கூகுள் பஸ் தகவல்களை இனி எளிதாக தேடலாம் - கூகுள் கணக்கு தேவையில்லை - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, March 16, 2010

கூகுள் பஸ் தகவல்களை இனி எளிதாக தேடலாம் - கூகுள் கணக்கு தேவையில்லை

கூகுள் நிறுவனத்தின் அடுத்த மைல்கல்லாக வந்திருக்கும்
கூகுள் பஸ் -ன் தகவல்களை இனி எந்த கூகுள் கணக்கும்
இல்லாமல் உடனுக்குடன் பார்க்கலாம்.இதைப்பற்றி தான்
இந்த பதிவு.கூகுள் பஸ் -ல் சென்று தேட பல இணையதளங்கள்
இருந்தாலும் கூகுள் பஸ் தகவல்களை எந்த கூகுளின் மெயில்
கணக்கும் இல்லாமல் சில நொடிகளிலே தேடிமுடிவுகளை
பார்க்கலாம்.முடிவும் தற்போது பஸ் செய்யப்பட்டிருக்கும்
தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது.
செய்தி சேகரிப்பாளர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை இனி
நாமும் உடனடியாக தேடி பார்க்காலம். இந்த இணையதளத்திற்கு
சென்று நாம் எந்த தகவல் வேண்டுமோ அந்த வார்த்தையை
கொடுத்து தேடலாம்.
இணையதள முகவரி : http://buzzzy.com

[caption id="attachment_1273" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

இணையதளத்தின் முகப்பு பக்கம் பார்ப்பதற்கு கூகுள் போலவே
எளிமையாகவே உள்ளது.மற்ற இணையதளங்களை விட இந்த
இணையதளத்தில் என்ன சிறப்பம்சம் என்கிறீர்களா இந்த தளத்தில்
நாம் தமிழ் மொழியில் கூட தேடலாம். உதாரணமாக நாம் வின்மணி
என்ற வார்த்தையை கொடுத்து தேடியுள்ளோம். தேடுதல் முடிவுகள்
படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது. சரியாக கடந்த சில நாட்களில் நாம்
தேடிய வார்த்தையை அதிகமான பேர் பஸ் செய்து இருந்தால் அந்த
தகவல்களை உடனடியாக நமக்கு எடுத்துக்கொடுக்கும்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் 
PHP - Check the date
General Form

checkdate ($intMonth,$date, $intYear);
Eg:
1. checkdate (3, 16,2010);
Output: (1 means true)
2. checkdate (2, 16,2010);
Output: (null means false)

இன்று மார்ச் 16 
பெயர் : இரா. திருமுருகன் ,
பிறந்த தேதி : மார்ச் 16, 1929

முனைவர் இரா. திருமுருகன் இருபதாம்
நூற்றாண்டில் தோன்றிய தமிழறிஞர்களில்
குறிப்பிடத்தக்கவர். இயற்றமிழும் இசைத்தமிழும்
வல்ல அறிஞர். குழல் இசைப்பதிலும்,
வாய்ப்பாட்டிலும் தேர்ந்தவர்.புதுச்சேரி அரசுப்பள்ளியில்
பல காலம் ஆசிரியராக இருந்து தமிழ்ப்பணியாற்றியவர்.
சிந்துப்பாவியல் என்ற புதிய இலக்கணம் உருவாக்கியவர்.
உங்கள் தமிழ் பணிக்கு என்றும் நன்றி.

2 comments:

 1. Arivumani, GermanyMarch 21, 2010 at 2:45 AM

  please give us further information about Dr.ra.Thirumurugan

  ReplyDelete
 2. திருமுருகனார் புதுச்சேரி மாநிலத்தில் கூனிச்சம்பட்டு என்னும் ஊரில் அ. அரசு, இரா.அரங்கநாயகி ஆகியோருக்குப் பிறந்தார். இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும். தனித்தமிழ் ஆர்வம் காரணமாக தம் பெயரைத் திருமுருகன் என மாற்றிக்கொண்டார்.

  இவர் பண்டிதம் (1951), கருநாடக இசை - குழல் மேனிலை (1958), பிரெஞ்சு மொழிப்பட்டயம் (1973), கலைமுதுவர், கல்வியியல் முதுவர், மொழியியல் சான்றிதழ் (1983), முனைவர் (1990) உள்ளிட்ட பல பட்டங்கள் சான்றுகளைப் பெற்றவர். 44 ஆண்டுகள் அரசுப்பணியாற்றி பின்னர் தமிழ் வளர்ச்சி சிறகத்தின் தனி அலுவலர் பணிபுரிந்து புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சிக்கு வேண்டிய ஆக்கப்பணிகளில் ஈடுப்பட்டார்.

  தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக்குழு என்னும் அமைப்பின் சிறப்புத் தலைவராகவும், புதுவைத் தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளையின் நிறுவுனராகவும், "தெளிதமிழ்" என்னும் திங்கள் ஏட்டின் சிறப்பு ஆசிரியராகவும், "தமிழ்க்காவல்" என்னும் இணைய இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

  ReplyDelete

Post Top Ad