விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரை உள்ள அனைத்து கணினியின் வேகத்தையும் அதிகப்படுத்தலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, May 1, 2010

விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரை உள்ள அனைத்து கணினியின் வேகத்தையும் அதிகப்படுத்தலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வ்ரை உள்ள அனைத்து
கணினியிலும் தேவையில்லாத DLL கோப்புகள் மற்றும்  தேவையற்ற
கோப்புகளை எளிதாக நீக்கி நம் கணினியை Super Fast எப்படி
செய்யலாம் என்பதைப்பற்றித்தான் இந்த பதிவு.இண்டெர்நெட் வேகபடுத்த நாம் கொடுத்த வழிமுறை winxp மட்டுமே
பொருந்தும் என்ற செய்தியால் பலரும் அனைத்து வின்டோஸ்
ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் பயன்படுமாறு கூறுங்கள் என்று கேட்டதால்
இனி நாம் கொடுக்கும் வழிமுறைகள் எந்த ஆப்ரேட்டிங் சிஸ்டத்துக்கு
துனை செய்யும் என்பதையும் கூடுமானவரை அனைத்து விண்டோஸ்
ஆப்ரேட்டிங் சிஸ்டத்துக்கும் பொருந்தும் படியும் கொடுக்க முயற்ச்சி
செய்கிறோம். விண்டோஸ் xp முதல் விண்டோஸ் 7 வரை உள்ள
அனைத்து ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் கணினியின் வேகத்தை
அதிகப்படுத்தலாம் இதற்க்காக பிரேத்யேகமாக ஒரு மென்பொருள்
வந்துள்ளது. இந்த மென்பொருளின் துனை கொண்டு நாம் நம்
கணினியில் உள்ள தேவையில்லாத Dll கோப்புகள் மற்றும் ஒரே
பெயரில் இருக்கும் Dublicate Dll கோப்புகளை எளிதாக நீக்கி நம்
கணினியின் வேகத்தை அதிகப்படுத்தலாம். அதிகமான பேர்
பயன்படுத்தும் CCleaner என்ற மென்பொருளின் மூலம் Temporary
கோப்புகளையும் Registry ஐயும் Fix செய்யலாம் ஆனால் இந்த
மென்பொருளின் துனை கொண்டு நாம் நம் கணினியில் உள்ள
தேவையில்லாத Dll  கோப்புகள் மற்றும் ஒரே பெயரில் இருக்கும்
Dublicate Dll கோப்புகளை எளிதாக நீக்கி நம் கணினியின் வேகத்தை
அதிகப்படுத்தலாம். மென்பொருளின் பெயர் PC Cleaner இந்த
மென்பொருளை இந்த முகவரியில் இருந்து தரவிரக்கி கொள்ளலாம்.
http://www.softpedia.com/progDownload/Pc-Cleaner-Download-2024.html
கண்டிப்பாக இந்த மென்பொருள் உங்கள் கணியின் வேகத்தை
அதிகப்படுத்திக்கொடுக்கும்.
வின்மணி சிந்தனை
நாம் வரிசையில் சென்று கொண்டிருக்கும் போது சிலர் நம்மை
முந்தி அவர்கள் காரியத்தை சாதித்துக்கொள்வார்கள் ஆனால்
உண்மையிலே அவர்களுக்கு அது பலன் தராது.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.முதன் முதலில் மின்சார இரயில் ஓடிய நாடு எது ?
2.போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு ?
3.மனிதனின் தலைமுடி வருடத்திற்க்கு எவ்வளவு வளர்கிறது ?
4.மாம்பழத்தின் பிறப்பிடம் எந்த நாடு ?   
5.சீனாவின் புனித விலங்கு ?
6.உலகிலேயே மிகவும் பழமையான தேசியக்கொடி எது ?
7.தங்கப்போர்வை நிலம் எது ?
8.தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
9.உலகிலேயே மிகப்பெரிய பாம்பு எது ?
10.சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?

பதில்கள்:
1.ஜெர்மனி 1881,2.நியூசிலாந்து, 3.6 அங்குலம்,
4. இந்தியா,5.பன்றி,6.டானிஷ் நாட்டு கொடி,7.ஆஸ்திரேலியா,
8.ஒரு முறை,9.அனகோண்டா, 10.பிட்மேன்

இன்று மே 1 
உலகத் தொழிலாளர் தினம்
தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான
போராட்டமும், சிகாகோ தியாகிகளின்
தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக
உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.
இந்நாளில் அனைத்து உழைப்பாளர்களுக்கும்
இதயம் கனிந்த அன்பான வாழ்த்துக்கள்

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

10 comments:

 1. IS IT SAFER THAN CC CLEANER ?

  ReplyDelete
 2. கேட்பதற்கு நன்றாக இருக்கிறது, உபயோகப்படுத்தி விட்டுக் கூறுகிறேன்.
  பதிவிற்கு நன்றி.

  ReplyDelete
 3. @LVISS ஆம் பாதுகாப்பானது தான்.

  ReplyDelete
 4. I prefer Tune Up Utilities.
  It has all the basic functions.

  ReplyDelete
 5. @ Hickson நன்றி.

  இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது..

  ReplyDelete
 6. பதிவைப் படித்து விட்டு முயன்று பார்த்தேன். வேக வேறுபாடு குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இவ்வளவு நாளாக 2.30GB காலியிடம் இருந்த C டிரைவில் இப்போது 13GB இருக்கிறது. உண்மையில் உங்களுக்கு ஒரு ஜே போடவேண்டும்.

  அன்புடன்,
  தணிகாசலம்

  ReplyDelete
 7. @ தணிகாசலம்
  மிக்க நன்றி

  ReplyDelete
 8. orphan dll file analyze panitu delete click panna fatal error found while trying to move selected file nu varudu... plz help me sir

  ReplyDelete
 9. @ inamul
  fatal error வருவதற்க்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக உங்கள் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் கோப்பு எதாவது வைரஸ் அல்லது ஸ்பைவேர்-லால் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.
  வைரஸ் நீக்கும் மென்பொருள் கொண்டு உங்கள் கணினியை சோதித்துக்கொள்ளுங்கள். மறுபடியும் இதே தவறு வந்தால் விண்டோஸ்-ஐ ஓரு முறை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.
  மிக்க நன்றி.

  ReplyDelete

Post Top Ad