நம்மிடம் உள்ள குறைகளை கண்டுபிடிக்க பயனுள்ள இணையதளம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, March 1, 2010

நம்மிடம் உள்ள குறைகளை கண்டுபிடிக்க பயனுள்ள இணையதளம்.

சிலருக்கு மட்டும் எங்கு சென்றாலும் தனி மரியாதை இருக்கும்
எப்படி இவர்களால் மட்டும் இப்படி முடிகிறது அவர்களும் நம்மைப்
போல் தான் ஆனாலும் அவர்களுக்கு எப்படி அனைவரிடமும் மரியாதை
யாரிடம் எப்படி பேச வேண்டும் என்ற தந்திரம் தெரிகிறது நமக்கு
இதை யாராவது சொல்லிக்கொடுப்பார்களா என்று எண்ணும் நமக்கு
யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எப்படி பேச வேண்டும்
என்று சொல்வதற்காக ஒரு இணையதளம் வந்துள்ளது அதைப்பற்றி
தான் இந்த பதிவு.



என்னைவிட படிப்பு குறைவாகத்தான் இருக்கிறான் ஆனாலும்
அவர்களின் பேச்சுத்திறமைக்கு தான் சபையில் மரியாதை
கிடைக்கிறது இந்த கேள்வியில் இருந்து உங்களுக்கு எழும்
அத்தனை கேள்விகளையும் இந்த இணையதளத்தில் பதியலாம்
உடனுக்குடன் பதில் கொடுக்கிறார்கள். பேசும் போது கண்ணைப்
பார்த்து பேசவேண்டுமா ?, வேலை செய்கிற அலுவலகத்தில்
எப்படி நடந்துகொள்ள வேண்டும் உங்கள் வளர்ச்சிக்கு தடையாக
இருக்கும் அத்தனை கேள்விகளையும் இங்கு நாம் கேட்கலாம்.

இணையதள முகவரி : http://failin.gs

இந்த இணையதளத்திற்கு சென்று  நாம் இரு இலவச கணக்கை
உருவாக்கிகொள்ளவும் அல்லது உங்கள் டிவிட்டர் கணக்கைப்
பயன்படுத்தியும் உள்ளே செல்லாம்.உங்கள் கேள்விக்கு யார்
வேண்டுமானாலும் பதில் கூறலாம் அதுபோல் நீங்களும் யார்
கேள்விக்கு வேண்டுமானாலும் பதில் சொல்லலாம். பிரண்ட்ஸ்
குரூப் உருவாக்கி கொள்ளலாம். உங்கள் எண்ணங்களுக்கு
மக்களிடத்தில் இருந்து என்ன பதில் வருகிறது பெரும்பாண்மையான
கருத்துக்கள் எவை இதிலிருந்து நாம் நம்மை எப்படி மேம்படுத்திக்
கொள்ளலாம் என அனைவருக்கும் உதவுவதற்காகவே இந்த
இணையதளம் வந்துள்ளது.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் 
ஜாவாவில் பயன்படுத்தும் Exception
ClassCastException   Thrown when there is an invalid
cast.


IllegalArgument
      Thrown when an inappropriate
Exception            argument is passed to a method

IllegalMonitorState  Illegal monitor operations such
Exception            as waiting on an unlocked thread

இன்று மார்ச் 1 
பெயர் : எம்.கே.தியாகராஜ பாகவதர் ,
பிறந்த தேதி : மார்ச் 1, 1910

தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர
அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகன்
மற்றும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ்
பாடகரும் ஆவார். இவர் சுமார் 15 தமிழ்த்
திரைப்படங்களில் நடத்துள்ளார். அதில் 6 படங்கள் மிகப்பெரிய
வெற்றப்படங்களாகும். 1944 இல் வெளியிடப்பட்ட இவரின்
சாதனைப் படமான அரிதாஸ் (ஹரிதாஸ்) 3 வருடம் ஒரே
திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3
தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற
சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது.

4 comments:

  1. நான் உங்கள் வலைப்பதிவை சில நாட்களாக படித்துவருகிறேன். மிகவும் பயனுள்ள இடுகைகளை எழுதிவருகிறீர்கள். மேலும் எழுத வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மிகவும் சுவாரஸ்யமாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது.

    -
    DREAMER

    ReplyDelete
  3. office,la & relations,ta epadi pesina impress pannalam.

    ReplyDelete

Post Top Ad