கூகுள் இணையதளத்தில் இருந்து நேரடியாக நம் பிளாக் அல்லது
இணையதளத்தில் எளிதாக எப்படி உருவாக்கலாம் என்பதை
பற்றிதான் இந்த பதிவு.
[caption id="attachment_2220" align="aligncenter" width="429" caption="படம் 1"]

[caption id="attachment_2221" align="aligncenter" width="450" caption="படம் 2"]

மலேசியாவில் இருந்து கிருஷ்ணவேணி என்ற சகோதரி கூகுள்
பஸ் பொத்தான் உருவாக்கி எப்படி இணையதளத்தில் சேர்க்க
வேண்டும் என்று கேட்டிருந்தார்கள் அவர்களுடன் நம் நண்பர்கள்
அனைவருக்காகவும் , கூகுள் பஸ் பொத்தான் நம் பதிவுகளை
பிரபலப்படுத்த மட்டுமல்ல நம் தளத்தை பின் தொடர்பவர்களின்
எண்ணிக்கையை அதிகரிக்கவும் தான் இனி இந்த கூகுள் பஸ்
பொத்தான் நேரடியாக கூகுள் தளத்தில் இருந்து எப்படி
உருவாக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
[caption id="attachment_2222" align="aligncenter" width="437" caption="படம் 3"]

http://www.google.com/buzz/api/admin/site என்ற இணையதளத்திற்க்கு
சென்று நாம் படம் 1ல் இருப்பது போல் Post to Buzz அல்லது
Follow on Buzz எது வேண்டுமோ அதை சொடுக்கவும். உதாரணத்திற்கு
நாம் இப்போது Post to Buzz என்பதை சொடுக்கியுள்ளோம் இப்போது
படம் 2 -ல் இருப்பது போல் வந்துவிடும். இதில் எப்படி பொத்தான்
வேண்டுமோ அப்படி தேர்ந்தெடுக்கவும் அடுத்து கட்டத்திற்க்குள் உள்ள
கோடிங்-ஐ காப்பி செய்து நம் இணையதளத்திலோ அல்லது பிளாக்கிலோ
எங்கு தேவையோ அங்கு பேஸ்ட் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.
இதே போல் Follow on Buzz என்பதையும் சொடுக்கி படம் 3 ல்
காட்டப்பட்டது போல் நம் இணையதள முகவரியை கொடுத்து அங்கு
இருக்கும் கட்டத்திற்க்குள் உள்ளதை காப்பி செய்து நம் தளத்தில்
தேவையான இடத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
வின்மணி சிந்தனை
சாப்பிட எல்லா பொருட்களும் இருந்து சாப்பிடாதவன்
தான் உண்மையான ஞானி ஒன்றும் கிடைக்காமல்
சாப்பிடாமல் இருப்பன் ஞானி அல்ல.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இரும்புத்துண்டு எந்த திரவத்தில் மிதக்கும் ?
2.இந்தியாவில் கொரில்லா போர் முறையை கையாண்டவர் யார் ?
3.மனித குடலில் வேலை இல்லாத உறுப்பு எது ?
4.’பாவை நோன்பு’ எந்த மாதத்தில் வருகிறது ?
5.பிரேசில் நாட்டில் பேசப்படும் மொழி எது ?
6.மிகப்பெரிய சுறாமீன் எது ?
7.’லெனின் கிரேட்’ எந்த நாட்டில் உள்ளது ?
8.காமெடி நடிகர் சார்லி சாப்லின் பிறந்த பிறந்த நகரம் எது ?
9.’கெம்பகவுடா’ எந்த நகரை வடிவமைத்தார் ?
10.தென்னிந்தியாவின் உயரமான மலைச்சிகரம் எது ?
பதில்கள்:
1.பாதரஸம், 2.சத்ரபதி சிவாஜி, 3.குடல்வால்,
4. மார்கழி,5.போர்த்துகீஸ், 6.வேல்,7.ரஷ்யா,
8. லண்டன்,9.பெங்களூர் ,10. தொட்டப்பெட்டா
இன்று மே 31
பெயர் : ஜான் ஆபிரகாம் ,
மறைந்த தேதி : மே 31, 1987
கேரளாவில் பிறந்த ஒரு புகழ்பெற்ற
திரைப்பட இயக்குநர். புனேவில் உள்ள
திரைப்படக் கல்லூரியில் ரித்விக்கடக்கிடம்
திரைக்கலையினை பயின்றவர்.ஒடேஸா
இயக்கம் என்ற புதுமையான இயக்கத்தினை தொடங்கியவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

very very use full
ReplyDelete@ firthous
ReplyDeleteமிக்க நன்றி
இரண்டு நாட்களுக்கு முன் கேட்டேன் உடனே பதில்
ReplyDeleteஅளித்து விட்டீர்களே மிக்க நன்றி. உங்கள் சேவை மேலும் தொடர என் வாழ்த்துக்கள். பேபால் மூலம் உங்களுக்கு பணம் அனுப்ப முயற்சித்தேன் முடியவில்லை உங்கள் முகவரியை கொடுங்கள்
வெஸ்டர்ன் யூனியன் மூலம் அனுப்ப முயற்ச்சி செய்கிறேன்.
கிருஷ்ணவேணி,
மலேசியா.
@ கிருஷ்ணவேணி
ReplyDeleteமிக்க நன்றி , எங்கள் முகவரியை உங்கள் இமெயிலுக்கு அனுப்பிவிட்டோம்.