படைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கும்
பயணம் தொடர்ந்து கொண்டு இருப்பதற்கான காரணம் இப்போது
தான் பலருக்கும் தெரிந்துள்ளது. வெளிவந்த சில நாட்களில் பல
மில்லியன் மக்களை ஈர்த்து தன் ஐபேட் -ஐ குழந்தைகள் கூட
எளிதாக பயன்படுத்தலாம் என்ற யாரும் எதிர்பார்க்காத வகையில்
புதிய வகையை கையாண்டுள்ளது இதைப்பற்றித்தான் இந்த பதிவு.
ஆப்பிள் ஐபேட் வெளிவருவதற்கு முன்பே அனைவரையும் தன்
பக்கம் திருப்பி தன் ஐபேட் பற்றிய அனைத்துத் தகவல்களையும்
எளிதாக மக்களிடம் கொண்டு சென்றுள்ளது என்றால் அது
மிகையாகாது. இதன் வெற்றிக்காரணம் இரண்டு வயது குழந்தை
ஐபேட் பயன்படுத்துவதைப் பார்த்ததும் நமக்கும் இதைப்
பயன்படுத்துவது ஒன்றும் கடினமாக இருக்காது என்ற எண்ணமும்
தான் அதிக அளவில் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. இதைத்
தவிர ஆப்பிள் ஐபேட் கொடுக்கும் சலுகைகள் மற்றும் சேவைகள்
அனைத்துமே பிரம்மாண்டம் தான். இல்லாவிட்டால் வெளிவந்த
சில நாட்களில் பல மில்லியன் வாடிக்கையாளர்களை எப்படி
பெறமுடியும். இரண்டு வயது குழந்தை ஒன்று ஆப்பிள் ஐபேட்
பயன்படுத்துவதற்கான வீடியோ ஒன்றை இத்துடன் இணைத்துள்ளோம்
எளிமை தான் எந்த ஒரு பொருளையும் முதல் இடத்திற்குக்
கொண்டுவரும் என்பதற்கு நம் கூகுல் கூட ஒரு முன் உதாரணம்
தான் அந்த வகையில் இப்போது ஆப்பிள் ஐபேடும் அந்த வரிசையில்
இணைந்துள்ளது.
வின்மணி இன்றைய சிந்தனை
தேவைகள் அதிகமாகும் போது தான் மனிதன் தன்னை
மட்டுமல்ல தன் நாட்டையும் மறக்கிறான். அடிப்டை
தேவைகளை வைத்து அவன் இருப்பதை கொண்டு
சந்தோஷம் அடைந்தால் அவனை விட உலகில்
பாக்கியசாலி யாராகவும் இருக்க முடியாது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1. லேசரை கண்டுபிடித்தவர் யார் ?
2. மின்சாரத்தின் அலகு என்ன ?
3. உலகிலே மிக உயரமான பாலம் எது ?
4. உலவிகளே இல்லாத கோள் எது ?
5. உலகிலேயே மிக உயரமான தீவு எது ?
6. சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டியை எப்போது
துவக்கினார் ?
7. வடக்கு இரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது ?
8. புலிகள் அதிகமாகக் காணப்படும் கண்டம் எது ?
9. மிக விரிவான இறக்கையுடைய பறவை எது ?
10. பூனையின் அறிவியல் பெயர் என்ன ?
பதில்கள்
1.T.H.மைமா,1960, 2.ஆம்பியர், 3.ஜார்ஜ் பாலம் (அமெரிக்கா)
4.புதன், 5.கீரீன்லாந்து , 6. 1989 ஆம் ஆண்டு, 7. நீயூடெல்லி,
8.ஆசியா , 9.ஆல்பட்ராஸ் , 10.பெலிஸ்கேடஸ்
இன்று ஏப்ரல் 7
பெயர் : ரவி சங்கர் ,
பிறந்த தேதி : ஏப்ரல் 7, 1920
பாரத ரத்னா பண்டிதர் ரவி சங்கர்
உலகப் புகழ் பெற்ற இந்திய சிதார்
இசைக்கலைஞர் ஆவார். இவருக்கு
1999ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய
விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இசைத்துறையில் உங்கள் பணி எங்கள் மனதை
இன்றும் சந்தோஷமாக வைத்திருக்கிறது.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
கோள்களே இல்லாத கிரகம் என்னும் கேள்வி தவறாகும். கிரகம் என நாம் அயல்மொழியில் அழைப்பதன் பெயர்தான் கோள் என்பதாகும். உலவிகளே இல்லாத கோள் என்று குறிப்பிட வேண்டும். உலவி என்பது கோள்கசளைச் சுற்றி உலவி வருவனன. சான்றாக நம் புவியைச் சுற்றி மதி அல்லது திங்கள் என அழைக்கப் பெறும் ஓர் உலவி உள்ளது. பல கோள்களைச் சுற்றி ஒன்றுக்கு மேற்பட்ட உலவிகள் வலம் வருகின்றன..புதனுக்கு அவ்வாறு ஒன்றும் இல்லை.தாங்கள் விரும்பினால் அறிவியல் தமிழ் கலைச் சொற்கள் என்னும் ஒரு புதிய பகுதியைத் தொடங்கி அன்றாடம் கலைச் சொல் விளக்கம் தரலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ReplyDelete@ இலக்குவனார் திருவள்ளுவன்
ReplyDeleteநன்றி , 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற கேள்வித்தாளில்
இந்த கேள்வி இருக்கிறது அதை அப்படியே பதிலுடன் கொடுத்துவிட்டோம். திருத்திக்கொள்கிறோம்.
விரைவில் இறைவனின் அனுக்கிரமும் இருந்தால்
தமிழ் கலைச் சொற்கள் என்னும் பகுதியை துவங்குவோம். தங்களின் அனுபவ அறிவும் ஆசியும்
எங்களுக்குத் தேவை.
மிக்க நன்றி
@ mohiadeen நன்றி
ReplyDeleteஅருமையான வலைத்தளம். புதிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன். (உலவிகள் இல்லாத கோள்) மிக்க நன்றி.
ReplyDeleteஅன்புடன்
இளங்குமரன்
@ இளங்குமரன் நன்றி
ReplyDeleteதங்கள் தளத்தைக் கண்டதில் மகிழ்ச்சி.
ReplyDelete@ நன்றி
ReplyDeleteHappy to know about this site can save a lot of time b coz all news in one site. Thanks
ReplyDelete@ pandiyan நன்றி
ReplyDeletetamil
ReplyDeleteஉடன் விடை அளித்தமைக்கு நன்றி. தாங்கள் எப்பொழுது விரும்பினாலும் நான் உதவ அணியமாக உள்ளேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ReplyDelete@ Ilakkuvanar Thiruvalluvan நன்றி
ReplyDelete@Ilakkuvanar Thiruvalluvan
ReplyDeleteமிக்க நன்றி
very good site and very useful to us. Thank you
ReplyDelete