யாகூவின் இடத்தை தேடும் பிரம்மாண்ட ஐபோன் அப்ளிகேசன் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, March 28, 2010

யாகூவின் இடத்தை தேடும் பிரம்மாண்ட ஐபோன் அப்ளிகேசன்

கடந்த சில மாதங்களாகவே யாகூவில் சத்தமில்லாமல் பலவித
மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன அந்த வகையில் எந்த
அலட்டலும் இல்லாமல் யாகூ “ இடத்தை தேடும் “ பிரம்மாண்ட
அப்ளிகேசன் ஒன்றை ஐபோனில் அறிமுகம் செய்துள்ளது. இதைப்
பற்றிய சிறப்பு பதிவு.



வந்த வேகத்தில் கூகுள் எப்படி வேலை செய்கிறது என்பதை
கண்டுபிடிக்கும் முன் யாகூவை ஒரே அடியாக தேடுதலில் இருந்து
இரண்டாவது இடத்திற்கு தள்ளியதோடு மட்டுமில்லாமல் கூகுள்
மேப் என்று அடுத்தபுரட்சியையும் செய்தது. என்னதான் கூகுள்
பல சேவைகளை வரிந்துகட்டி கொண்டு கொட்டினாலும் இன்னும்
பல பேர் யாகூதேடுதலைத்தான் பயன்படுத்துகின்றனர் காரணம்
இல்லாமலா நம் சங்கத்தலைவர் பில்கேட்ஸ் யாகூவுடன் கூட்டனி
வைக்க ஆசைப்படுவார் இந்த சுழ்நிலையில் யாகூ தன் முதல்
வெற்றி ஆயுதத்தை களமிறக்கியுள்ளது அதுதான் யாகூவின்
”இடத்தை தேடல் “ ஐபோனுக்கான சிறப்பு அப்ளிகேசன்
மென்பொருள். இருக்கும் இடத்திலிருந்து தெரியாத இடத்தில்
உள்ள அலுவலகத்துக்கோ அல்லது உணவகத்துக்கோ செல்ல
வேண்டுமானல் விரல் நுனியில் கோடிட்டி கொடுத்தால்
போதும் அந்த உணவகத்தின் கிளை நாம் இருக்கும் இடத்தில்
ஏதாவது இருந்தாலும் உடனடியாக தேடி கொடுக்கிறது. செல்ல
வேண்டிய பாதைக்கு தெளிவான மேப் வசதியுடன் கொடுக்கிறது.
தற்போது அமெரிக்காவின் 32 பெரிய நகரங்களில் இந்த இடம்
தேடல் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதைத்தவிர
லண்டன், கனடா , பிரான்ஸ், மற்றும் பல நாடுகளிலும் இந்த
சேவையை வழங்கியுள்ளனர். இதே சேவை கூகுள்-ல் இருந்தாலும்
தேடும் இடம் துல்லியமாகவும் சரியாகவும் விரைவாகவும் கொடுக்கும்
என்ற வாக்குருதியில் களம் இறங்கியுள்ளது யாகூ, விரைவில்
இந்த சேவை இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களிலும்
”இடம் தேடல் “ தொடரும் என்கிறது. யாகூவின் இந்த புதிய
”இடம் தேடல் “ சேவை வெற்றிபெற வின்மணி மற்றும் நண்பர்களின்
சார்பில் வாழ்த்துக்கள்.இது எப்படி வேலை செய்கிறது என்பதைப்பற்றிய
ஒரு சிறப்பு வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.






வின்மணி இன்றைய சிந்தனை
தன்னிடம் வேலைபார்க்கும் தொழிலாளருக்கு குறைவான
ஊதியமும் புதிதாக வரும் அரைவேக்காட்டு தொழிலாளிக்கு
அதிகசம்பளமும் கொடுத்தால் அந்த நிறுவனம் விரைவில்
இல்லாமல் போகும்.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
AJAX - Browser support

if (window.XMLHttpRequest)
{
// code for IE7+,Firefox,Chrome,Opera,Safari
return new XMLHttpRequest();
}
if (window.ActiveXObject)
{
// code for IE6, IE5
return new ActiveXObject("Microsoft.XMLHTTP");
}

இன்று மார்ச் 28 
பெயர் : வேதாத்திரி மகரிஷி ,
மறைந்த தேதி : மார்ச் 28, 2006

ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டு
சமுதாயப் பணி ஆற்றி வந்த உயர்ந்த தத்துவ
ஞானி. “ வாழ்க வளமுடன் ” என்ற உயர்ந்த
வார்த்தையை தன் சீடர்களுக்கு வழங்கியவர்.
உங்களைப்போல் ஞானிகள் இந்த பாரதத்தில் பிறப்பது
எங்களுக்குத் தான் பெருமை.

3 comments:

  1. நல்ல பதிவு,,,பகிர்வுக்கு நன்றி!!

    ReplyDelete
  2. அடப் போங்க சார், Google Maps ல இந்த வசதி எப்பவோ வந்தாச்சு. 32 நகரம் என்ன, அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் இந்த வசதி உண்டு. அதுமட்டுமில்லாமல் traffic ஐ கண்டுபிடித்தல், மூடப்பட்ட வீதிகளை கண்டுபிடித்தல் அப்பிடின்னு பல வசதி கூகிள் maps ல இருக்கு.

    ReplyDelete
  3. கூகுள் மேப்ஸ்-ல் எல்லாம் இருக்கு சரிதான் , ஆனால் டச் போன் -ல கூட கூகுள் மேப்ஸ் டச் பண்ணி நாம் தேடும் இடம் போகமுடியாது இந்த வீடியோவைவை இன்னொறுமுறை பார்த்தால் தங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். இதைத்தவிர கூகுள் நெக்சஸ் போன் மட்டும் தான் சப்போர்ட் செய்வேன் என்றெல்லாம் இல்லாமல் அனைத்து ஐபோன்களிலும் இந்த அப்ளிகேசனைப் பயன்படுத்தலாம். அதிக அளவு மெமரி தேவையில்லை. மற்றபடி வேகம் மட்டும் கூகுளை விட குறைவாகத்தான் இருக்கிறது


    நன்றி.

    ReplyDelete

Post Top Ad