கலைத்திறன் மிக்க அனைத்து ஆல்பமும் ஒரே இடத்தில் எளிதாக தேடலாம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, March 22, 2010

கலைத்திறன் மிக்க அனைத்து ஆல்பமும் ஒரே இடத்தில் எளிதாக தேடலாம்

ஆர்ட் ஆல்பம் கூகுளில் தேடுவது எளிதான காரியம் இல்லை
பல தரப்பட்ட தரமான அனைத்து ஆர்ட் ஆல்பமும் ஒரே இடத்தில்
அதுவும் அதிக நேரம் செலவிடாமல் சில நிமிடங்களிலே எளிதாக
பெறலாம். அமேசான் துனையுடன் தான் இந்த இணையதளம்
அனைத்து ஆல்பத்தையும் நாம் தேடியவுடன் எடுத்து கொடுக்கிறது
இதைப்பற்றி தான் இந்த பதிவு.ஆர்ட் ஆல்பம் சில நேரங்களில் பல இலட்சம் ரூபாய் வரை பணத்தை
அள்ளி இருக்கிறது என்னதான் கிராபிக்ஸ் வசதி கொண்ட பல
இணையதளங்கள் இருந்தாலும் இன்னும் அதிகமான பேர் இந்த
தளத்தை தான் விரும்புகின்றனர் இதற்காக பிரேத்யேகமாக அமேசான்
துனையுடன் உருவாக்கப்பட்டது தான் இந்த இணையதளம். இந்த
இணையதளத்தில் சென்று நாம் விரும்பும் ஆல்பத்தின் பேரை
கொடுத்து தேடலாம் உடனடியாக நமக்கு தேடி முடிவுகளை
கொடுக்கிறது அதுவும் சில நிமிடங்களில், இந்த இணையதளத்தில்
எந்த விளம்பரமும் இல்லை. ஆர்ட் ஆல்பம் என்றவுடன் இதில்
எல்லாமே ஆங்கில ஆல்பம் தான் என்று நினைக்க வேண்டாம் இந்த
இணையதளத்தில் சென்று Tamil என்று தேடினோம் நம் இசைஞானி
இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என்று ஒரு பெரிய பட்டியலே
கொடுத்த்து. நாம் இதில் இருக்கும் ஆர்ட் ஆல்பத்தை பேஸ்புக்-ல்
இருக்கும் நம் நண்பருடனும் எளிதாக பகிர்ந்து கொள்ளலாம்.
ஆர்ட் ஆல்பம் பற்றி அனைத்து விபரங்களையும் தேடும்
நண்பர்களுக்கு கண்டிப்பாக இந்த தளம் உதவும்.

இணையதள முகவரி :  http://www.album-art-search.com
வின்மணி இன்றைய சிந்தனை
அத்தியாவசிய உணவுப் பொருளின் விலையை
கூட்டாமல் ஆடம்பர பொருளின் விலையை கூட்டினால்
அந்த நாட்டில் வறுமை என்றுமே இருக்காது.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
PHP - Functions and Filters
<?php
$int = 567;
if(!filter_var($int, FILTER_VALIDATE_INT))
{ echo("Integer is not valid"); }
else {
echo("Integer is valid");}
?>

இன்று மார்ச் 22 
உலக நீர் நாள்
ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்தின்
படி ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள்
உலகெங்கும் உலகநீர்நாள் கொண்டாடப்படுகிறது.
நோயற்ற வாழ்விற்கு நீர் எவ்வளவு முக்கியம்
என்பதை உணர்ந்து அனைத்து நாடுகளும் இந்த
நாளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad