உங்கள் புகைப்படத்தை சில நிமிடங்களில் 3D-யாக மாற்றலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, February 28, 2010

உங்கள் புகைப்படத்தை சில நிமிடங்களில் 3D-யாக மாற்றலாம்.

உங்கள் புகைப்படம் அல்லது உங்கள் நிறுவன பொருளின்
புகைப்படத்தை 3D உருவாக்க உங்களுக்கு விருப்பமா உங்களுக்கு
உதவுவதற்கென்றே ஒரு இணையதளம் வந்துள்ளது இதைப்பற்றி
தான் இந்த பதிவு.

[caption id="attachment_1096" align="aligncenter" width="401" caption="படம் 1"][/caption]இணையதளத்தில் அதுவும் சில நிமிடங்களில் எந்த மென்பொருள்
துணையும் இல்லாமல் நாமாகவே 3D -ல் உங்கள் புகைப்படத்தை
உருவாக்கலாம். இதற்கென்று உள்ள இந்ததளம் தான் உங்கள்
புகைப்படத்தை 3D -யாக மாற்றி கொடுக்கிறது.

இணையதளமுகவ்ரி : http://3d-pack.com

இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் புகைப்படத்தை
படம் 1-ல் காட்டியபடி அப்லோட் செய்யவும்.அடுத்து உங்களுக்கு
வேண்டுமென்றால் முன்பக்கம்,பின்பக்கம் என புகைப்படத்தை
தேர்ந்தெடுக்கவும். ஒரு புகைப்படம் கூட வைத்துக்கொள்ளலாம்
நாம் நம் சங்கத்தலைவர் பில்கேட்ஸ்-ன் புகைப்படத்தை
வைத்துள்ளோம். படங்களை தேர்ந்தெடுத்து முடித்த பின்
“ Create 3d-box" என்ற பட்டனை அழுத்தவும்.சில
நிமிடங்களில் நாம் கொடுத்த படம் 3D- யாக மாறிவிடும்
இனி நீங்கள் படத்தில் மேல் உங்கள் மவுஸ்-ஐ வைத்து
எந்த பக்கத்திற்கு வேண்டுமானாலும் திருப்பிக்கொள்ளலாம்.
எல்லாம் சரியாக வைத்தவுடன் உங்கள் புகைப்படத்த "jpg,png,
gif என எந்த பார்மெட்டில் வேண்டுமானாலும் உங்கள்
கணினியில் சேமித்துகொள்ளலாம்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
JAVA
Method    Description

init() Invoked by the browser or the
applet viewer to inform that the
applet has been loaded

start() Invoked by the browser or the
applet viewer to inform that
applet execution has started

stop() Invoked by the browser or the
applet viewer to inform that
applet execution has stopped

இன்று பிப்ரவரி 28 
பெயர் : இராசேந்திர பிரசாத் ,
மறைந்த தேதி : பிப்ரவரி 28, 1963

டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் இந்தியாவின்
முதல் குடியரசுத் தலைவரும் இந்திய
விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர்.
1950  முதல் 1962  வரை இந்திய குடியரசுத்
தலைவராக இருந்தார். நல்ல மனிதர், என்றும்
நம் தேசம் உங்களை மறவாது.

4 comments:

 1. யூர்கன் க்ருகியர்March 1, 2010 at 12:01 AM

  thank u !

  ReplyDelete
 2. தாங்கள் இந்த பதிவிற்க்கு இன்னும் சரியான தலைப்பை வைத்திருக்கலாம். மற்றபடி தாங்கள் அளித்த link -க்கு நன்றி.

  ReplyDelete
 3. அட!

  பயனுள்ள தகவல் நண்பரே..

  ReplyDelete
 4. Thank you,how to use in mobile?

  ReplyDelete

Post Top Ad