மொபைல் நம்பரில் அதிரடி இனி பத்திலிருந்து பதினொன்று. - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Thursday, January 7, 2010

மொபைல் நம்பரில் அதிரடி இனி பத்திலிருந்து பதினொன்று.

மொபைல் போன் நம்பரில் கூடுதலாக இனி ஒரு இலக்கம்
சேர்ப்பது பற்றி இந்திய டெலிகாம் துறை பரிசீலித்து வருகிறது.
பத்து இலக்க மொபைல் நம்பர் முன் ஒரு 9-ம் எண்ணை சேர்த்தால்
பல குழப்பங்கள் வரலாம் என்று முடிவெடுத்து இப்போது நம்
மொபைல் நம்பர் முன் 7 அல்லது 8 என்ற இரண்டு எண்களில்
ஏதாவது ஒன்றை சேர்ப்பது பற்றிய பரிசீலனை நடந்து வருகிறது
இந்தியாவில் உள்ள மொபைல் ஆப்ரேட்டிங் அசோசிசனில் கேட்ட
பின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

வரும் ஆண்டுகளில் மொபைல் நம்பரின் எண்ணிக்கை 2000
மில்லியனை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நம் பத்து
இலக்க மொபைல் நம்பரின் முகப்பில் கூடுதலாக ஒரு இலக்கம்
அது 7-ஆ அல்லது 8 -ஆ என்று விரைவில் தெரிந்து விடும்.
முதலில் வோடா போன் நிறுவனம் தன் போன் நம்பரை 8051
என்று தொடங்கும் எண்ணை பீகாரில் தொடங்கஉள்ளது.
விரைவில் ரிலையன்ஸ் நிறுவனமும்  தன் நம்பரை 8055 என்று
மகாராஷ்டிரா மற்றும் கோவா-வில் செயல்படுத்த இருக்கிறது.

2 comments:

  1. நல்ல தகவல் நண்பரே! தொடரட்டும் உங்கள் பணி.
    வாழ்த்துக்களுடன்

    ஜிஆர்ஜி
    புதுவை.

    ReplyDelete
  2. இப்புடியே நம்பர் போயிட்டு இருந்தா எப்புடி

    ReplyDelete

Post Top Ad