மனிதனை மிஞ்சும் அதிநவீன ரோபோட் வீடியோ ஸ்பெஷல் ரிப்போர்ட் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, May 16, 2010

மனிதனை மிஞ்சும் அதிநவீன ரோபோட் வீடியோ ஸ்பெஷல் ரிப்போர்ட்

நாளுக்கு நாள் மனிதனின் செய்யும் வேலைகள் அனைத்திலும்
ரோபோட்டின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது அந்த
வகையில் இன்று மனிதனை மிஞ்சும் அதிநவீன ரோபோட்
பற்றிய சிறப்புப் பதிவு.காலத்தின் வேகமான வளர்ச்சி இயந்திரமனிதன் பூமியில் கால்வைத்து
விட்டான் மனிதனைப்போலவே அனைத்து செயல்களும் எந்த
குழப்பமும் இல்லாமல் சென்னதை அப்படியே செய்கிறான். நாளுக்கு
நாள் வளர்ந்து வரும் இந்த ரோபோட் வளர்ச்சியில் தற்போது ஜப்பானில்
சிறப்பு ரோபோட் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இதன் பெயர் நேஒ
மற்ற ரோபோட்டில் இல்லாத சிறப்பு இதில் என்ன இருக்கிறது என்றால்
எந்த பக்கமும் சாய்வாக அதேசமயம் நுட்பமாக தன் உடலை எல்லா
பக்கமும் எல்லா கோணத்திலும் இயக்கும் வண்ணம் வடிவமைக்கப்
பட்டுள்ளது. இதுவரை இந்த பிரச்சினை தான் பெரிதாக இருந்தது.
அதுமட்டுமல்ல தரையில் இருக்கும் பொருட்களை அழகாக குனிந்து
எடுத்து அதை குப்பைக்கூடையில் போடும் அரிய சோதனை
காட்சியையும் தத்ருபமாக காட்டியுள்ளனர். கீழே விழுந்தால்
எளிதாக எழுந்துவிட முடியாது என்ற நிலையையும் மாற்றி
உடனடியாக தன் கைகளை தரையில் வைத்து அழகாக எழுகிறது.
53 செ.மீ உயரமுள்ள இந்த ரோபோட் செய்யும் செயல்கள் அனைத்தும்
பிரமிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. 2011 ம் ஆண்டு இது விற்பனைக்கு
வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைப்பற்றிய ஒரு சிறப்பு
விடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.


வின்மணி சிந்தனை
அறிவில்லாத மூடர்களையும் , குடிப்பழக்கத்திற்க்கு
அடிமையானவர்களையும் திருத்துவது சற்று சிரமமான
ஒன்று தான்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.பிகாஸோ யாரை மணந்தார் ?
2.துர்க்காவதி எந்த நாட்டின் ராணி ஆவார் ?
3.உலகத்திலேயே மிக உயரமான ஏரி ?
4.ராஜஸ்தானின் உப்பு நீர் எது ?
5.நிலவில் கால் வைத்த இரண்டாவது மனிதர் யார் ?
6.வாத்துக்கள் எந்த நேரத்தில் முட்டையிடும் ?
7.உலகில் அதிக டிவி நிலையங்கள் உள்ள நாடு எது ?
8.’மகா சித்தாந்தம்’ என்ற நூல் யாரால் எழுதப்பட்டது ?
9.கங்காரு மிகுதியாகக் காணப்படும் நாடு எது ?
10.புயல் முனை என்று எதைக்கூறுவர் ?

பதில்கள்:
1.ஒவிய மாடல் அழகி ஜாக்குலின் ரோக்,2.கோண்ட்வானா,
3.தென் அமெரிக்காவிலுள்ள டிட்டிக்காக்கா,4.சாம்பர்
5.எட்வின் ஆல்ட்ரின்,6.அதிகாலையில் மட்டும், 7.அமெரிக்கா,
8.ஆரியப்பட்டரால்,9.ஆஸ்திரேலியா,10.நன்னம்பிக்கை முனை

இன்று மே 16 
பெயர் : ஜோசப் ஃவூரியே,
மறைந்த தேதி : மே 16, 1830

ஒரு புகழ்பெற்ற பிரெஞ்ச் கணிதவியலாளரும்
இயற்பியலாளரும் ஆவார். இவர் இயற்பியலில்
வெப்பவியலில் செய்த ஆவுகளுக்காவும்,
கணிதவியலில் ஃவூரியேத் தொடர் என்னும்
கருத்துக்காகவும் புகழ்பெற்றவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

6 comments:

 1. gandhi kanagasabapathyMay 16, 2010 at 11:16 PM

  Really it is very good service to the society for eqipping the
  latest knowledge. Todays robot news is fantastic,
  Thanks for your service.

  ReplyDelete
 2. @sri
  மிக்க நன்றி

  ReplyDelete
 3. @ gandhi kanagasabapathy
  மிக்க நன்றி

  ReplyDelete
 4. ஒரு அருமையான செய்தி

  ReplyDelete
 5. @ manikandan
  மிக்க நன்றி

  ReplyDelete

Post Top Ad