இணையதளத்தை கணினி கொள்ளையர்கள் பதம் பார்த்துள்ளனர்.
கணினி மென்பொருள் உருவாக்கும் நிறுவனம், பல இலட்சம்
பணியாளர்கள் பல நாடுகளில் பல கிளைகள் என்று மென்பொருள்
துறையில் கொடிகட்ட பறந்து கொண்டிருக்கும் இந்த நிறுவனதின்
இணையதளத்தை முழுவதுமாக முடக்கி கணினி கொள்ளையர்கள்
” இந்த இணையதளம் விற்பனைக்கு உள்ளது ” என்ற தகவலை
அவர்களின் முகப்பு பக்கத்தில் இட்டுள்ளனர். கூடவே தொடர்புகொள்ள
ஒரு இமெயில் முகவரியும் கொடுத்துள்ளனர். சில நாட்களுக்கு முன்
இந்த நிறுவனத்தின் இணையதளத்தை திறந்தவர்கள் அதிர்ச்சியில்
உறைந்துள்ளனர். ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தின்
இணையதளத்தை இப்படி செய்துவிட்டனரே என்று அதுவும் இவர்கள்
இணையதளபாதுகாப்பில் அதிக முக்கியத்துவம் செலுத்தும்
நிறுவனமும் கூட.
மென்பொருள் நிறுவனத்தின் அடிப்படை தகுதிகளில் ஒன்று பாதுகாப்பு
என்றால் நம் இணையதளத்தில் நடக்கும் தவறையே நாம் சரியாக
பாதுகாத்துக்கொள்ளவிட்டால் மென்பொருளில் மட்டும் உங்களால் எந்த
அளவுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏற்கனவே இரணியன் சைபர் ஆர்மி என்ற கொள்ளைக்கூட்டம் டிவிட்டர்
இணையதளத்தை இரண்டு முறை தங்கள் கைவரிசையை காட்டி
விட்டனர் இதே போல் தான் இந்த நிறுவனத்தின் இணையதளத்தையும்
தாக்கியுள்ளனர். இதுபற்றி அறிய நம் பழைய பதிவை பார்க்கவும்.
http://winmani.wordpress.com/2010/01/02/twitterattack/
டிவிட்டர் இணையதளத்தை விட ஒரு மென்பொருள் உருவாக்கும்
இந்த நிறுவனத்தின் இணையதளத்தை கணினி கொள்ளையர்கள்
DNS Hijack முறையில் படாதபாடு படுத்திவிட்டனர்.எந்த நிறுவனம்
என்று உங்களால் யூகிக்க முடிகிறதா ? சற்று அதிர்ச்சியாகத்தான்
இருக்கிறது. இணையதளபாதுகாப்பில் குறையாக உள்ள அந்த நிறுவனம்
எது என்பதையும் இதே போல் பிரச்சினையிலிருந்து தடுக்க
வழிமுறைகள் என்ன என்பதையும் விரைவில் வரும் நம் பதிவுகளில்
விரிவாக பார்க்கலாம்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
PHP - Current Date Get
Genaral Form
date('format options');
Eg:
date('y m d');
Output: 10 04 15
date('Y M D');
Output: 2010 Mar Mon
date('Y m d h: s: m');
Output: 2010 04 15 02: 18: 04 (Date and Time)
இன்று மார்ச் 15
பெயர் : ஜேம்ஸ் சில்வெஸ்டர்
மறைந்த தேதி : மார்ச் 15, 1897
19ம் நூற்றாண்டின் சிறந்த கணிதவியலர்களில்
ஒருவர்.கெய்லியுடன் கூட்டாகக் கணித ஆய்வுகள்
செய்தவர்.கெய்லியைப்போல் கணிதத் துறையில்
பல பிரிவுகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர்.
பேராசிரியர், நல்ல மனிதர்.
DNS Hijack பத்தி கொஞம் விரிவா சொல்லுங்களேன் என்னை போன்றவர்கள் தெரிந்துகொள்ள உதவியாய் இருக்கும்
ReplyDeleteவாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
கண்டிப்பாக விரைவில்....
ReplyDeleteசார் தயவு செய்து எங்க நிறுவனத்தின் பெயரை
ReplyDeleteசொல்லிடாதிங்க... ஊர்ல இருக்கிற கொஞ்ச
மரியாதையும் போயிடும்.
ஆவலாக இருக்கிறோம் , சீக்கிரம் சொல்லுங்க நண்பரே.
ReplyDelete- முத்துகிருஷ்ணன்
மலேசியா
நானும் இந்த நிறுவனத்தில் தான் பணிபுரிகிறேன். ஏற்கனவே ஒருமுறை இது இரண்டாவது முறை.
ReplyDeleteநம்ம சொல்றதை யாரு கேட்கிறாங்க.
ஐயா ,
ReplyDeleteஎங்கள் நிறுவனத்தில் காலையில் இருந்தே இதே பேச்சு தான்.
எங்கள் மேலதிகாரியும் உங்கள் இணையதளத்தை காலையில்
இருந்தே கண்சிமிட்டாமல் பார்த்துகொண்டிருக்கிறார்.
ரசிக் அப்துல்லா.
துபாய்
very interesting.....
ReplyDeleteDNS Hijack பத்தி கொஞம் விரிவா சொல்லுங்களேன் என்னை போன்றவர்கள் தெரிந்துகொள்ள உதவியாய் இருக்கும்
ReplyDelete