பதிலீடாக (alternative) உள்ளதை தேடிக் கொடுக்கும் பயனுள்ள இணையதளம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Friday, December 24, 2010

பதிலீடாக (alternative) உள்ளதை தேடிக் கொடுக்கும் பயனுள்ள இணையதளம்.

வார்த்தைகள் முதல் மென்பொருள் வரை அனைத்திலும் பதிலீடாக
உள்ளவற்றை எளிதாக தேடிக்கொடுக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



போட்டோஷாப் மென்பொருளுக்கு பதிலாக உள்ள மென்பொருள் ஏதும்
இருக்கிறதா என்று எங்கும் சென்று தேட வேண்டாம் போட்டோஷாப்
போன்ற மென்பொருளுக்கு பதிலீடாக உள்ள மென்பொருள்
அத்தனையையும் நமக்கு தெரிவிக்கவும், ஒரு வார்த்தைக்கு பதிலீடாக
ஏதாவது வார்த்தை இருக்கிறதா என்று தேடும் அனைவருக்கும் உதவும்
வகையில் ஒருதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://dooblet.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி  "Find Alternative"
என்று கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் எதற்கு alternative
வேண்டுமோ அதை கொடுத்து dooble என்ற பொத்தானை
சொடுக்கினால் அடுத்து வரும் திரையில் பதிலீடாக உள்ள
அனைத்தும் பட்டியலிட்டு காட்டப்பட்டிருக்கும்.எந்த வீதமான
பயனாளர் கணக்கும் தேவையில்லை, பலவிதமான பொருட்கள்
முதல் மென்பொருள் வரை அனைத்துக்கும் alternative நாம் எளிதாக
தேடலாம். Alternative வார்த்தை மற்றும்  Alternative மென்பொருள்
தேடும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.



வின்மணி சிந்தனை
மனமகிழ்ச்சியுடன் அடுத்தவர் நமக்கு கொடுக்கும் பணம்
நல்ல காரியங்களுக்கு பயன்படும்.



TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.சார்புநிலை கொள்கையை வெளியீட்டவர் யார் ?
2.முதன் முதலில் தபால் தலை எங்கு வெளியீடப்பட்டது ?
3.’உயிரினங்களின் தோற்றம்’ என்ற நூலை எழுதியவர் யார் ?
4.மின்சார பல்புகளின் இருக்கும் வாயு எது ?
5.உலகின் முதல் வங்கி எந்த நாட்டில் அமைக்கப்பட்டது ?
6.ஜப்பான் நாட்டின் தேசிய மலர் எது ?
7.சாகித்திய அகாடமி எப்போது துவக்கப்பட்டது ?
8.வெள்ளை யானையின் இருப்பிடம் எது ?
9.விண்வெளியில் பயணம் செய்த முதல் பெண்மணி ?
10.முதன் முதலில் உலகஅழகிபட்டம் பெற்ற இந்தியப்பெண் யார்?
பதில்கள்:
1.ஐன்ஸ்டீன்,2.இங்கிலாந்தில்,3. டார்வின், 4.நியான்,
5.இங்கிலாந்து,6.ஜவந்தி,7.மார்ச் 1954, 8.தாய்லாந்து,
9.டிரெஷ் கோவா,10.ரீடாபரியா.



இன்று டிசம்பர் 24 
பெயர் M.G.இராமச்சந்திரன்,
மறைந்ததேதி : டிசம்பர் 24, 1987
எம்ஜிஆர் என்ற பெயரில் தமிழ்நாட்டில்
புகழ் பெற்ற மனிதர்.தமிழ்த் திரைப்பட
நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை
தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர்
பலரின் இதயங்களில் இன்றும் வாழ்பவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

3 comments:

  1. மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  2. @ எஸ்.கே
    மிக்க நன்றி

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள தேவையான websiteகளை அளித்ததற்கு மிகவும் நன்றி.

    ReplyDelete

Post Top Ad