இன்புட் அதன் வழியாக எடுத்துக்கொள்கிறது. இந்த
மடிக்கணினியின் திரை நீலத்திரை (Blue Screen) கொண்டு
உருவாகப்ப்பட்டுள்ளது இதிலும் நாம் மற்ற லேப்டாப்களில்
என்னவெல்லாம் செய்யலாமோ அதை எல்லாம் செய்யலாம்.

ஆனால் DVD Drive நாம் External USB மூலம் வெளியில் மாட்டி
பயன்படுத்தாலம்.இதன் விலை இன்னும் நிர்யணம் செய்யப்பட
வில்லை. இது எப்படி உருவாக்கப்படுகிறது என்பதை பற்றிய
படத்தை இத்துடன் இணைத்துள்ளோம்.
வின்மணி சிந்தனை
நல்வர்கள் பணத்தையும் பொருளையும் பெரிதாக
நினைப்பதில்லை , நல்ல மனதை மட்டுமே மற்றவர்களிடம்
எதிர்பார்க்கின்றனர்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.கடல் நீரில் இருக்கும் உப்பின் அளவென்ன?
2.இந்தியாவில் மிகவும் பரபரப்பான விமான நிலையம் எது ?
3.போலந்து நாட்டைத் தவிர வேறெங்குமே இல்லாத நோய் எது ?
4.எந்த ஆண்டு முதன் முறையாக தந்தி மூலம் செய்தி
அனுப்பபட்டது ?
5.உலகின் மிகப்பெரிய தொழிற்சங்கம் எது ?
6.மிக அதிக நீள சாலைகள் உள்ள நாடு எது ?
7.இந்தியாவின் மொத்தப் பரப்பளவு என்ன ?
8.அறுவைசிகிச்சையில் தையல் முறையை கண்டுபிடித்தவர் யார்?
9.மைக்ராஸ்கோப்பை கண்டிபிடித்தவர் யார் ?
10.எந்த நாட்டவர்களால் குண்டுசி கண்டுபிடிக்கப்பட்டது ?

பதில்கள்:
1.2.30%, 2.பம்பாய் விமான நிலையம் ,3.Pica polonica
4.1844,5.போலந்து சாடாரிட்டி,6.பெல்ஜியம்
7.32,87,863,8.டாக்டர் ஆம்ரூஸ் பாரே,
9.நெதர்லாந்து z.ஜான்சன்,10.எகிப்து.

இன்று ஜூன் 25 
பெயர் : வி. பி. சிங் ,
பிறந்த தேதி : ஜூன் 25, 1931

இந்திய குடியரசின் 10 வது பிரதமர் ஆவார்.
இவர் வி. பி. சிங் என அறியப்படுபவர்.
அப்போது அணுசக்தி விஞ்ஞானத்தில் மிகுந்த
ஆர்வம் கொண்டிருந்த வி.பி.சிங் கல்லூரியில்
சிறந்த மாணவராகவும் தேர்ச்சி பெற்றார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

11 comments:

 1. //மறைந்த தேதி : ஜூன் 25, 1931
  //

  தகவல் பிழை

  ReplyDelete
 2. Hi Winmani,

  Please correct the "மறைந்த தேதி" for V.P. Singh. It has to be Birth date...

  Regards,
  Senthil...

  ReplyDelete
 3. அருமை!

  - ஜெகதீஸ்வரன்!

  ReplyDelete
 4. @ கோவி.கண்ணன்
  நன்றி , திருத்தியாகிவிட்டது.

  ReplyDelete
 5. @ Senthil
  நன்றி , திருத்தியாகிவிட்டது.

  ReplyDelete
 6. @ ஜெகதீஸ்வரன்
  நன்றி

  ReplyDelete
 7. உலக வெப்பமயமாகும் நேரத்தில் இது சிறந்த பதிவு

  ReplyDelete
 8. @ உமாபதி
  மிக்க நன்றி

  ReplyDelete
 9. மிகவும் உபயோகமான தகவல். நமக்கு எப்போது கிடைக்குமோ அந்த அட்டைக்கணிணி.

  ReplyDelete
 10. @ neelavannan
  விரைவில் நமக்கு கிடைக்கும்.
  நன்றி

  ReplyDelete
 11. மறுமொழிக்கும் கூட உடனுக்குடன் மறுமொழியா? தங்கள் பொறுப்புணர்ச்சி வாழ்க!

  ReplyDelete

Post Top Ad