இணையதள வடிவமைப்பாளருக்கு துணை செய்யும் பயனுள்ள இணையதளம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, May 15, 2010

இணையதள வடிவமைப்பாளருக்கு துணை செய்யும் பயனுள்ள இணையதளம்

புதிதாக ஒருவர் இணையதளம் உருவாக்க வருகிறார் என்றால்
அவரிடம் கேட்க வேண்டிய பொதுவான கேள்விகள் என்னென்ன
என்பதையும் எளிதாக அவருக்கு இமெயில் மூலம் இந்த தகவலை
சில நிமிடங்களில் தெரிவிக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்
இந்த பதிவு.

[caption id="attachment_2067" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

இணையதளம் ஆரம்பிக்க வரும் நபர்களிடம் கணினியில் நாம்
கேட்கும் தொழில்நுட்ப கேள்விகள் எப்படி எல்லாம் இருக்க
வேண்டும் தொழில்நுட்ப வழியாக இதெல்லாம் தேவை
அதுமட்டுமல்ல குறிப்பிட்ட திரையின் அளவு , எந்த ஆப்ரேட்டிங்
சிஸ்டம் துணை வேண்டும் என்பதையும் எந்தெந்த உலாவிகளில்
எல்லாம் பக்கத்தின் அளவு எப்படி இருக்கும் என்பதையும்
ஜாவாஸ்கிரிப்ட், பிளாஸ் துனையும் தேவையா இல்லையா
என்பதையும் எளிதாக தேர்ந்தெடுத்து கேட்க வரும் நபருக்கு
இமெயில் அனுப்ப ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://supportdetails.com

[caption id="attachment_2068" align="aligncenter" width="327" caption="படம் 2"][/caption]

இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி
நாம் பயன்படுத்தும் இணைய உலாவி எதெற்க்கெல்லாம் துனை
செய்கிறது என்பதையும் எளிதாக காணலாம் கூடவே யாருக்கு
இந்த தகவலை இமெயில் அனுப்ப வேண்டுமோ இதில் நம்
பெயரையும் இமெயில் முகவரியையும் கொடுத்து பெறுபவரின்
இமெயில் முகவரியையும் கொடுத்து send details என்ற
பொத்தானை அழுத்தி தகவலை எளிதாக அனுப்பலாம்.இந்த
தகவலை படம் 2-ல் காட்டியபடி எக்ஸெல் கோப்பாகவும் மற்றும்
pdf கோப்பாகவும்  தரவிரக்கும் வசதியும் உள்ளது.
வின்மணி சிந்தனை
நகரத்து மக்கள் அழகான கிராமத்திற்கு ரம்யமான
கடற்கரைக்கு, வாழ்கையில் ஒருமுறையேனும் சென்று
அந்த இயற்கை அழகை ரசித்தால் நோய் குறையும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.இந்தியாவின் வ்ரைபடத்தை வரைந்தவர் யார் ?
2.நளச்சக்கரவர்த்தியின் நாடு எது ?
3.க்ளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதல்
ஆட்டுக்குட்டிக்கு பெயர் என்ன ?
4.ரிவால்வரை கண்டுபிடித்த விஞ்ஞானி யார் ?
5.உலகிலேயே அதிக மசூதிகள் உள்ள நகரம் எது ?
6.மகான் ராமானந்தரின் தலை சிறந்த சீடர் யார் ?
7.மிக அதிக மருத்துவர்கள் உள்ள நாடு எது ?
8.எண்ணெய் கெட்டியாக்க எந்த வாயு பயன்படுகிறது ?
9.மணிமேகலையின் தாயார் பெயர் என்ன ?
10.கரப்ப்பான் பூச்சிகளின் இரத்தம் எந்த வண்ணத்தில் இருக்கும்?

பதில்கள்:
1.டா ஆன்வில்,2.நிடத நாடு, 3.டோலி,4.கோல்ட்
5.இஸ்தான்புல்,6.கபீர்தாஸர், 7.சீனா, 8. ஹைட்ரஜன்
9.மாதவி,10.வெள்ளை

இன்று மே 15
சிறப்பு : உலக குடும்ப நாள்
அம்மா,அப்பா, மகன், மகள்,பேரக்குழந்தைகள்
சந்தோஷமாகவும் மகிழ்சியாகவும் இருப்பதற்க்கு
பெயர் தான் குடும்பம். ஒருவருக்கொருவர்
விட்டுக்கொடுத்துச் சென்றால் அந்த வீட்டில்
குடும்பம் கோவிலாகும். சிறிய காரணங்களுக்காக
விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாமல் குடும்பத்தை
பிரிக்காமல் மகிழ்ச்சியாக இருப்போம்.
 

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

6 comments:

 1. பயனுள்ள தகவலுக்கு நன்றி வின்மணி

  ReplyDelete
 2. @ புதுவை சிவா
  மிக்க நன்றி

  ReplyDelete
 3. நண்பரே நான் உதவி கேட்டு வந்துள்ளேன் இணையதளம் ஆரம்பிக்க ஒரு பெயரை தேர்ந்தெடுத்து வைத்துள்ளேன், என்னிடம் ஐஓபி வங்கி கணக்கு மட்டும்தான் உள்ளது அந்த பெயரை டாட் காம் என்ற புலத்துடன் பதிவு செய்ய முதலில் நான் என்ன செய்ய வேண்டும்.

  ReplyDelete
 4. @ Selva vinil
  உங்களுக்கு இமெயிலில் பதில் அனுப்பியாச்சு.
  நன்றி

  ReplyDelete

Post Top Ad