உங்கள் இணையதளத்திற்கு இணையான சங்கீதம் ஆன்லைன் -ல் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, February 27, 2010

உங்கள் இணையதளத்திற்கு இணையான சங்கீதம் ஆன்லைன் -ல்

இசைஞானி இளையராஜாவிலிருந்து அனைத்து இசைக்கலைஞர்களும்
நம்மை இசையால் சந்தோசப்படுத்துகின்றனர் அந்த வகையில்
இப்போது நம் இணையதளத்தை இசையாக மாற்றி கேட்கலாம்
இதற்காகவே இரு இணையதளம்  வந்துள்ளது இதைப்பற்றி
தான் இந்த பதிவு.



நம் இணையதளத்திற்கு என்று சொந்தமாக ஒரு பாட்டு வைத்து
நம் இணையதள ரசிகர்கள் எங்கு சென்றாலும் இந்த பாட்டை
போட்டு சேர்ந்துகொள்ளலாம் என்று தான் இந்த தளத்தை
உருவாக்கி இருப்பார்கள் போல் ஆம் இந்த இணையதளத்திற்கு
சென்று நம் இணையதள முகவரியை கொடுத்தால் அதை
அழகான இசையாக மாற்றி ஆன்லைன்-ல் கேட்கலாம்.

இணையதளமுகவரி : http://www.codeorgan.com

இந்த இணையதளத்திறகு சென்று நம் இணையதள முகவ்ரியை
கொடுக்க வேண்டியது தான் அடுத்து "Play this website"
என்ற பட்டனை அழுத்தவும் இப்போது உங்கள் இணையதளதிற்கு
இணையான இசை சில நிமிடங்களிலே தயாராகிவிடும்.இந்த
இசையை நம் டிவிட்டர், பேஸ்புக்-ல் இருக்கும் நண்பருடனும்
பகிர்ந்து கொள்ளலாம்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
ஜாவாவில் (java.io.InputStream class) உள்ள சில மெத்தட்
available() Returns the number of bytes that can be
read

close()     Closes the input stream and releases
associated system resources

mark()      Marks the current position in the input
stream

இன்று பிப்ரவரி 27 
பெயர் : சுஜாதா ,
மறைந்த தேதி : பிப்ரவரி 27, 2008
தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில்
ஒருவராவார்.இயற்பெயர் ரங்கராஜன்.தனது
தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர்
பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.சிறுகதைகள்,
நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள்,
கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி
நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்

2 comments:

Post Top Ad