இ-கார்டு வாழ்த்து எந்த கணக்கும் இல்லாமல் ஆன்லைன் மூலம் எளிதாக உருவாக்கலாம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, April 26, 2010

இ-கார்டு வாழ்த்து எந்த கணக்கும் இல்லாமல் ஆன்லைன் மூலம் எளிதாக உருவாக்கலாம்

விடுமுறை தொடங்கிவிட்டது நம் நண்பர்களுக்கும் தோழிகளுக்கும்
விடுமுறை மற்றும் பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளை எப்படி
அனுப்பலாம் என்று பார்க்கப்போகிறோம் இதைப்பற்றித்தான்
இந்த பதிவு.

[caption id="attachment_1809" align="aligncenter" width="323" caption="படம் 1"][/caption]

பிறந்த நாள் வாழ்த்து முதல் திருமண நாள் வாழ்த்து வரை அனைத்து
திருவிழாவுக்கும் வாழ்த்து அட்டைகளை எளிதாக உடனடியாக
உருவாக்கி நம் நண்பருக்கும் உறவினருக்கும் எளிதாக அனுப்பலாம்
இதற்க்கு உதவுவதற்க்காகவே ஒரு இணையதளம் இருக்கிறது.

[caption id="attachment_1810" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]

[caption id="attachment_1811" align="aligncenter" width="450" caption="படம் 3"][/caption]

இணையதள முகவரி :  http://www.cardsimple.com

இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி
send this card என்ற பட்டனை அழுத்தவும் அடுத்து படம் -2 ல்
காட்டியபடி நாம் அனுப்பும் வாழ்த்துச்செய்தியை தட்டச்சு செய்யவும்.
தட்டச்சு செய்து முடித்ததும் அனுப்புபவரின் பெயர் மற்றும் இமெயில்
முகவரி அடுத்து பெறுநர் பெயர் மற்றும் இமெயில் முகவரியை
கொடுத்து என்றைக்கு வாழ்த்துச்செய்தி கிடைக்க வேண்டும் என்ற
தேதியைம் கொடுத்து preview என்ற பட்டனை அழுத்தவும் எந்த
கணக்கும் தேவையில்லை. இப்போது படம் 3-ல் காட்டியபடி
send card என்ற பட்டனை அழுத்தி படத்தை எளிதாக அனுப்பலாம்.
பல்வேறுபட்ட வாழ்த்துச்செய்திக்கான அட்டை மற்றும் செய்தியும்
உள்ளே இருக்கிறது இதில் நமக்கு ஏது வேண்டுமோ அதை
தேர்ந்தெடுத்து இதே போல் எளிதாக அனுப்பலாம்.
வின்மணி சிந்தனை
நண்பர்கள் செய்யும் உதவி ஆற்று நீர் போல ஆனால்
உறவினர்க்ள் செய்யும் உதவி கிணற்று நீர் போல.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.இந்தியா சுதந்திரம் அடையும் முன் இருந்த சமஸ்தானங்கள்
 எத்தனை ?  
2.மகாத்மா காந்தியின் அன்னை பெயர் என்ன ?
3.பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் ?
4.தமிழகத்தில் முதன் முதலில் மதுவிலக்கு கொண்டுவரப்பட்ட
 இடம் எது ?
5.ஞானபீட விருதை உருவாக்கியவர் யார் ?
6.இசைத் தட்டினை கண்டுபிடித்தவர் ?
7.பாரதியார் நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன ?
8.தெய்வ நூல் என்று சிறப்பிக்கப்படுவது எது ?
9.முதல் ஒலிம்பிக் போட்டியில் எத்தனை நாடுகள் பங்கு பெற்றன?
10.பழைய ஓவியத்தை புதுப்பிக்க பயன்படும் கதிர் ?

பதில்கள்:
1.586,2.புத்திலிபாய், 3.தமிழ்நாடு , 4.சேலம் ,
5.ரமாதேசி ஜெயின்,6.பெர்லின்,7. இந்தியா,
8.திருக்குறள்,9. 15 நாடுகள், 10.புறஊதா கதிர்

இன்று ஏப்ரல் 26 
பெயர் : இராமானுஜர்
மறைந்த தேதி : ஏப்ரல் 26, 1920

உலகத்தை வியக்கச் செய்த ஒப்பற்ற பெரும்
கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள
ஈரோட்டில் பிறந்தார். இவர் 1914 முதல் 1918
முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும்
அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.
உங்களால் பாரததேசத்திற்க்கே பெருமை.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

2 comments:

  1. Realy useful newses and indelligence questions and answers.

    ReplyDelete
  2. @ murali
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad