Adsense

உலகநாடுகள் அனைத்திலும் சுற்றுலா செல்ல வேண்டுமானால்
ஒவ்வொரு இணையதளமாக சென்று தேடவேண்டாம் ஒரே
தளத்தில் பல 100 க்கும் மேற்பட்ட நாடுகளின் சுற்றுலா தகவல்களை
கொண்டுள்ளது இதைப்பற்றித்தான் இந்த பதிவு.கோடை விடுமுறை தொடங்கிவிட்டது இந்த விடுமுறையில் எந்த
சுற்றுலா தளத்திற்க்கு செல்லலாம் என்ற ஆவல் நமக்கு இருக்கும்
இதற்க்காக உலகநாடுகள் அனைத்திலும் நாம் எங்கு சுற்றுலா செல்ல
வேண்டுமானாலும் எளிதாக அதே சமயம் பயனுள்ள இடங்களை
எளிதாக கண்டுபிடித்து செல்லாம். கண்ணை கவரும் படங்களுடன்
எந்த நாட்டை நாம் தேர்ந்தெடுக்கிறோமோ அந்த நாட்டிற்க்கு
ஆகும் பயண செலவில் இருந்து அங்கு இருக்கும் கோவில்கள்
முதல் தங்கும் விடுதிகள் வரை அனைத்தையும் கொண்டுள்ளது.

இணையதள முகவரி : http://www.funtouristattractions.com

[caption id="attachment_2036" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]

[caption id="attachment_2037" align="aligncenter" width="150" caption="படம் 3"][/caption]இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் எந்த நாட்டிற்கு சுற்றுலா
செல்ல வேண்டுமோ அந்த நாட்டை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்
தேர்ந்தெடுத்ததும் அந்த நாட்டின் முக்கியமான சுற்றுலா தலங்களை
படத்துடன் நமக்கு காட்டுகிறது. உதாரணமாக நாம் இந்தியாவில்
டெல்லி-ஐ தேர்ந்தெடுத்துள்ளம் படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது.
இப்போது வலது பக்கம் எந்த தங்குமிடத்தில் இடம் காலியாக
உள்ளது என்பதையும் அத்ற்கு அடுத்து நாம் பயணம் செய்யும்
நாளில் விமானத்தில் இடம் இருக்கிறதா என்றும் எளிதாக அறியலாம்.
படம் 3-ல் காட்டப்பட்டுள்ளது. பூங்காவில் இருந்து மிருககாட்சி
சாலைவரை அனைத்துக்கும் காரில் செல்ல வழி (மேப் வசதி) கூட
கொடுத்திருக்கின்றனர். கண்டிப்பாக இந்த தளம் நமக்கு பயனுள்ளதாக
இருக்கும்.
வின்மணி சிந்தனை
தன் சுய விளம்பரத்துக்காக சேவை செய்யும் நல்லோரை
துன்படுத்தினால் தன் கடைசி காலத்தில் குடிக்கும்
தண்ணீர் கூட கிடைக்காது.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.சில்வர் ஸ்டார் என்பது எந்த நாட்டின் உயர்ந்த விருது ?
2.இந்தியாவிற்க்கும் சீனாவிற்க்கும் இடையே உள்ள
 எல்லைக்கோட்டின் பெயர் ?
3.எம்ஜிஆர் பிறந்த ஊர் எது ?
4.உப்புத் தண்ணீரில் வளரும் மரம் எது ?
5.90 பாடல்கள் இடம் பெற்றிருந்த ஒரே திரைப்படம் ?
6.தயிரில் உள்ள உடலுக்கு அழகைத்தரும் வைட்டமின்
 பெயர் என்ன ?
7.வறுமை ஒழிப்புத் தினம் எப்போது ?
8.இந்தியாவின் முதல் பெண் மிருதங்க வித்வான் யார் ?
9.சிங்கப்பூரின் முந்தைய பெயர் என்ன ?  
10.வட இந்திய இசைக்கு என்ன பெயர் ?

பதில்கள்:
1.ஜப்பான்,2. மக்கோகன் எல்லைக்கோடு, 3. மருதூர்
4.மான்குரோவ்5.இந்திரசபா(இந்தி),6. ரிபோஃபிளேவின்,
7.நவம்பர் 1, 8. ரங்கநாயகி 9.டெமாஸெக்,
10.இந்துஸ்தானி சங்கீத்

இன்று மே 13 
பெயர் : ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்,
பிறந்த தேதி : மே 13, 1956

ஒரு புகழ்பெற்ற இந்திய குரு ஆவார்.
தமிழ்நாட்டில் உள்ள பாபநாசத்தில்,
ஒரு தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர்.
தனது சீடர்களால் ஸ்ரீ ஸ்ரீ என்று மரியாதையுடன்
அழைக்கப்படும் இவர் வாழும் கலை என்ற நிறுவனத்தை
தோற்றுவித்தவர். இந்நிறுவனம் பண்டைய இந்திய அறிவுச்
செல்வத்தை நிகழ் காலத்திற்கு ஏற்ப மாற்றி அளிக்கும்
பணியில் ஈடுபட்டுள்ளது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Advertisement

5 comments:

 1. VERY MUCH USEFUL INFORMATION BROTHER ! KEEP IT UP !

  ReplyDelete
 2. @ RAJA
  மிக்க நன்றி

  ReplyDelete
 3. dear sri guruji, the powerful information.

  ReplyDelete
 4. @ S.REVATHI
  மிக்க நன்றி

  ReplyDelete

 
Top