3D விளையாட்டை எந்த கண்ணாடியும் அணியாமல் பார்க்கலாம் புதிய அதிசயம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, June 16, 2010

3D விளையாட்டை எந்த கண்ணாடியும் அணியாமல் பார்க்கலாம் புதிய அதிசயம்

முப்பரிமாண விளையாட்டை  இந்த கண்ணாடி போட்டு தான் பார்க்க
வேண்டும் என்ற காலம் எல்லாம் மாறி இப்போது எந்த கண்ணாடியும்
அணியாமல் பார்க்கலாம் இதைப்பற்றிய சிறப்பு பதிவு.

முப்பரிமாண திரை நம் சாதரன கண்ணால் பார்க்க முடியும் என்று
நிரூபித்து புதிய 3D விளையாட்டு சாதனம் ஒன்றை
உருவாக்கியுள்ளனர். எந்த கண்ணாடியும் அணியாமல் நாம் 3டி
Visual Effects -ல் பார்க்கலாம் நிண்டென்டூ (Nintendo 3DS) என்று
பெயரீட்டுள்ள இந்த சாதனம் நம் கையடக்க மொபைல் போன்று
இருக்கிறது.இதில் விளையாடும் 3D விளையாட்டை எந்த கண்ணாடியும்
அணியாமல் வெறும் கண்ணால் நேரடியாக பார்க்கலாம். ஒரு குட்டி
லேட்ப்டாப் (மடிக்கணினி) எப்படி இருக்குமோ அதே போன்று தோற்றம்
அளிக்கிறது. விரைவில் இதனுடன் 3டி -யில் வெளிவந்த
திரைபடங்களை கூட பார்க்க முடியும் அள்விற்க்கு இதன் வளர்ச்சி
இருக்கும் என்றும் கூறி உள்ளனர். இதைப்பற்றிய சிறப்பு அறிமுக
வீடியோவையும்  இத்துடன் இணைத்துள்ளோம்.


வின்மணி சிந்தனை
குழந்தைகள் நம்மிடம் பேசும் போது சில நேரங்களில்
நம் மனதை காயப்படுத்தி இருந்தால் மன்னியுங்கள்
அவர்கள் நன்றாக வளர வேண்டிய மனிதமரம்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.பெண் கழுதையை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கிறார்கள் ?
2.பிரிட்டிஷின் முதல் பிரதமர் யார் ?
3.ஈராக்கின் பழைய பெயர் என்ன ?
4.இந்தியவிற்கு தக்காளியின் உபயோகம் எப்போது தெரியவந்தது?
5.எகிப்தியர்கள் உருவாக்கிய முதல் கப்பலின் நீளம் என்ன ?
6.இஸ்ரேல் நாட்டில் புத்தாண்டு எந்த மாதத்தில்
தொடங்கப்படுகிறது?
7.போலீஸ்காரர்கள் ஊர்எல்லைக்குள் வர அனுமதிக்காத நாடு எது?
8.உலகின் முதல் மாதஇதழ் எங்கு எப்போது அறிமுகமானது ?
9.18 வயதிற்க்கு உட்பட்டவர்கள் சினிமா பார்க்க தடை
விதித்துள்ள நாடு எது ?
10.இந்தியாவின் மிகப்பழமையான கால் பந்தாட்டக் கழகம் எது?

பதில்கள்:
1.ஜென்னி, 2.ராபர்ட் வால்போல்,3.மெசபடோமியா,
4.1925 ஆம் ஆண்டு,5.100 அடி, 6.செப்டம்பர்,7.பிலிப்பைன்ஸ்,
8.1584-ல் ஜெர்மனியில்,9.ஜெனிவா,10.மோகன் பகான்

இன்று ஜூன் 16 
பெயர் : சித்தரஞ்சன் தாஸ் ,
மறைந்த தேதி : ஜூன் 16, 1925

இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய
பங்கை ஆற்றியவர்.இங்கிலாந்தில் சட்டக்கல்வி
கல்வி கற்றவர்,1909-ல்அலிப்பூர் குண்டுவெடிப்பு
வழக்கில் அரவிந்தருக்கு ஆதரவாக வெற்றிகரமாக
வாதாடினார்.ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து பிரிட்டனின்
ஆடைகளைப் புறக்கணிக்க முன்னின்று உழைத்தார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

4 comments:

 1. //குழந்தைகள் நம்மிடம் பேசும் போது சில நேரங்களில்
  நம் மனதை காயப்படுத்தி இருந்தால் மன்னியுங்கள்
  அவர்கள் நன்றாக வளர வேண்டிய மனிதமரம்//

  அனைத்தும் அற்புதம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. @ மதுரைசரவணன்

  மிக்க நன்றி

  ReplyDelete
 3. நன்றி வின்மணி இந்த Nintendo 3DS வீடியோவை இப்பொழுதுதான் பார்த்தேன் அருமை.

  ReplyDelete
 4. @ puduvaisiva
  மிக்க நன்றி

  ReplyDelete

Post Top Ad