கூகுளின் முப்பரிமான(3D) மென்பொருள் இலவசம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Thursday, December 17, 2009

கூகுளின் முப்பரிமான(3D) மென்பொருள் இலவசம்

மெக்கானிக் வல்லுனர்களுக்கும் சிவில் மற்றும் கம்யூட்டர்

பொறியாளர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம். கூகுள் காலடி

எடுத்து வைத்த துறைகளில் எல்லாம் வெற்றி தான் கூகுளுக்கு

போட்டி என்று ஒன்று இருக்கவே இருக்காது இது தான் அதன் சிறப்பு.


நம் கூகுள் இப்போது புதிதாக முப்பரிமான(3D) துறையில் கால்

வைத்துள்ளது. வீடு வடிவமைப்பாளரில் இருந்து கார் வடிவமைப்பாளர்

வரை நாம் கட்டும் வீட்டை நம் விருப்பபடி வடிவமைக்கலாம். எந்த

படிப்பும் தேவையில்லை, வீட்டு தோட்டத்திலிருந்து கம்யூட்டர்

கிராபிக்ஸ் வரை அனைத்தும் உருவாக்கலாம். இலவசமாக இதற்காக

கூகுள் தரும் மென்பொருள் " கூகுள் ஸ்கெட்சப் "  அதிக அளவு பணம்

கொடுத்து இந்த சாப்ட்வேரை படிக்க தேவையில்லை. பயிற்ச்சியையும்

நாங்களே இலவசமாக கொடுக்கிறோம் என்கிறது.

மைக்ரோசாப்ட்-யே திக்குமுக்காட வைத்தது இனி 3D துறையில் தனக்கு

நிகராக எந்த மென்பொருளும் இல்லாமல் செய்துவிடும் என்பதில் எந்த

சந்தேகமும் இல்லை.இந்த " கூகுள் ஸ்கெட்சப் " மென்பொருளை

தரவிரக்க இந்த முகவரியை சொடுக்கவும்.


இதைப் பற்றிய ஒரு வீடியோ







கூகுள் ஸ்கெட்சப் அனைத்து பயிற்ச்சியையும் வீடியோவில்

இலவசமாக பெற இங்கே சொடுக்கவும்


மெக்கானிக் துறையில் வேலை இல்லாத நம் நண்பர்களுக்கு
இதைப்பற்றி தெரியப்படுத்துங்கள். உடனே பயிற்ச்சி பெறுங்கள்.
கூகுள் என்றாலேஅதிவேகவளர்ச்சி தான் நாளை வேலை
உங்களை தேடியும் வரலாம்.

5 comments:

  1. மிகச்சிறந்த தகவல். கலக்குறீங்க நாகமணி!
    ஒவ்வொரு நாளும் முத்து முத்தான தகவல்கள். வாழ்க உங்கள் சேவை.வளர்க உங்கள் ஆக்கங்கள்!
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி

    ReplyDelete
  2. நானும் அவ்வப்போது உபயோகப்படுத்தி பார்த்திருக்கேன்.நன்றாக இருக்கும்.இப்போது உள்ள ஒரு வீட்டில் ஏதாவது மாறுதல் செய்யனும் என்றால் இதில் வரைந்து பார்த்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  3. Good information. Thanks for sharing.

    ReplyDelete
  4. Thankyou for your useful information..Bala...USK.

    ReplyDelete

Post Top Ad