ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம்
வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான்
இப்போது ஐபேட்-க்கு போட்டியாக சீனா புதிதாக ஐபெட் ஒன்றை
அறிமுகப்படுத்த இருக்கிறது இதைப்ப்ற்றிய சிறப்பு பதிவு.மடிக்கணினிகளின் விற்பனையை பின்னுக்கு தள்ளி தற்போது
முதலிடம் பிடித்து வரும் ஐபேட் போலவே இப்போது புதிதாக
ஐபெட் என்ற ஒன்றை சீன தொழில் நுட்ப வல்லுனர்கள்
உருவாக்கியுள்ளனர். ஐபேட் -ல் என்ன வெல்லாம் செய்ய
முடியுமோ அதை எல்லாம் இந்த ஐபெட்-லும் பயன்படுத்தலாம்.
பயன்படுத்துவதற்க்கு எளிது மட்டுமல்ல விளையாட்டு வீரர்கள்
பயன்படுத்தும் வண்ணம் எளிதில் உடையாதவாறு இதன்
மேல்பாகம் வடிமமைக்கப்பட்டுள்ளது. இதிலும் ஆண்டிராய்டு
அப்ளிகேசன்  தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. 128 MB RAM ,
16 GB சேமிக்கும் வசதியுடன் வெளிவந்துள்ளது. இதன் விலை
$105  டாலர் தான். இது எப்படி வேலை செய்கிறது என்பதைப்
பற்றிய சிறப்பு வீடியோவையும் இத்துடன் இணைதுள்ளோம்.


வின்மணி சிந்தனை
ஒரு நாள் செய்யும் சிறிய தவறுக்காக இதுவரை நாம்
செய்த நல்லது எல்லாம் தெரியாமல் போகும் அதனால்
தவறு செய்யாமல் இருப்பது நல்லது.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.மரகத கல்லின் நிறம் என்ன ?
2.இந்தியாவின் எலக்ட்ரானிக் நகரம் எது ?
3.பாதரச சல்பேட்டின் நிறம் என்ன ?  
4.கல்பாக்கம் அணு உலையின் பெயர் என்ன ?
5.பிளாஸி யுத்தம் எந்த ஆண்டு நிகழ்ந்தது ?
6.மகான் அரவிந்தரின் தாய் மொழி எது ?
7.அதிகப்பால் தரவல்ல செம்மறி ஆடு எது ?
8.பாராசூட்டுகள் தயாரிக்கப் பயன்படும் பொருள் எது ?
9.ஸ்ரீராமானுஜரின் வேத ஆசிரியர் யார் ?
10.’மாதங்கம்’ என்பது எந்த மிருகத்தை குறிக்கின்றது ?

பதில்கள்:
1.பச்சை, 2.பெங்களூர், 3.கருப்பு,
4.பூர்ணிமா,5.1757, 6.மலையாளம்,7.பீட்டல்,
8.நைலான்,9.யாதவப் பிரகாசர்,10.யானை

இன்று ஜீன் 1 
பெயர் : நீலம் சஞ்சீவ ரெட்டி,
மறைந்த தேதி : ஜீன் 1, 1996

இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர்.
இவர் 1977இல் இருந்து 1982 வரை இப்பதவியை
வகித்தார். இவரே ஆந்திரப் பிரதேசத்தின் முதல்
முதலமைச்சரும் ஆவார். 1956ஆம் ஆண்டு
அக்டோபர் மாதம் இவர் பதவியேற்றார். பின் 1962-1964இலும்
முதலமைச்சராக இருந்தார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Advertisement

1 comments:

 
Top