இணைந்தே ஒரு கருவி வந்துள்ளது இதைப்பற்றி தான் இந்த பதிவு.
ஆங்கில வார்த்தைகளை நமக்கு தகுந்த விதத்தில் மாற்றி அமைக்க
பல மென்பொருள்கள் வந்தாலும் மைக்ரோசாப்ட் வேர்ட் போன்ற
மென்பொருள்கள் இல்லாத கணினியில் ஆன்லைன் மூலம் எளிதாக
நாம் நம் ஆங்கில வார்த்தைகளை ஒழுங்கு படுத்தலாம்.முதல்வார்த்தை
பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகளுக்கு இடையில்
எவ்வளவு இடைவெளி தேவை மற்றும் எல்லா எழுத்துக்களையும்
பெரியஎழுத்தாக மாற்ற வேண்டுமா அல்லது எல்லா எழுத்துக்களையும்
சிறிய எழுத்தாக மாற்ற வேண்டுமா,தட்டச்சு செய்து நாம் கட்டத்திற்க்குள்
கொடுத்திருக்கும் வார்த்தையில் குறிப்பிட்ட வார்த்தையை எங்கு
இருந்தாலும் அதை உடனடியாக நீக்கலாம். ஆங்கில எழுத்துக்கள்,
எண்கள், சிறப்பு எண்கள், இடைவெளி என அத்தனையுமே நாம் நீக்க
விரும்பினால் ஒரே சொடுக்கில் நீக்கலாம். இதையெல்லாம் விட நாம்
வேர்டில் என்ன செய்கிறோமோ அத்தனையுமே ஆன்லைன் மூலம்
செய்வதற்க்கு பல இணையதளங்கள் இருந்தாலும் மற்ற தளங்களை
போல் இணையபக்கம் லோட் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்
வதில்லை என்பது கூடுதல் சிறப்பு.
இணையதள முகவரி : http://www.goformat.com
வின்மணி சிந்தனை
65 வயதை தாண்டியபின் எதுவும் மனிதன் விருப்படி
நடக்கவில்லை இது நன்றாக தெரிந்தும் அடுத்தவனுக்கு
துன்பம் கொடுத்து தான் அன்பான வாழ்கையில் இருந்து
விலகுகிறான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.புராண காலத்தில் யமுனா நதிக்கரையில் இருந்த நாடு எது ?
2.நடுப்பகலில் மலரும் மலர் எது ?
3.’ஆக்ஸ்போர்டு பழ்கலைக் கழகம்’ எங்குள்ளது ?
4.மகாத்மா காந்தி முதலில் மேற்கொண்ட தொழில் யாது ?
5.கொய்ணா மருந்து குணப்படுத்தும் நோய் எது ?
6.பருத்தி உற்பத்திக்கு ஏற்ற மண் எது ?
7.கையில் எப்போதும் கரும்புடன் காணப்படும் சித்தர் யார்?
8.உலகமொழிகளில் வடமிருந்து இடமாக எழுதப்படும் மொழி எது?
9.சிகாகோவின் புனைப்பெயர் எது ?
10.தக்காண பீடபூமி வடிவம் யாது ?
பதில்கள்:
1.மதுரா, 2.பாதிரி,3.இங்கிலாந்து,4.வழக்கறிஞர்,
5.மலேரியா, 6.கரிசல் மண்,7.பட்டினத்தார்,
8.உருது,9.புயலடிக்கும் நகரம்,10.முக்கோணம்
இன்று ஜூன் 15
பெயர் : உமர் தம்பி
பிறந்த தேதி : ஜூன் 15, 1953
தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை
வழங்கிய ஆளுமைகளுள் ஒருவராவார்.இவர்
கணினியிலும் இணையத்திலும் தமிழை
பயன்படுத்துவதற்கு உதவக்கூடிய பல
செயலிகளையும் கருவிகளையும், எழுத்துருக்களையும்
ஆக்கியளித்துள்ளார். தமிழ் இணையம் இருக்கும் வரை
உங்கள் பெயர் நிலைத்து இருக்கும் நன்றி.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
உங்களின் இன்றைய சிந்தனை சிறந்தவற்றுள்
ReplyDeleteநண்பரே. உண்மையில் 65 மட்டுமல்ல அதற்கு
முன்னரும் நாம் விரும்பியது நடந்துவிடும்
என்பதற்கு எந்த அறிதிப்பாடும் இல்லையே.
தொடருங்கள்.
அன்புடன்,
கு.தணிகாசலம்.
மிக்க பயனுள்ள தகவல்
ReplyDeleteநன்றி வின்மணி :)
என்றும் உங்கள் அருண் பிரசங்கி
good good. நல்ல பதிவு... இனிமேல் பயன்படுத்திவிட வேண்டியது தான். நன்றி.
ReplyDelete---
ராம்.
@ தணிகாசலம்
ReplyDeleteமிக்க நன்றி
@ அருண் பிரசங்கி
ReplyDeleteமிக்க நன்றி
@ Ram
ReplyDeleteநன்றி
wnmani thozhil nutpa seythikal arumai- meeraprian
ReplyDelete