மேலதிகாரிகளின் பார்வையில் இருந்தும் கடும் சொல்லில் இருந்தும் உங்களை காப்பாற்ற ஒரு மென்பொருள். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, December 16, 2009

மேலதிகாரிகளின் பார்வையில் இருந்தும் கடும் சொல்லில் இருந்தும் உங்களை காப்பாற்ற ஒரு மென்பொருள்.

அலுவலகத்தில் நாம் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருப்போம் சில

நேரங்களில் நமக்கு எரிச்சலாக இருக்கும் சரி மூளையை கொஞ்சம்

ரெஃப்ரஸ்( Refresh ) பண்ணலாமே என்று ( youtube ) யூடியுப் பார்ப்போம்

அந்த நேரத்தில் தான் நம் மேலதிகாரி வருவார் இவ்வளவு நேரமா

என்ன பண்னிகிட்டுஇருந்திங்க என்று கூச்சலிடுவார்.ஆபிஸ்-ல

நமக்கு இருந்த கொஞ்ச மானத்தையும் கேட்டு வாங்குவார்.

இனி உங்களுக்கு அந்த பிரச்சினை இல்லை பயமும் இல்லை

எப்படி என்று பார்ப்போம்.இந்த இணையதளத்திற்கு சென்று " Desktops " என்ற மென்பொருளை

தரவிரக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.


டாஸ்க்பாரின் வலது பக்கத்தில் படம் 1 -ல் இருப்பது போல்

ஐகான் ஒன்று வந்து விடும்.அதை ரைட் கிளிக் செய்து "Option"

என்பதை தேர்வு செய்யவும் படம்-2 ல் இருப்பது போல் உங்களுக்கு

பிடித்த கீயை கான்பிகர் செய்து கொள்ளவும்.


( "Alt " அல்லது “Ctrl" அல்லது "Shift"" அல்லது " Windows " )

அடுத்து உங்களுக்கு தேவையான புரோகிராம் விண்டோவை ஒபன்

செய்து வைத்துக்கொண்டு மறுபடியும் ஐகானை ரைட் க்ளிக் செய்து

"Select Desktop " என்பதை தேர்வு செய்யவும்.


படம் -3 ல் காட்டியபடி தோன்றும்.

இப்போது "Press to Create desktop 1 or 2 or 3 or 4 " என்பதை க்ளிக்

செய்யவும். இதே போல் ஒவ்வொரு கீயையும் கான்பிகர் செய்து

கொள்ளவும். இப்போது உதாரணமாக Alt கீயை தேர்வுசெய்திருந்தால்

"Alt + 1 " என்றால் 1 ஆவது முதலாவதாக நாம் தேர்வு செய்த

Screen  Desktop தெரியும். " Alt + 2 " என்றால் 2 ஆவதாக நாம்

தேர்வு செய்த Screen  Desktop தெரியும். இதே போல் மற்ற கீ-களுக்கும்

வைத்துக்கொள்ளலாம். மேலதிகாரிகளின் பார்வையில்இருந்து

உங்களை கண்டிப்பாக காப்பாற்றும்.

6 comments:

 1. அற்புதம், மிகவும் பயனுள்ள மென்பொருள். நன்றி

  ReplyDelete
 2. வழக்கம் போல மீண்டும் ஒரு மிகவும் பயனுள்ள மென்பொருள் (பதிவு).நன்றி அய்யா.

  ReplyDelete
 3. அருமையான பதிவு. ஆனால் டாஸ்க்பார் tray icon இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் (அதற்கு எதாவது வழி இருக்கிறதா?) - வெறும் shift அல்லது control F1, F2... போன்றவைகளை மட்டும் உபயோகித்து இதனை செயல்படுத்த வழி உள்ளதா?

  ReplyDelete
 4. இல்லை நண்பா...

  ReplyDelete
 5. நன்றி நண்பா .. எதிகாலத்தில் அப்படி கண்டுபிடிக்கப்பட்டால் மறக்காமல் பதிவு போடவும்.

  ReplyDelete
 6. முத்து செந்தில் குமார்December 23, 2009 at 8:36 PM

  இதே போன்ற மென்பொருள் (Virtual Desktop Manager) ஒன்றை விண்டோஸ் வழங்குகிறது. கீழ்காணும் Windows XP Powertoys and Add-in link பார்க்கவும்
  http://www.microsoft.com/windowsxp/Downloads/powertoys/Xppowertoys.mspx

  ReplyDelete

Post Top Ad