சென்னையில் குடிநீர் வரவில்லையா ஆன்லைன்-ல் புகார் செய்யலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, April 21, 2010

சென்னையில் குடிநீர் வரவில்லையா ஆன்லைன்-ல் புகார் செய்யலாம்.

தண்ணீர் ஒரு நாட்டின் மிக முக்கியமான தேவைகளில் ஒன்று
இப்படி முக்கியமாக இருக்கு தண்ணீர் எங்கள் பகுதிக்கு வரவில்லை
அல்லது எங்கள் வீட்டுக்கு வரவில்லை என்ற கோஷத்தை
குறைப்பதற்காக சென்னைக் குடிநீர்வாரியம்  ஆன்லைன் -ல் புகார்
செய்யும் வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது இதைப்பற்றித்
தான் இந்த பதிவு.



அலுவலகத்துக்கு செல்லவே நேரம் இல்லை இதில் குடிநீர் வரவில்லை
என்று புகார் செய்ய குடிநீர் வாரியத்துக்கு வேறு செல்லவேண்டுமா ?
நம் குறையத்தீர்க்க ஆன்லைன் மூலம் உடனடியாக உங்கள் புகாரை
பதிவு செய்யலாம்

முகவரி : http://www.chennaimetrowater.com/complaints/onlineall.htm

உங்கள் பெயர்,முகவரி மற்றும் குடிநீர் இணைப்பு எண் போன்றவற்றை
கொடுத்து உங்கள் புகாரை பதிவு செய்யலாம். குடிதண்ணிர் குறைவாக
வருகிறதா அல்லது குடிநீர் வரவில்லையா என்ற காரணத்தையும்
கூடவே சேர்த்து பதிவுசெய்யலாம். அடுத்து உங்கள் புகாருக்கு
அதிகாரிகள் பதில் போன் மூலம் வேண்டுமா அல்லது தபால் மூலமாகவா
அல்லது இமெயில் மூலமாகவா என்பதையும் தேர்ந்தெடுத்து submit
என்ற பொத்தானை அழுத்தி பதிவு செய்யலாம். காவல் துறையிலும்
இது போன்று ஆன்லைன் மூலம் புகார் செய்யும் வசதி வந்தால் மக்கள்
மேலும் பயன் அடைவார்கள் லஞ்சம் என்ற ஒன்று இருக்காது.
வின்மணி சிந்தனை
சிறிய உயிரினங்கள் துன்பப்படுவதைக் கூட தாங்க முடியாத
மனிதனுக்கு கண்டிப்பாக நோய் என்ற ஒன்று எப்போதும் வராது.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.தூதர்ஷனில் அலைவரிசை எப்போது தொடங்கப்பட்டது ?  
2.குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற நடனம் எது ?  
3.தும்பா ராக்கெட் ஏவு தளம் எந்த மாநிலத்தில் உள்ளது ?  
4.மங்கோலியா நாட்டின் தலைநகர் எது ?  
5.குண்டூசீ தலையளவுள்ள தாவரம் எது ?  
6.வைரத்துக்கு புகழ் பெற்ற இடம் எது ?
7.உலகச்சுகாதார தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?  
8.தேவாரப்பாக்களை பாடியவர் எத்தனை பேர் ?  
9.ஹரிஜன் என்னும் இதழை தொடங்கியவர் யார் ?   
10.பாலில் கொழுப்புச்சத்துக்கள் எப்போது குறைவாக இருக்கும்?

பதில்கள்:
1.18.03.99,2.தண்டியா, 3.கேரளா,
4.உலபன்தார்,5.உல்பியா,6.தென் ஆப்பிரிக்கா,
7. ஏப்ரல் 7 ,8.மூவர், 9. காந்திஜீ, 10.குளிர்காலத்தில்

இன்று ஏப்ரல் 21 
பெயர் : பாரதிதாசன்
மறைந்த தேதி : ஏப்ரல் 21, 1964

பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும்
புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர்
சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர்
சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால்
பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.
பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர்
என்றும் பாவேந்தர்  என்றும் பரவலாக அழைக்கப்படுபவர்.
இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழ்
நடத்தி வந்தார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

2 comments:

  1. ///வின்மணி சிந்தனை
    சிறிய உயிரினங்கள் துன்பப்படுவதைக் கூட தாங்க முடியாத மனிதனுக்கு கண்டிப்பாக நோய் என்ற ஒன்று எப்போதும் வராது.///

    தகவல்களும் சிந்தனைகளும் நல்லா இருக்குங்க.. நன்றி

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழி

    ReplyDelete

Post Top Ad