தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகப்படுத்த உதவும் பயனுள்ள தளம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, April 6, 2010

தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகப்படுத்த உதவும் பயனுள்ள தளம்

கணினி அதிகம் படித்தவர்களுக்கு தட்டச்சு செய்வதில் நேரம்
அதிகம் எடுத்துக்கொள்கின்றனர் என்ற ஆராய்ச்சி முடிவு தான்
இந்த பதிவுக்கு காரணமாகிறது. ஆம் கணினியில் மென்பொருள்
துறையில் மட்டும் நாம் வல்லவர்களாக இருந்தால் போதாது
தட்டச்சு செய்வதிலும் வேகம் வேண்டும் அல்லவா இதற்க்காகத்
தான் இந்த பதிவு.



கணினியில் தட்டச்சு செய்யும் வேகம் அதிகமாக இருந்தால் பல
வேலைகளை விரைவாக முடிக்கமுடியும் என்ற செய்தி நமக்கு
தெரிந்தாலும் தட்டச்சு முறையாக படிக்கவில்லை என்ற வருத்தம்
ஒருபுறம் இருக்கட்டும். இல்லை தட்டச்சு படிக்க நேரம் உங்களுக்கு
அமையவில்லையா இப்படி நாம் தட்டச்சு படிக்க முடியாமல்
இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அனைத்துக்கும் தீர்வாக
இந்த இணையதளம் வந்துள்ளது. இந்த இணையதளத்திற்குச் சென்று
கிடைக்கும் நேரத்தைப் பயன்ப்டுத்தி நாம் தட்டச்சு கற்கலாம் எந்த
கணக்கும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை உடனடியாக
நாம் நம்முடைய தட்டச்சு வேகத்தை இந்த இணையதளம் மூலம்
அதிகப்படுத்தலாம்.
இணையதள முகவரி :  http://www.klava.org

நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாம் இந்த தட்டச்சு இணையதளத்தைப்
பயன்படுத்தி நம் தட்டச்சு வேகத்தையும் எழுத்துப்பிழையையும் எளிதாக
திருத்தலாம். கண்டிப்பாக இந்த இணையதளம் அனைவருக்கும் பயனுள்ளதாக
இருக்கும்.
வின்மணி இன்றைய சிந்தனை
உள்ளூரில் இருந்து கொண்டு அன்னை தந்தைக்கு
உணவளிக்காமல் மனைவியின் சொல்படி இருக்கும்
நபர்கள் கண்டிப்பாக அடுத்தப் பிறவியில் குஷ்ட
நோயாளிகளாகத்தான் பிறப்பார்கள் என்பதில் எந்த
சந்தேகமும் வேண்டாம்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1. செயற்கை இதயத்தை கண்டுபிடித்தவர் யார் ?
2. ஒளியின் அலகு என்ன ?
3. உலகிலேயே மிக உயரமான தொடர்வண்டி எது ?
4. வட்டமான பாதை கொண்ட கிரகம் எது ?
5. 10 ஆண்டு ஒய்வுக்குப் பின்னர் கிரிக்கெட் விளையாட வந்து
 கேப்டன் பதவியும் வகித்த கிரிக்கெட் வீரர் யார் ?
6.உலகின் முதல் மருத்துவமனை சக்கரத்தின் மேல் நடப்பது எது?
7. கதாநாயகன் இல்லாத முதல் தமிழ்த்திரைப்படம் எது ?
8. மிகத்தடிப்பான சருமம் கொண்ட விலங்கு எது ?
9. மிகவும் பொதுவாகக்காணப்படும் இந்தியப் பறவை ?
10.மயிலின் அறிவியல் பெயர் என்ன ?

பதில்கள்
1.வில்லியம் கோல்ப் ,1957 , 2. லக்ஸ், 3.கொண்டோர்
4. வெள்ளி, 5. பாப் சிம்சன் ( ஆஸ்திரேலியா )
6. லைப்லைன் எக்ஸ்பிரஸ், 7.ஒவ்வையார் ,
8. திமிங்கலச்சுறா,9. காகம், 10.பாவாகிரிஸ்டாடஸ்

இன்று ஏப்ரல் 6 
பெயர் : மீனாட்சிசுந்தரம் பிள்ளை ,
பிறந்த தேதி : ஏப்ரல் 6, 1815

சிறந்த தமிழறிஞர். உ. வே. சாமிநாதையரின்
ஆசிரியர். அந்தாதி என்று சொல்லும்
போதெல்லாம் உங்கள் ஞாபகம் தான்
வருகிறது. இவர் 65 மேற்பட்ட தமிழ் நூல்களை
எழுதியுள்ளார். உ.வே.சா -வை தமிழுக்காகத் தந்த
உங்களுக்கு என்றும் எங்கள் நன்றிகள்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

10 comments:

  1. today's thought is a blow to all those neglecting the parents and for those are sending their parents to homes.keep it up
    today's articles was also fine

    ReplyDelete
  2. படங்களின் உள்ளேயே எப்படி எழுதுவது. விளக்குவீர்களா?

    example:

    www.myname.blogspot.com

    ReplyDelete
  3. @ krishnamoorthy நன்றி நண்பரே

    ReplyDelete
  4. @ அஹமது இர்ஷாத்
    நன்றி
    புகைப்படத்தில் எழுத போட்டோஷாப் மென்பொருளை
    பயன்படுத்தி எழுதலாம்.

    ReplyDelete
  5. எத்தனையோ, பேர் வேகமா தட்டச்சு செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இது நல்ல பயன் தரும், நன்றி

    ReplyDelete
  6. நன்றிங்கோ.

    ReplyDelete
  7. Good post.thanks.can i forward this article to my yahoo groups

    ReplyDelete
  8. @ mkrpost
    செய்யுங்கள்...
    நன்றி

    ReplyDelete

Post Top Ad