டிவிட்டரை பதம் பார்த்த கம்ப்யூட்டர் கொள்ளையர்கள் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, January 2, 2010

டிவிட்டரை பதம் பார்த்த கம்ப்யூட்டர் கொள்ளையர்கள்டிவிட்டரை பற்றி நாம் சொல்ல ஒன்றும் இல்லை இதன் பெருமை
அனைவருக்கும் தெரிந்ததே உடனுக்குடன் தகவல் பரிமாற்றத்தில்
தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்து இருந்தது. வந்த வேகத்தில்
டிவிட்டர் இல்லாமல் ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு
உயர்ந்தது. இந்த டிவிட்டரை கூகுள் விரைவில் வாங்கினாலும் வாங்கும்
என்று கருத்துக்கள் வெளிவந்த்தாலும் இதைப் பற்றி கூகுள் பெரிதாக
எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. ஏனென்று யோசித்தால் இப்போது
தான் தெரிகிறது டிவிட்டரின் செக்யூரிட்டி கொஞ்சம் குறைவாகத்தான்
இருக்கிறது போலும். இரண்டு மாதத்திற்கு முன் தான் ஒரு செக்யூரிட்டி
பிரச்சினையில் சிக்கி வெளிவந்தது நமக்கு தெரிந்தது தான் ( படம் 1 ).

[caption id="attachment_439" align="aligncenter" width="400" caption="படம் 1"][/caption]

இப்போது அதைவிட கொஞ்சம் அதிகமாகத்தான் பாதிக்கப்பட்டுள்ளது.
” இரணியன் சைபர் ஆர்மி ” என்று ஒரு கொள்ளை கூட்டம் சில
நாட்களுக்கு முன் டிவிட்டரை பதம் பார்த்தது ( படம் 2 -ல்
காட்டப்பட்டுள்ளது ).

[caption id="attachment_440" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]

அனைத்தும் அவர்கள் கையில் டிவிட்டரால் ஒன்றும் செய்ய முடியாமல்
தவித்தது. கூகுலில் சென்று " Twitter"  என்று தேடியவர்களுக்கு அதிர்ச்சி
தான் படம் 3 -ல் காட்டப்பட்டுள்ளது.

[caption id="attachment_441" align="aligncenter" width="450" caption="படம் 3"][/caption]

டிவிட்டருக்கே இந்த நிலமை என்றால் அதில் கணக்கு வைத்திருக்கும்
நமக்கு என்று டிவிட்டரில் இருந்த பல பெரிய தலைகள் சொல்லாமல்
வெளியே சென்றது. இந்த நேரத்தை கூகுள் தனக்கு சாதகமாக கொண்டு
டிவிட்டருக்கு இணையான ஒன்றை உருவாக்குவதில் அதிவேகமாக
ஈடுபட்டுள்ளது.  பாதுகாப்பு இல்லாத வீட்டில் குடியிருக்க யார் தான்
விரும்புவார்கள் டிவிட்டர் வந்த வேகத்தில் சென்றாலும் ஆச்சரியப்
படுவதற்கு ஒன்றும் இல்லை. இதைப் பற்றிய வீடியோ ஒன்றையும்
இத்துடன் இணைத்துள்ளோம்.


இந்த செய்தி வந்தவுடன் அனைத்து முன்னனி நிறுவனங்களும்
இணையதள செக்யூரிட்டிக்கு என்று பல பேரை நியமித்துள்ளது.
2010 கம்யூட்டர் இணையதள செக்யூரிட்டிக்கு தான் அதிக வேலை
வாய்ப்பு இருக்கும் என்பது பல முன்னனி நிறுவனங்களின் கணிப்பு.

2 comments:

  1. ஏற்கனேவே ஒரு முறை இது இரண்டாவது முறை , வீட்டை மாற்றினால் நோய் எப்படி
    தீரும். DNS குழந்தை கூட மாற்றும். இது பிரச்சினைக்கு தீர்வல்ல என்று
    நண்பருக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete

Post Top Ad