கூகுள் பஸ் -ல் வாயால் பேசி தகவல் அனுப்பும் விநோதம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, March 21, 2010

கூகுள் பஸ் -ல் வாயால் பேசி தகவல் அனுப்பும் விநோதம்

கூகுளின் அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சி தான் நாம்
இன்று நாம் பயன்படுத்தும் கூகுள் பஸ், இனி இந்த கூகுள்
பஸ்-ல் தகவல்களை அனுப்ப நாம் தட்டச்சு (டைப்)செய்ய
வேண்டாம். நாம் வாயால் பேசி கூகுள் பஸ்-ல் செய்தி
அனுப்பலாம் இதைப்பற்றி தான் இந்த பதிவு.



சமீபத்தில் தான் கூகுள் வாய்ஸ் தேடுதல் சோதனை ஒட்டம்
வெற்றிகரமாக செட்யல்பட்டது அடுத்து உடனடியாக கூகுள்
பஸ்-ல் தகவலை போஸ்ட் செய்யவும் நாம் வாயல் கூறினால்
அது செய்தியாக மாற்றம் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது
எப்படி கூகுள் பஸ்-ல் தகவல் பேசி அனுப்பப்படுகிறது என்று
பார்ப்போம்.

post  buzz  [ அனுப்ப வேண்டிய செய்தி ]

போஸ்ட் பஸ் என்று கூறி நாம் பகிர்ந்துகொள்ள வேண்டிய
தகவலை சொல்லலாம். இதன் சோதனை வெற்றி பெற்றதும்
உடனடியாக இதை கூகுளின் நெக்சஸ் போனில் சேர்த்துவிட்டனர்.
விரைவில் இந்த சேவை நம் ஜீமெயில் மூலம் தற்போது பயன்படுத்தி
வரும் கூகுள் பஸ்-லும் பயன்படுத்தலாம். இனி கூகுள் பஸ்-ல்
செய்தி கையால் மட்டுமல்ல வாயால் பேசியும் அனுப்பலாம்.
வின்மணி இன்றைய சிந்தனை
உண்மையான வழக்கறிஞர் பணத்தை விட
நியாயத்துக்காக வாதாடினால் கண்டிப்பாக
அவர் அந்த நாட்டின் தூண்.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
PHP Zip File Functions
zip_entry_open() Opens an entry in the ZIP file
 for reading

zip_entry_read() Reads from an open entry in
the ZIP file

zip_open()     Opens a ZIP file
zip_read()     Reads the next entry in a ZIP file

இன்று மார்ச் 21 
பெயர் : ஜோசப் போரியர் ,
பிறந்த தேதி : மார்ச் 21, 1768

ஒரு புகழ்பெற்ற பிரெஞ்ச் கணிதவியலாளரும்
இயற்பியலாளரும் ஆவார்.இவர் இயற்பியலில்
வெப்பவியலில் செய்த ஆய்வுகளுக்காகவும்,
கணிதவியலில் போரியர் தொடர் என்னும்
கருத்துக்காகவும் புகழ்பெற்றவர்.

No comments:

Post a Comment

Post Top Ad