Winmani: கதை எழுத நினைப்பவர்களுக்கும் கதாசிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Showing posts with label கதை எழுத நினைப்பவர்களுக்கும் கதாசிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். Show all posts
Showing posts with label கதை எழுத நினைப்பவர்களுக்கும் கதாசிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். Show all posts

Sunday, September 5, 2010

கதை எழுத நினைப்பவர்களுக்கும் கதாசிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

6:40 PM 15
கதை எழுத வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் கதாசிரியர்களுக்கும்
ஒரு வரப்பிரசாதமாக இனி ஆன்லைன் -ல் கதை எழுதலாம். பல்வேறு
விதமான படங்களையும் சேர்த்து அழகிய புத்தகம் உருவாக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


கதை எழுதவேண்டும் என்ற ஆசை நெடுங்காலமாக இருக்கிறது ஆனால்
அதற்கு நேரம் இல்லை கூடவே கதைக்கு தகுந்த மாதிரி நாம் நினைத்த
படங்கள் கிடைக்கவில்லை என்று நினைக்கும் அனைவருக்கும் எளிதாக
ஆன்லைன் மூலம் கதை எழுதலாம். எழுதிய கதையில் விரும்பிய
படங்களை சேர்த்துக்கொள்ளலாம். எழுதிய கதையை ஆன்லைன் மூலம்
நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பலாம். நமக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://storybird.com


இந்தத் தளத்திற்கு சென்று நாம் ஒரு இலவச புதிய கணக்கை உருவாக்கி
கொண்டு கதை எழுத தொடங்க வேண்டியது தான்,.விரும்பிய படங்களை
நாம் விரும்பும் பக்கத்தில் சேர்த்துக்கொள்ளலாம். நேரம் கிடைக்கும்
போது நம் கணக்கை திறந்து கொண்டு ஒவ்வொரு பக்கமாக கதையை
எழுதி கொண்டே போகலாம்.இங்கு இருக்கும் படங்களை பார்க்கும்
போது எல்லோருக்கும் கதை எழுதவேண்டும் என்ற ஆசை வரும்.
நேரம் கிடைக்கும் போது பயன்படுத்திப்பாருங்கள். இலட்சதிற்கும்
மேற்பட்ட கதைகள் இந்தத் தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன.சிங்கப்பூரில்
இருந்து தோழி வாசகி அவர்கள் தான் ஆன்லைன் மூலம் கதை எழுத
இணையதளம் இருந்தால் கூறுங்கள் என்று கேட்டிருந்தார்
அவர்களுக்காகவும் நம் அனைவருக்காகவும் கதை எழுத ஒரு அழகான
பயனுள்ள தளம்.
வின்மணி சிந்தனை
நல்ல எண்ணம், அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காத மனம்
கொண்ட எல்லா மக்களும் உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் தான்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.இத்தாலியின் கொடியை வடிவமைத்தவர் யார் ?
2.உலகில் முதல் அணுசோதனை நடத்திய நாடு எது ?
3.குதுப்மினாரின் உயரம் எவ்வளவு ?
4.உலகின் இரண்டாவது பெரிய நாடு எது ?
5.உலக அமைதிக்கான நோபல் பரிசை நிர்ணயம் செய்வது ?
6.நெருப்புக்கோழிகள் அதிகமாக உள்ள நாடு எது ?   
7.ஈபில் கோபுரத்தின் உயரம் எவ்வளவு ?
8.மிக உயரமான சாலைபாலம் எது ?
9.கேரள மாநிலம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது ?
10.முதலில் உலகப்படத்தை வரைந்தவர் யார் ?
 
பதில்கள்:
1.நெப்போலியன், 2.அமெரிக்கா, 3.240 அடிகள்,4.கனடா,
5.நார்வே பாராளுமன்றம், 6.ஆப்பிரிக்கா, 7.984 அடிகள்,
8.பெய்லி பாலம்,9.1956-ல்,10.இராடோஸ்தானிஸ்.

இன்று செப்டம்பர் 6  
பெயர் : தினமலர் நாளிதழ்
தொடங்கிய நாள் : செப்டம்பர் 6 ,1951

தினமலர் இந்தியாவின் தமிழகத்திலிருந்து
வெளிவரும் தமிழ் நாளிதழ்களில் ஒன்றாகும்.
இந்நாளிதழ் டி.வி.இராமசுப்பையர் என்பவரால்
1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் நாள்
தொடங்கப்பட்டது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Read More

Post Top Ad